Wednesday, August 15, 2012

குறுங்கதை - 3 : அரோகரா.!

'சாவடிக்கிறாங்கடா மாப்ள' என்றான் செல்வா, போனை அணைத்துக்கொண்டே .

ஏன்டா என்னாச்சு? - இது நான்.

'திருத்தணி இப்போ வேண்டாமாம், மொதல பழனிக்கு போக சொல்றாங்க, கடுப்பேத்தறாங்க மை லார்ட்'...

ஹாஹாஹா, சரி, நம்ம வேலை அதானே, செய்யும் தொழிலே பணம், சலிச்சுக்ககூடாது, வண்டிய விடு...

'எல்லாம் பண திமிருடா, இவனுங்களுக்காக நாம லோல்பட வேண்டியாதா இருக்கு'

அந்த திமிர் இருக்கிற வரை தான், நமக்கு சோறு, ஆக்சிலேட்டர அமுத்து கண்ணா..

மொதல மருதமலை, அப்புறம் திருத்தணி, இப்போ கடைசில பழனியாம், எல்லா முருகரும் ஒன்னு தானடா?

எல்லாமே ஜூசுமே நல்லாத்தான் இருக்கு, வயிர நிரப்புது, நீ ஏன் எப்பவுமே பைனாப்பிள் ஃப்ளேவரே குடிக்கிற?

அய்யா அரிஸ்டாட்டிலே போதும் உங்க தத்துவ மழை...முடியல...

ஹாஹாஹா, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, நான் ஓட்டுறேன், பழனி வந்தா எழுப்பி விடுறேன்...

தூரத்தில் தெரிந்தது பழனி மலை. மலை மேல் ஓம் முருகா என்ற நியான் விளக்கு போர்டு எங்களை அன்புடன் வரவேற்றது.

செல்வா, ம்ம்ம்ம் செல்வா, மொதல Solar Depthrazer வச்சு மலைய சுத்தி 200 மீட்டர் ஆழத்துக்கு, 2 மீட்டர் அகலத்துக்கு குழி வெட்டு. அப்புறம் மலைய சுத்தி 20அடிக்கு ஒரு எலக்ட்ரோ stonetic சங்கிலியை ஒட்ட வை. நாப்பது ரோபோவ விட்டு பூமியோட ஒட்டி இருக்கிற மலையோட அடிபகுதிய வெட்ட சொல்லு. ம்ம்ம், சீக்கிரம், டூ இட் ஃபாஸ்ட் மேன்' என்று சொல்லிக்கொண்டே ஒரு எலக்ட்ரானிக் சிகரெட்டை பற்றவைத்தேன்.

ரோபோவுக்களுக்கு களைப்பு தெரியாம இருக்க 'அரோகரா அரோகரானு' கூவ சொல்லட்டுமா என்று கண்ணடித்தான்.

நாற்பது நிமிடம் கரைந்தது, கொஞ்சம் லேட்தான்.

பழனி மலை எங்கள் விண்கலத்துடன் இப்போது வானத்தில் பறந்து கொண்டிருந்தது. எல்லாம் நான்காம் உலகப்போருக்கு பின் செயலிழந்த பூமியில் எஞ்சி, க்லூட்டோ கிரகத்தில் குடியமர்த்தப்பட்ட பணக்கார தமிழர்களுக்காக.

**********
டவுட்டு : அது பழனியா? பழநியா?

10 comments:

  1. வாசகன் எனும் முறையில், (பாராட்டுகளைத்தவிர்த்து) சில விமர்சனங்கள்.
    1. நடை நிகழ்காலத்தையே காட்டுகிறது
    2.பணக்கார தமிழர்கள் என்பதற்கு பதிலாக..வேறு ஏதாவது. (இடிக்கிறது!)
    3.அறிமுகத்தில், ஒரு பெண், ஒரு நிறுவனத்தின் சார்பாக, இன்ஸ்ட்ரக்‌ஷன் தருவதாக அமைக்கலாம்!
    4.பாராட்டுகளை தவிர்த்துள்ளேன்!

    ReplyDelete
  2. பழநி - மலைக்கோவில்
    பழனி - ஆண் பெயர்

    ReplyDelete
  3. To திருநாவுகரசு சார் :
    ஆமாங்க, சார் நிகழ்காலம் தான், 2100ல் நடந்தாலும் அது அன்று நிகழ்காலம் தானே? 'பணக்கார' - அது தகுதி உள்ளவையே தப்பி பிழைக்கும் என்பதற்காக, பணம் ஒரு தகுதியாகலாம். நேரம் செலவிட்டு கருத்து கூறியதற்கு அன்பான நன்றிகள்.!! ;))

    ReplyDelete
  4. நல்ல கதை.. எதிர்காலத்தை பின்னாடி காட்டியிருப்பது மிகவும் அருமை..(@K4Karthee)

    ReplyDelete
  5. குறுங்கதை நல்லாயிருக்கு. அணைந்த நியான் விளக்கு வரவேற்பதாகக் கூறினால் ஒரு க்ளூ வைத்ததுஉ போல் இருக்கும். அதே போல் இரு பழனிநியும் உபயோகத்தில் தான். @get2karthik

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. நாலாவது உலகப்போர் வரைக்கும் காத்திருக்க வேண்டாம், மூன்றாவதே போதும்

    ReplyDelete
  8. அட...சுஜாதா நம்மோடிருக்கிறார்! @Elanthenral Twitter

    ReplyDelete
  9. அ.முத்துலிங்கத்தின் ஒரு கதை புவீயிர்ப்புவிசைக்கு காசு கேட்ப்பதாக வரும், அது போலவே இருக்கிறது. வேறுகிரகத்திலிருந்து வருபவர்கள் சமகாலத் தமிழில் பேசுவது சில இடங்களில் இடிக்கிறது..ஒரு வருட பழைய கதை, இப்போது இன்னும் கொம்பு சீவி ரெடியாக இருப்பீர்கள் என் நினைக்கிறேன்.. @g_for_Guru

    ReplyDelete