Wednesday, August 15, 2012

குறுங்கதை - 3 : அரோகரா.!

'சாவடிக்கிறாங்கடா மாப்ள' என்றான் செல்வா, போனை அணைத்துக்கொண்டே .

ஏன்டா என்னாச்சு? - இது நான்.

'திருத்தணி இப்போ வேண்டாமாம், மொதல பழனிக்கு போக சொல்றாங்க, கடுப்பேத்தறாங்க மை லார்ட்'...

ஹாஹாஹா, சரி, நம்ம வேலை அதானே, செய்யும் தொழிலே பணம், சலிச்சுக்ககூடாது, வண்டிய விடு...

'எல்லாம் பண திமிருடா, இவனுங்களுக்காக நாம லோல்பட வேண்டியாதா இருக்கு'

அந்த திமிர் இருக்கிற வரை தான், நமக்கு சோறு, ஆக்சிலேட்டர அமுத்து கண்ணா..

மொதல மருதமலை, அப்புறம் திருத்தணி, இப்போ கடைசில பழனியாம், எல்லா முருகரும் ஒன்னு தானடா?

எல்லாமே ஜூசுமே நல்லாத்தான் இருக்கு, வயிர நிரப்புது, நீ ஏன் எப்பவுமே பைனாப்பிள் ஃப்ளேவரே குடிக்கிற?

அய்யா அரிஸ்டாட்டிலே போதும் உங்க தத்துவ மழை...முடியல...

ஹாஹாஹா, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, நான் ஓட்டுறேன், பழனி வந்தா எழுப்பி விடுறேன்...

தூரத்தில் தெரிந்தது பழனி மலை. மலை மேல் ஓம் முருகா என்ற நியான் விளக்கு போர்டு எங்களை அன்புடன் வரவேற்றது.

செல்வா, ம்ம்ம்ம் செல்வா, மொதல Solar Depthrazer வச்சு மலைய சுத்தி 200 மீட்டர் ஆழத்துக்கு, 2 மீட்டர் அகலத்துக்கு குழி வெட்டு. அப்புறம் மலைய சுத்தி 20அடிக்கு ஒரு எலக்ட்ரோ stonetic சங்கிலியை ஒட்ட வை. நாப்பது ரோபோவ விட்டு பூமியோட ஒட்டி இருக்கிற மலையோட அடிபகுதிய வெட்ட சொல்லு. ம்ம்ம், சீக்கிரம், டூ இட் ஃபாஸ்ட் மேன்' என்று சொல்லிக்கொண்டே ஒரு எலக்ட்ரானிக் சிகரெட்டை பற்றவைத்தேன்.

ரோபோவுக்களுக்கு களைப்பு தெரியாம இருக்க 'அரோகரா அரோகரானு' கூவ சொல்லட்டுமா என்று கண்ணடித்தான்.

நாற்பது நிமிடம் கரைந்தது, கொஞ்சம் லேட்தான்.

பழனி மலை எங்கள் விண்கலத்துடன் இப்போது வானத்தில் பறந்து கொண்டிருந்தது. எல்லாம் நான்காம் உலகப்போருக்கு பின் செயலிழந்த பூமியில் எஞ்சி, க்லூட்டோ கிரகத்தில் குடியமர்த்தப்பட்ட பணக்கார தமிழர்களுக்காக.

**********
டவுட்டு : அது பழனியா? பழநியா?

குறுங்கதை - 2

தட்.. தட்...தட்.... கதவை திறந்தேன். புல் மேக்கப்பில் நின்றுக்கொண்டிருந்தார் ஒருவர். ருக்குமணி நாடக சபா அடுத்த பில்டிங் என்றுவிட்டு கதவை மூடினேன்.

தட்..தட்...தட்... கதவை திறந்தேன். நான் கடவுள் என்றார். நானும் தான் என்றுவிட்டு கதவை மூட போனேன். என் தலைக்கு பின்னால் ஒளிவட்டம் பாரு என்றார். அட ஆமா, 33 சென்டிமீட்டர் அகலத்துக்கு ஒளிவட்டம். சாமீமீமீமீமீமீமீ என்று கையெடுத்து கும்பிட்டு, மயக்கமடைந்தேன். நைட்டே பாதி காலியாகி இருந்த வாட்டர் பாக்கெட் தண்ணிய என் மூஞ்சியில் மிக்ஸ் செய்து எழுப்பிவிட்டார் கடவுள். என்ன சாமி இந்தபக்கம் என்றேன். சென்னை சிட்டியில் தங்கி இருந்த கோவிலுக்கு வழி மறந்துடுச்சு ஹெல்ப் பண்ணுன்னார். சட்டைய போட்டு, குட்டிகுரா பவுடர் அப்பி, கடவுளுடன் கோவிலுக்கு கிளம்பினேன்.

கோவில்...
'ஏய் என்ன வேண்டுதலா? வேஷத்துல இருக்கீங்க, போ, போயி லைன்ல வாங்க' என்றார் சிறப்பு தரிசன டோக்கன் கிழிப்பவர்.

ஏம்பா, இவரு யாரு தெரியுமா? இவர் தான் சாமி என்றேன். எங்களை ஏற இறங்க பார்த்து, தெரியுது என்றுவிட்டு சிறப்பு டோக்கன் இருக்கார் என்றார்.

இல்ல.. அது எதுக்கு இவர் தான் சாமியாச்சே, டிரஸ் பாரு, நகை பாரு, பியூர் கோல்டு...

'அது இல்லாம இந்த வழியா போகமுடியாது, என்ன திட்டுவாங்க'..
யோவ் இவரு நம்மள காப்பாத்துற சாமிய்யா, வழி தவறி வந்துட்டாராம், உள்ள உடுய்யா...

'நாட்டுல பல பேரு இப்படித்தான் சொல்லிக்கிட்டு அலையுறான், வி.ஐ.பி பாஸ் இருக்கா?'...

யோவ், இவரே பெரிய வி.ஐ.பி தான், என்ன எங்கள உள்ள விடமாட்டியா?..

'அப்படியெல்லாம் அனுப்ப முடியாதுங்க, இவ்வளவு பேசறீங்க சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கலாம்ல'....

நான் யாருன்னு தெரியுமா? இந்த ஏரியா கவுன்சிலரோட கொளுந்தியாளோட சின்னம்மா பையனோட தோஸ்து...

'ஐயோ சார் மன்னிச்சுடுங்க, நீங்க போங்க, நான் சொல்லிக்கிறேன்'...

கருவறையில் இருக்கும் சிலையை காண, என் பின்னாடி நடக்க ஆரம்பித்தார் கடவுள்.

Tuesday, August 14, 2012

பரத்தைகூற்று.!


புதுமைப்பித்தன் நடந்து சென்ற அதே வீதிதான், ஜி.நாகராஜன் புழங்கிய அதே வீடுகள் தான், சாரு சந்தித்த அதே மனிதர்கள் தான், பரத்தைகூற்றும் கிட்டத்தட்ட அதையே தான் விளிக்கிறது.!!! ஆனால், சூரியனையும் நிலவையும் கூட தினம் தினம் பார்க்கிறோம், அலுத்தா போய்விடுகிறது? ஒவ்வொரு நாளும்
புதுசாகத்தானே தெரிகிறது, அதுபோல படிக்கும் போது புதிதாகவே தோன்றியது பரத்தைகூற்று.!!!


Comedy@ஜனாதிபதி.காம்.!

From: கிரதீபா பாட்டில்@ பழையஜனாதிபதி.காம்
Sent: Wednesday, July 25, 2012 2:12 PM
To: முரணாப்_முகர்ஜி@புதுஜனாதிபதி.காம்
Cc: சோ.காந்தி@டெல்லி.காம், பிரதமர்@இந்தியா.காம்
Subject: வாழ்த்துகள்

மதிப்பிற்குரிய முரணாப் ஐயாவிற்கு,

வாழ்த்துகள். ஜெயலலிதாஜி பேச்ச கேட்டுகிட்டு சங்மா ஊரூரா லேகியம் விற்க போகும் போதே எனக்கு தெரியும் நீங்க தான் அடுத்த ஜனாதிபதினு. எப்படியோ இன்னமும் நாலு வருஷத்துக்கு ஜாலியா நீங்க இருக்கலாம். இரண்டு லட்சம் சதுரடி பரப்பளவு கொண்ட ராஷ்டிரபதிபவன்ல பால் காய்ச்சீட்டீங்களா? இடம் கம்மியா இருக்குனு வருத்தப்படாதீங்க, பின்னால வாக்கிங் போக முகல் கார்டன்ஸ் இருக்கு. உங்களுக்கு ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம் சொல்றேன். நல்ல விஷயம் ராஷ்டிரபதிபவன்ல மொத்தம் 340 ரூம்கள் இருக்கு. கெட்ட விஷயம் என்னான்னா நான் வெளிநாடு டூர் போனதுல அதுல 339 ரூம் சாவிய தொலைச்சுட்டேன். இருந்தாலும் கொஞ்சம் ரூம்களுக்கு டூப்ளிகேட் சாவி போட்டு வச்சிருக்கோம். ஐயா, சமையல்கட்டு தண்ணி பைப்பு கொஞ்சம் லூசு, சரியா அடைங்க, இல்லனா தண்ணி ஒழுகிகிட்டே இருக்கும். ஹால் டியுப்லைட் சுட்சு கொஞ்சம் எர்த் அடிக்கும் கவனமா இருங்க. பெட்ரூம்ல இருக்கிற அட்டாச் பாத்ரூம்ல பாசான் அதிகம், வழுக்கி விட்டுடும் பார்த்துக்கோங்க. பாத்ரூம் ஹீட்டர் சூடாக லேட்டாகும். வேடிக்கை பார்க்கறேன்னு மாடி பல்கனில ரொம்ப நேரம் நிக்காதீங்க, நேர் மேல குருவி கூடு கட்டி இருக்கு. அவ்வப்பொழுது அசிங்கம் பண்ணிடும். ஹால்ல இருக்கிற டிவி கொஞ்சம் ரிப்பேர், மேல ரெண்டு தட்டு தட்டினா சரியா ஓடும். எதுவும் பயமில்ல அங்க, தமிழக காங்கிரஸ்காரங்க மனு கொடுக்க வரும் போது மட்டும் கவனமா இருக்கவும். ஐயா, வெளிநாடு போறப்ப எல்லாம் எடுத்த போட்டோக்கள இரண்டு மூட்டையா கட்டி வச்சிருக்கேன். டவாலி சைக்கிள கட்டி எனக்கு அனுப்பி விடுங்க. அப்படியே எம்டி சிலிண்டர் ரெண்டு இருந்தா கொடுங்க, அடுத்த வாரம் திருப்பி தந்துடுறேன். மன்மோகன் சிங் அங்க வந்தாருன்னா, சமையல்காரங்கள விட்டு அவருக்கு புடிச்ச அதிரசம் செஞ்சுக்கொடுக்க சொல்லுங்க. உங்களுக்கு தெரியாததா, பாவம் அவரு அது சாப்பிட மட்டும் தான் வாய திறப்பாரு.

மற்றவை நேரில்.

அன்பு சகோதரி
கிரதீபா

From: முரணாப்_முகர்ஜி@புதுஜனாதிபதி.காம்
Sent: Thursday, July 26, 2012 12:19 PM
To: கிரதீபா பாட்டில்@ பழையஜனாதிபதி.காம்
Cc: சோ.காந்தி@டெல்லி.காம், பிரதமர்@இந்தியா.காம்
Subject: RE : வாழ்த்துகள்

மதிற்பிற்குரிய கிரதீபா சகோதரிக்கு,

உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள். புது இடம் பயமா இருக்கும்னு வந்தேன். உங்கள் தகவல்கள் உதவிகரமா இருந்தது. இருந்தாலும் நீங்க பாத்ரூம்ல கரப்பான் பூச்சி இருப்பத சொல்லல, அப்புறம் சமையல்கட்டுல பெருச்சாளி இருப்பதையும் சொல்லல. நான் அப்படியே ஷாக்காயிட்டேன். இன்னொரு உதவி பண்ணுங்க, எந்தெந்த வெளிநாடு போகலாம், எந்தெந்த சீசனில் போகலாம், என்ன கொண்டு போகலாம், எங்க தங்கலாம், என்ன வாங்கி வரலாம்னு சொன்னீங்கன்னா, இன்னமும் உதவிகரமா இருக்கும்.

நன்றிகளுடன்,
முரணாப்

பின்குறிப்பு : காலி சிலிண்டர்களையும், போட்டோ மூட்டைகளையும், அத்துடன் பாக்கு குத்தும் உரலையும் டவாலியிடம் இன்று காலை கொடுத்து விட்டேன். கிடைத்தவுடன் தெரிவிக்கவும்.

From: கிரதீபா பாட்டில்@ பழையஜனாதிபதி.காம்
Sent: Friday, July 27, 2012 18.36 PM
To: முரணாப்_முகர்ஜி@புதுஜனாதிபதி.காம்
Cc: சோ.காந்தி@டெல்லி.காம், பிரதமர்@இந்தியா.காம்
Subject: Re: Re : வாழ்த்துகள்

மதிற்பிற்குரிய முரணாப் ஐயா,

காலி சிலிண்டர்களையும், போட்டோ மூட்டைகளையும், பாக்கு இடிப்பதையும் அனுப்பியதற்கு நன்றிகள். ரம்ஜான் மாதத்தில் சவூதி, துபாய், அபுதாபி போக வேண்டாம். பாவம் அவங்களே ஒரு வேளை சோறு தான் சாப்பிடுவாங்க, ஹோட்டல்கள் மூடி இருக்கும். சீனா பக்கம் போகாம முடிஞ்சளவு தவிர்த்து விடுங்க, ஏன்னா, அங்க நண்டு, ஆமை ஓட்டுல தான் சோறே பொங்குவாங்க. பாரிஸ் பக்கம் போனா பீட்சா சாப்பிட்டுடாதீங்க, வயிறு கட்டிக்கும். அமெரிக்கா கிறிஸ்துமஸ் சமயம் போங்க, ஒரே கலர்புல்லா இருக்கும். ரஷ்யா டிசம்பர்ல போகாதீங்க, பனி ஓவர், போன தடவை போனப்ப போட்டோ புடிக்கிற கேமரா துரு புடிச்சுகிச்சு. ஆப்பிரிக்கா பக்கம் சுத்தமா போக வேண்டாம், போதுமான நல்லுறவு நீடிக்குதுன்னு கதை விட்டுடுங்க. இத்தாலி, பிரச்னை இல்ல, நீங்க போனவுடனே டிபன் கேரியர்ல காலையில இட்லியும், மதியம் சாதமும் வந்திடும். நைட்டுக்கு 2 சப்பாத்தியும் கொடுத்துடுவாங்க. அடிக்கடி பாகிஸ்தான் தான் போகவேண்டி இருக்கும், அவங்கள நம்பாதீங்க, எதுக்கும் , அங்கு போகும் போது நம்மூர் அக்கமாலா, கப்சி எடுத்து போகவும்.

அன்பு சகோதரி,
கிரதீபா

Dad Vs Son.!

Dad Voice : உன் வயசுல நான் என்ன பண்ணிக்கிட்டு இருந்தேன் தெரியுமா?
Son's mind voice : இதே மாதிரி உங்கப்பாகிட்ட திட்டு வாங்கிட்டு இருந்திருப்பீங்க

Dad Voice : பக்கத்துக்கு வீட்டு பப்புவ பாருடா, எவ்வளவு பொறுப்பா இருக்கானு?
Son's mind voice : செவுத்துல காது வச்சு கேளுய்யா, அவங்க அப்பா இதே மாதிரி என்ன புகழ்ந்துகிட்டு இருக்காரு

Dad Voice : கஷ்டபட்டா தான், ஜெயிக்க முடியும்
Son's mind voice : அப்போ நீ கஷ்டப்படு, நான் ஜெயிக்கிறேன்

Dad Voice : பொழுதுக்கும் கேட்கிற, பணம் என்ன மரத்துலையா காய்க்குது?
Son's mind voice : மார்க் எடுன்னு கேட்கிறா, அது மட்டும் மார்க்கெட்லயா விக்குது?

Dad Voice : வெறும் பத்து ரூபா வச்சிக்கிட்டு நான் இந்த ஊருக்கு வந்தேன்
Son's mind voice : ம்க்கும், அப்போ பஸ் டிக்கெட் ரொம்ப கம்மி

Dad Voice : எப்போ பார்த்தாலும் மொபைல நோண்டிக்கிட்டு இருக்காதடா
Son's mind voice : பின்ன மூக்கவா நோண்டிகிட்டு இருப்பாங்க

Dad Voice : உனக்கும் குழந்த குட்டின்னு வந்தாதான் என் கஷ்டம் புரியும்
Son's mind voice : அப்போ மோதல ஒரு கல்யாணம் பண்ணி வை

குட் மார்னிங் ஆபிசர்.!!

அன்னா ஹசாரே கட்சி ஆரம்பிக்கலாம், தேர்தலில் நிக்கலாம் என வடஇந்திய மீடியாக்கள் ஹைப் ஏத்திவிட, ஒருவழியா அப்படி நடந்துட்டா வேட்பாளர் தேர்வு எப்படி இருக்கும் என்பதை நாம காட்டவேணாம்? இதோ பப்பரப்போ பந்துங்கோ, சந்துக்குள்ள சிந்துங்கோ, அண்ணன் கவுண்டமணியோட லந்துங்கோ.

ஹசாரே : வணக்கம், வாங்க
சவுண்ட்பெல் : குட் மார்னிங் ஆபிசர்.
ஹசாரே : உங்க பேரு?
சவுண்ட்பெல் : ஹாய், ஐ ஆம் குண்டலகேசி, அவ்வையார் ஆரம்ப பாடசாலை.
ஹசாரே : என்ன படிச்சு இருக்கீங்க?
சவுண்ட்பெல் : வேலை செய்ய தெரியாத அளவு படிச்சிருக்கேன்.
ஹசாரே : என்ன வேலை செய்யறீங்க?
சவுண்ட்பெல் : ஐ ஆம் 15 லேக்ஸ் ஓனர், கார் a/c, கக்கூஸ் a/c, ஏசியோ ஏசி
ஹசாரே : உங்கள பத்தி சொல்லுங்க
சவுண்ட்பெல் : இந்தியாவுலேயே ரெண்டே புத்திசாலிங்க, ஒன்னு ஜி.டி.நாயுடு, இன்னொன்னு ஐ ஆம் ஆப் இந்தியா.
ஹசாரே : அப்படியா? என்ன கண்டுப்பிடிச்சிருக்கீங்க?
சவுண்ட்பெல் : டப்பா வாயன், டிபன் பாக்ஸ் மண்டையன், கப்ளிங்க்ஸ், ஸ்பூன்லிங்ஸ், டிக்கிலோனா
ஹசாரே : ஹலோ மிஸ்டர் நீங்க இதுவரை என்ன கண்டுப்பிடிச்சு இருக்கீங்கன்னு கேட்டேன்?
சவுண்ட்பெல் : பேப்பர் ரோஸ்ட் தின்னா லிவருக்கு ரொம்ப நல்லது
ஹசாரே : என்ன செஞ்சு இருக்கீங்க?
சவுண்ட்பெல் : முருகேசிக்கு முப்பது ரூபா மொய் செஞ்சிருக்கேன்
ஹாசரே : நாட்டுக்கு என்ன செஞ்சு இருக்கீங்க?
சவுண்ட்பெல் : கிணத்தூர் எம்.எல்.ஏ'வாலேயே முடியலையாம், என்னை செய்ய சொன்னாங்க.
ஹாசரே : உங்களுக்கு யார தெரியும்?
சவுண்ட்பெல் : கிணத்தூர் எம்.எல்.ஏ தன்ராஜ தெரியும், கோமுட்டி தலையன் செந்தில தெரியும்.
ஹசாரே : அதான் என்ன செஞ்சீங்க?
சவுண்ட்பெல் : சோசியல் மேட்டர் ஓகே, டைவர்ஸ் கேசெல்லாம் வருதுப்பா.
ஹசாரே : வேற யார்கிட்ட உங்கள பத்தி கேட்கலாம்?
சவுண்ட்பெல் : கழுத மேய்க்கிற பையனுக்கு இவ்வளவு அறிவான்னு எல்லோருக்கும் பொறாமைங்க அய்யா
ஹசாரே : லோக்பால்னா என்ன?
சவுண்ட்பெல் : ஆவின் பால் தெரியும், ஆரோக்யா பால் தெரியும், ஏன் அமலா பால் கூட தெரியும், இது என்ன மேன் புதுசா லோக்பால்?
ஹசாரே : மிஸ்டர் குண்டலகேசி, லோக்பால்னா தெரியாதா? நாங்க நடத்துற ஊழல் எதிர்ப்பு போராட்டம்?
சவுண்ட்பெல் : நாட்டுல லட்டு சரியில்லனா போராட்டம் பண்றாங்க, புட்டு சரியில்லனா போராட்டம் பண்றாங்க, ஒரே கண்பியுசன் ஆப் இந்தியா.
ஹசாரே : எங்க உண்ணாவிரதம் பத்தி?
சவுண்ட்பெல் : நாட்டுல வயிறு சரியில்லாட்டி உண்ணாவிரதம், வயித்தால போகாட்டி உண்ணாவிரதம், டென்ஷன்ஸ் ஆப் இந்தியா.
ஹசாரே : பாபா ராம்தேவ் பத்தி என்ன நினைக்கறீங்க?
சவுண்ட்பெல் : யாரு, முதுகு தவிர எல்லா இடத்துலையும் முடி முளைச்ச சாமியா? ரொம்ப நல்லவர். நேத்து கூட டெல்லிக்கு அவர பத்தி பேசினேன்.
ஹசாரே : அரவிந்த் கெஜ்ரிவால்?
சவுண்ட்பெல் : அய்யய், நம்ம ஜம்பலக்கடி ஜும்பா ஆப்ரிக்க மாமா
ஹசாரே : சரி, லோக்பால் வருமா வராதா?
சவுண்ட்பெல் : சங்கூதுற வயசுல சங்கீதாவா?
ஹசாரே : உங்களுக்கு ஒண்ணுமே தெரியல.
சவுண்ட்பெல் : ஆமா, ஆமா, கார வச்சிருந்த சொப்பன சுந்தரிய இப்போ யாரு வச்சிருக்காங்கன்னும் தெரில.
ஹசாரே : இடாத காலி பண்ணுங்க
சவுண்ட்பெல் : இப்படி சொன்னா போகமாட்டேன், மூஞ்சிய சிரிச்ச மாதிரி வச்சுகிட்டு சொல்லுங்க
ஹசாரே : கெட் லாஸ்ட்
சவுண்ட்பெல் : ஒரு போன் பண்ணிக்கலாமா?
ஹாசரே : முடியாது, கிளம்புங்க
சவுண்ட்பெல் : ஹே ஹே, ஓகே, நான் 5ஸ்டார் ஹோட்டல்ல பண்ணிக்குறேன். இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா
ஹாசரே : வெளிய போய்யா முதல்ல
சவுண்ட்பெல் :அப்போ எனக்கு எம்.எல்.ஏ சீட் கன்பார்ம்டா?
ஹசாரே : ம்ம்ம், கூட வச்சிருக்கறவங்களுக்கு எல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் கொடுக்கிறது இல்ல.
சவுண்ட்பெல் : அப்போ வடக்குபட்டி ராமசாமிக்கு கொடுத்த முன்னூறு ரூபா, ஊஊஉ ஊஊஉ
ஹசாரே : உங்களால முடிஞ்சா ஒரு நல்லது பண்ணுங்க, போலி அரசியல்வாதிகள ஊக்குவிக்காதீங்க
சவுண்ட்பெல் : அய்யா, எங்கூருக்கு நாய் புடிக்கிற வண்டி வரட்டும், எல்லோரையும் புடிச்சு கொடுத்துடுறேன்

புள்ளிவிவரம்.!

நேற்று என் மொபைலில் ஒரு குறுந்தகவல் கூவியது. மாநகரங்களில் வாழும் 73.70% இந்தியர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் எனவும், அது போன்றவர்களை குளுகுளுவிக்க கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களில் ரிசார்ட்டுகள் இருக்கின்றன என்றும். அந்த ரிசாட்டுகளில் என்ன செய்றாங்கன்னு மூக்க நுழைக்காம, இவங்க எப்படி இந்த புள்ளி விவரங்களை அள்ளி விடுறாங்கன்னு மண்டைய மட்டும் குழப்பி, சினிமாவுல புள்ளி விவரங்கள சொல்லி சொல்லியடிக்குற கேப்டன் ரசிகனான என் நண்பன கேட்டேன். அப்போ, பல அதிர்சிகரமான புள்ளி விவரங்கள் கிடைச்சுது... அப்படியே ஷாக் ஆயிட்டேன்..

நாட்டுல 89.56% கணவர்கள் மனைவிகளோடதான் வாழுறாங்களாம் ( யாரோட மனைவின்னு நான் கேட்கல )
84.36% நாய்களும் 78.44% இந்தியர்களும் கரண்ட் கம்பம், டிரான்ஸ்பார்மர் அருகே தான் சிறுநீர் கழிக்கிறாங்களாம்.
93.27% பானி / பேல் பூரிக்கடைகள் சாக்கடை ஓரமாத்தான் இருக்காம்.
98.30% பெண்களின் மொபைகளில் missed கால் போகும் வசதி தான் இருக்காம்.
நாட்டுல 86.66% பேர் டீயோ காபியோ டம்ளாரில் தான் குடிக்கிறாங்களாம்.
78.63% சலூன் கடைக்காரர்களுக்கு வேறொருவர் தான் முடி வெட்டி விடுறாராம்.
பொம்பள புள்ள பேருல Chat பண்ற 65.21% பேரு பொம்பளையே இல்லையாம்.
'வந்துட்டேன் மச்சான், ஆன் தி வே'ன்னு சொல்ற 94.36% பேரு பாத்ரூம விட்ட வெளியே வராதவங்களாம்.
விபத்தை பார்க்கும் 12.25% பேர் 108'க்கு போன் பண்றாங்களாம் ( மீதி பேரு போட்டோ மட்டும் எடுக்கிறாங்களாம் )
உயிர் வாழ்பவர்களில் 98.25% பேர் மூச்சு விடுறாங்களாம், மீதி பேரு கட்டண கழிப்பிடத்தில் மூச்சை தம் பிடித்து அடக்கி இருக்காங்களாம்.
45.65% அரசாங்க ஊழியர்கள் லேட்டாதான் ஆபிஸ் போறாங்களாம், ஏன்னா மேலதிரிகாரியே அப்புறம் தான் வராராம்.

இப்படி நிறையா இருக்காம், ஆனா அவன் கடைசியா சொன்னது தான் வெரி நைஸ்.
இப்படி பட்ட புள்ளி விவரங்கள் 78.92% சதவீதம் தவறாம்.

ஈ'டா ஈ'டா ஈ'டா.!

ஒரு ஈ'யை வைத்து எடுக்கப்பட்ட 'நான் ஈ' திரைப்படம் வசூலை குவித்துக்கொண்டிருக்கிறது. நம்மாளுங்க மட்டும் என்ன கற்பனையும் திறமையும் குறைந்தவங்களா, ஹீரோவ ஒரு கிராபிக்ஸ் மிருகமா மாத்தி படம் எடுக்க மாட்டாங்க? இதோ நமது திறமைமிகு படைப்பாளிகள் யோசித்து வைத்திருக்கும் ஸ்க்ரிப்ட்களின் FIR ( சிரிக்க மட்டுமே )

இயக்குனர் 'சரி' :
ஒரு நேர்மையான போலீஸ் ஆபிசர் சினம் கொண்ட பூனையாக மாறி வில்லன்களை நோண்டி நொங்கு எடுக்கும் கதை. 'நான் போலீஸ் இல்ல, பூனை', 'ஓங்கி அடிச்சா ஒரு டன் வெயிட்டு, பூனையோட யானை கொஞ்சம் தான் ஹயிட்டு' என்று பல பல பன்ச் டயலாக்குகள் படத்தை அலங்கரிக்க போகின்றனவாம். உருட்டுக்கட்டை, அருவாள், டாட்டா சுமோ என்று வரும் வில்லன் பெருச்சாளிகளும், 'ஏய்ய்ய்ய்ய்ய்ய்யா ' என அலறும் அப்பத்தா பூனைகளும், 2000-3500 பூனைகள் ஒண்ணா வாழும் கூட்டு குடும்பங்களுமாக பக்கவான படம்.

செலவுராகவன் :
இந்த சமூகத்தால் ஒரு ஒரு சராசரி பையன் எப்படி மனபிறழ்வு கொண்டு தெருநாயாக ஆனது என்பதை பற்றிய கதை வைத்திருக்கிறார். பக்கத்து அப்பார்ட்மென்ட் பொமரேனியன் நாயோடு ஆரம்பித்த காதலின் தோல்வியும், வறுக்கி பிஸ்கட் கிடைக்காத ஏமாற்றமும் இந்த நாயகனின் வாழ்கையை எப்படி திசை மாற்றுகிறது என்பதை சொல்கிறார். வழக்கம் போல நாய்குட்டிகள் ஒன்று சேர்ந்து தீ மூட்டி சுற்றி டான்ஸ் ஆடுவதும், நாயகி நாய்க்குட்டி நாயகன் நாய்க்குட்டியை காலால் நெஞ்சில் உதைப்பதும் என செம ஸ்டோரி.

கே.எஸ்.கவிக்குமார்:
ஒரு ஊருல ஒரு குளம். அதில் குளமே மதிக்கும் ஆமையின் குடும்பத்தை பற்றிய கதைதான் அந்த ஹைடெக் NOTஆமை படம். வழக்கம் போல நண்டு பிராது கொடுப்பதும், மீனை குளத்தை விட்டு ஒதுக்கி வைப்பதுமென கிராபிக்ஸ் ஜாலங்கள் நிறைந்திருக்கும் கதை. ஆமை வெத்தலை போட்டு துப்பும் போது மட்டும் 3D'யில் வெற்றிலை சாறு நம்ம மேல விழுவது போல இருக்கும், வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு படம் பார்க்க போயிடாதீங்க.

ஷிங்கர் :
சமூக அவலங்களை கண்டு ஒரு மண்புழு பிரமாண்ட அனகொண்டா அவதாரம் எடுக்கும் வொண்டர்புல் ஸ்க்ரிப்ட். ஹீரோயின் பட்டுபுழுவை ஹீரோ மண்புழு சைட்டடிப்பது தனி டிராக். பாடல் காட்சிகளில் ஹீரோயின் பட்டுப்புழுவின் கலருக்கு ஏற்ப தாஜ்மகால் கலர் மாறுவது, சீன பெருஞ்சுவர் முழுவதும் மண்புழுவின் போஸ்டர் ஒட்டப்படுவது என பிரமாண்ட கிராபிக்ஸ்கள் ஏராளம். இந்தியாவில் அனைவருக்கும் மொட்டையடித்து ஒரு பாடல் எடுக்க திட்டமிருந்தது, ஆனால் அதை மத்திய மாநில அரசுகளே செய்வதால், திட்டம் கை விடப்பட்டதாம்.

மாலா :
'எவன் அவன்' படத்துக்கு பிறகு நீண்ட நாள் யோசித்து மாலா எடுக்கும் படம். காசியில், அழுக்கான கங்கை கரையில் வாழும் ஒரு கொசுவை அனிமேஷன் செய்து எடுக்கப்படும் படம். நிஜ கொசுவை வைத்தே எடுக்க நினைத்து இருந்தார், ஆனா எவ்வளவு முயற்சி செய்தும் கொசு இவர் சொல்வதை புரிந்து கொள்ளாததால், முதன் முறையாக அனிமேஷனுக்கு போயிருக்கிறார். கையகல திருவோட்டை கொண்டு கங்கை கரையில் கொசு பிச்சை எடுக்கும் காட்சி கல் நெஞ்சையும் உருக்கிவிடும் என்கிறார்கள். கிளைமாக்சில் கஞ்சா தோட்ட அதிபரை கொசு கடித்து கொல்லும் காட்சியில் தியேட்டரே அதிரும் என்கிறார்கள்.

Boreரரசு :
ஹீரோ வெட்டுக்கிளியின் பேரு மதுரை, ஊரு சேலம். ஹீரோயின் மூட்டபூச்சியின் பேரு வந்தவாசி, ஊரு நாமக்கல். வில்லன் கரப்பான்பூச்சியின் பேரு புதுகோட்டை, ஊரு சங்கரன்கோவில். சேலத்தில் இருக்கும் மதுரை நாமக்கல் வந்தவாசிய லவ் பண்ண, இது புடிக்காத புதுகோட்டை, சங்கரன்கோவில் விட்டு கிளம்பி நாமக்கல் வர, நாமக்கல் வந்தவாசி சேலம் போய்விட, அந்த நேரம் மதுரை அங்க வர, புதுகோட்டைக்கும் மதுரைக்கும் கோவையில கிளைமேக்ஸ் சண்டை. ' நான் வெட்டுக்கிளி, படம் பாக்குறவன் சட்டைய கிழி' என்ற ஓப்பன் சாங்கில் வெட்டுக்கிளியின் கிராபிக்ஸ் டேன்சுக்கு பல கோடி செலவு செய்து இருக்கிறார்களாம்.

'மினி'ரத்னம் :
உள்ளூரில் ஜோசியம் பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு கிளி, கல்யாணமாகி, காஷ்மீருக்கு ஹனிமூன் போகும் போது கடத்தப்படும் அருமையான கதை. 'கீ கீ' என்ற வார்த்தைகள் மட்டுமே கிளி பேசும் என்பதால், டயலாக் எழுதுவது ரொம்ப ஈசியாகி விட்டதாம். எனக்கு ஒரு நாளைக்கு வர மொத்த எஸ்.எம்.எஸ் தான் அவரு மொத்த படத்துலேயும் டயாலாக்கா இருக்கும் என்பது வேறு விஷயம்.

பணம்.! படம்.!

மதிப்பிற்குரிய மத்திய சர்க்கார், ரூபாய் நோட்டுகளில் காந்தி தாத்தா படத்துக்கு பதிலா வேறு சில தலைவர்கள் படத்தையும் அச்சடிக்கலாம் என்று முடி செய்திருக்கிறார்களாம். பாவம் அவரும் எத்தனை நாள் தான் நம்ம கையில கசங்கி சாவாரு? அட அட்லீஸ்ட் பாக்கெட்குள்ள பேச்சு துணைக்காவது காந்தி தாதாவுக்கு ஆள் வேணாம். ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளை பார்த்தே பல மாசமாயிடுச்சு, இது யாரு படம் அச்சடிச்சு இருந்தான் என்னாங்கிற உங்க ஆதங்கம் புரியுது. அதுக்காக மத்திய சர்க்காருக்கு ஐடியா சொல்ற வேலைய நாம நிறுத்தலாமா? அதான் நம்மால முடிஞ்ச சில ஐடியாக்களை தெளிச்சு விடலாம்னு இருக்கேன். அம்மா படத்த போடலாம் தான், ஆனா கூடவே சின்னாம்மா போட்டோவையும் போடணும், அது சரி வராது, ஒரு ஆள் தான் அலவுடாம். இந்த அமைச்சர்கள் போட்டோவோ போடலாம்னு பார்த்தா எல்லாம் குனிஞ்ச போட்டோவா, இல்லாட்டி கை கட்டி வாய் பொத்தின போட்டோவா இருக்கு, அதும் சரி வராது. டி.ஆர் படத்த போடலாம்ன்னு சொல்ல வந்தா, அவரு ஷேவ் பண்ணி பளிச்சுன்னு இருக்கிற ஒத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கூட கிடைக்கல. அனுஷ்கா போட்டோவ சிபாரிசு பண்ணலாம்னு பார்த்தா, அப்புறம் ஒரு பய பணத்த பர்ஸ விட்டு வெளியே எடுக்க மாட்டானுங்க. கேப்டன் போட்டோவ போடலாம், ஆனா எல்லாமே போலீஸ் யூனிபார்ம் மேல முட்டி வரை ரெயின் கோட் போட்ட படமாத்தான் இருக்கு. திரிஷா, தமன்னா போட்டோ போட்டா கவர்ச்சியா இருக்கும், ஆனா எல்லாமே அவங்க பெட்டிகோட் போட்டா காஸ்டியுமா தான் இருக்கு. மக்களுக்கு புரட்சி சித்தாந்தம் சொல்ற பிரபு சார் போட்டோ போட இடம் பத்தாது. கமல் சார் படத்த போடலாம், ஆனா பொண்ணுங்க கிஸ் பண்ணியே நோட்ட ஈரம் பண்ணிடுவாங்க. ரஜினி சார் போட்டோ கிட்டதட்ட காந்தி தாத்தா மாதிரிதான், பெரிய வித்தியாசமில்லை. ராமதாஸ் அண்ணன் போட்டோவ போட்டா, ஒயின்ஸ் கடையில செல்லாது. பேசாம, எவன் கைக்கு பணம் போகுதோ அவனோட பொண்டாட்டி போட்டோ தெரியுற மாதிரி ஒரு டெக்னாலஜி கண்டுப்பிடிச்சுட்டா, ஒருத்தனுக்கும் பணம் சேர்த்தனும் என்கிற ஆசையே இருக்காது. நாட்டுல பணம் புழக்கமும் குறையாது. அடபோங்கப்பா, கள்ளுண்ணாமை போதித்த காந்தியின் படம் போட்டு நோட்டுகள் அதிகமாய் புழங்குவதே டாஸ்மாக் கல்லாவில் தான். இதுல யாரு படத்த போட்டா என்ன?

Don.! Don.! Don.!

மாத்துறோம், எல்லாத்தையும் மாத்தறோம், தமிழ் சினிமால டான்'ன்னு சொன்னாலே அல்டிமேட் ஸ்டார் மட்டும் தானா? டான் என்றாலே கோட்டும் shoot 'ம் தானே, சாரி கோட்டும் சூட்டும் தானா? கூலிங் கிளாஸ் போட்டாத்தான் டானா? மாத்துறோம், புரட்டி போடுறோம், புதுசு புதுசா டான்கள இறக்குறோம்.

டான் டி.ஆர் :
பில்லா 3'ல டி.ஆர் தான் டான், சாதா டான் இல்ல, 'டண்டணக்கா ஏய் டனக்குனக்கா' டான். ஆப்ரிக்கா கண்டத்து அங்கோலா தேசத்தில் இருந்து இந்தியா வந்து கடலை மிட்டாய் முதல் கண்ணீர் துடைக்கும் கர்சீப் வரை கடத்தி உலகை கலங்கடிக்கும் டானாக உருவாகும் கதை. "என் வாழ்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா வளர்த்துனதுடா"ன்னு தாடிய தடவிகிட்டே பன்ச் பேசுனா தியேட்டரே அதிராது?

டான் கிராமராஜன் :
புரட்டி போடுறோம். டான்னு இருந்தாலே கோட்டு தான் போடணுமா? ஏன் டவுசர் துண்டோட இருக்கக்கூடாதா? டான் என்றாலே அடியாள் தான் வளர்த்தனுமா? ஏன் ஆடு, மாடெல்லாம் வளர்த்த கூடாதா? மாத்தறோம், எல்லாத்தையும் மாத்தறோம். நம்ம டான், கன்னுக்குட்டி வளர்த்தறாரு. "ராஜன் கிராமராஜன்"னு பேர சொல்றப்பாவே சும்மா தியேட்டர் 9.6 ரிக்டர் அளவுல ஆடாது? துப்பாக்கி குண்ட வேஸ்ட் பண்ணாம தோளில் துண்ட போட்டுக்கிட்டு லிப்ஸ்டிக் உதடால பாடியே கொல்றாரு டான். புண்ணாக்கு முதல் பால் சொம்பு வரை எல்லா சாமானங்களையும் தலையில வச்சிருக்கிற கரகத்துல கடத்துறாரு. படத்து பட்ஜெட்டுல முக்கால்வாசி பவுடர் செலவுக்கு போறது தான் சின்ன குறை.

டான் ராஜ்கிரண் :
மாத்தி யோசி மாமா மாத்தி யோசி, டவுசர் போட்ட கிராமராஜனே டான இருக்கிறப்போ, பட்டாப்பட்டி போட்டு மேல வேட்டிய தூக்கி கட்டிய ராஜ்கிரண் டானா இருக்கப்படாதா? வழக்கமா ஸ்காட்ச் விஸ்கி குடிக்கிற டான நாம நாட்டுசரக்கு குடிக்க வைக்கறோம். கூலிங் கிளாச கழட்டி விட்டுட்டு சிவப்பு கண்ணால முறைக்க வைக்கறோம். மூணு ஊரு சாப்பிட வச்சிருக்கிற கறிசோற பெரிய வாழை இலையில போட்டு திங்க விடுறப்போ டயலாக் "ஆசை இல்ல அண்ணாச்சி, பசி'ன்னு பில்லா 2 டயலாக்க உள்ளார விடுறோம். துப்பாக்கிய தூரபோட்டுட்டு ஒவ்வொரு வில்லனையும் தூக்கி புடிச்சு தன் தொடையில அடிச்சே கொல்றாரு டான். கள்ளச்சாராயம் முதல் நல்ல சாராயம் வரை நல்லி எலும்புக்குள்ள வச்ச கடத்துறாரு டான்.

டான் வினுசக்கரவர்த்தி :
டான் என்றாலே போலீஸ் பஞ்சாயத்துல சிக்குறவரு தானா? பதினெட்டு பட்டிக்கு பஞ்சாயத்து பண்றவரா இருக்க கூடாதா? உடைக்கிறோம், வழக்கத்தை உடைக்கிறோம். வயித்துல வேட்டி கட்டி, பச்ச பெல்ட் போட்டு, மார்ல சந்தானம் பூசுன பக்கா கலக்கல் டானா வராரு நம்ம வினுசக்கரவர்த்தி. ஓப்பனிங் சீன்ல "என்ன எழவுடா இது?'னு பன்ச் விட்டுகிட்டே கூட்டுவண்டில இருந்து இறங்கறாரு. அஜித் சொல்ற "சாவு இருக்கிற வரை ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்'ங்கிற டயலாக்க இவரு சொன்னா அனல் பறக்காது? வில்லன்களை சுட்டு கொல்றது சாதா டான், வெத்தலை சாற துப்பி கொல்றது நம்ம பஞ்சாயத்து டான்.

டான் லூஸ்மோகன் :
"ஞிய்... நைனா மை நேம் இஸ் பில்லா, நாலு ஃபுல்லா ஞ்யி, நைட்டு அடிச்சாலே இருக்கும் நல்லா ஞ்ய்யா"ன்னு ஒவ்வொருத்தர் காது பக்கமும் வந்து பாடினா என்ன கெத்தா இருக்கும். நடிகர் லூஸ்மோகன் தான் இந்தியாவின் மோசட் வான்டட் டான். சிங்கப்பூர், பர்மா, மலேசியா, தாய்லாந்துனு பயோரியா பல்பொடி விக்கிற நாடுகளில் இருந்தெல்லாம் வர ஆளுங்களுக்கு புரிஞ்ச மொழில பேசும் தகுதியுள்ள ஒரே டான். கருப்பு கோட்டுல இந்த பக்கம் நமிதாவும் அந்தபக்கம் நயன்தாராவும்னு வந்தா எப்படி இருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிக்குங்க, இன்னா நான் சொய்றது?

பெண்கள் நாட்டின் கண்கள்.!

வரலாறு முக்கியம் அமைச்சர் மான்குனி பாண்டியாரே.!

2011'னாம் வருடம் இந்தியாவில் பதிவான குற்றங்களின் விவரம்.
கொலைகள் - 34305
கொலை முயற்சிகள் - 31385
கற்பழிப்பு - 24206
ஆள்கடத்தல் - 44664
கொள்ளைகள் - 24700
வன்முறைகள் - 68500
வரதட்சனை இறப்புகள் - 8618
பாலியல் துன்புறுத்தல்கள் - 42968
பெண்கள் மீதான வன்முறை - 99135
திருட்டு - 92504
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் - 33098

ஆக இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிஷத்திற்கும் ஒரு கொலை நிகழ்கிறது. ஒவ்வொரு 21 நிமிஷத்திற்கும் ஒரு பெண் கற்பழிப்புக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் உள்ளாகிறாள். ஒவ்வொரு 11 நிமிஷத்திற்கும் ஒரு இந்தியர் கடத்தப்படுகிறார். ஒவ்வொரு 7 நிமிஷத்திற்கும் இந்தியாவில் எங்கேயோ ஒரு வன்முறை நடக்கிறது.ஒரு நாளுக்கு 23 பெண்கள் வரதட்சனை கொடுமையால் இறக்கிறார்கள். ஒவ்வொரு 5 நிமிஷத்திற்கும் ஒரு பெண் மீது வன்முறை திணிக்கப்படுகிறது.

"பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்" - மகாகவி

ஆதாரம் : http://ncrb.gov.in/

அண்ணன் 'ஓஹோ'பிஎஸ்.!

தமிழ்நாட்டு ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் எப்படி ஒரு முறையாவது அமைச்சராகி விடுவார்களோ, அது போல கர்நாடக ஆளுங்கட்சி பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்கள் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் எப்படியும் ஒரு முறையாவது கர்நாடக முதலமைச்சராகி விடுவார்கள் போலிருக்கிறது. எடியூரப்பா, சதானந்த கவுடாவுக்கு பிறகு இப்போ முதல்வராக (போர்)களம் காணுகிறார் ஜெகதீஷ் ஷெட்டர். கிடைத்த முதல்வர் பதவியை பிரச்சனையில்லாமல் ஓட்ட அண்ணன் 'பணிவு செல்வத்திடம்' அவர் கேட்ட ஐடியாக்களுக்கு, அண்ணன் 'ஓஹோ'பிஎஸ் அனுப்பிய லீக்கான கடிதமும்....

"அன்பு தம்பிங்க, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அடிக்கடி குனித்தும் பணிந்தும் கும்பிடு போடுவதால் கடந்த 3 நாட்களாக முதுகு புடிச்சுக்குச்சு. வயசாயிடுச்சுல. முன்ன மாதிரி இல்ல தம்பி, இப்பெல்லாம் போட்டிக்கு புதுசுபுதுசா இளவட்ட பயலுவ வந்துட்டாங்க. படக்படக்னு மைனஸ் 30 டிகிரில கூட கால்ல விழுந்துடுறாங்க.

தம்பி, நம்ம தொழில் ரகசியம் என்னன்னா, செய்யற தொழில்ல பொறுமை தான் முக்கியம். நல்ல nationalised bank'க்கா பார்த்து இந்த வெட்கம், கூச்சம் எல்லாத்தையும் நல்ல விலைக்கு அடமானம் வச்சிடுங்க.நானெல்லாம் முதல்வரா இருந்தப்போ, டிவிக்காரங்க ஆரம்பிச்சு பேப்பர்க்காரங்க வரை வண்டி வண்டியா கிண்டலா பண்ணுவாங்க. ஏன், இந்த கத்திகுத்து கந்தன் முன்னால விட்டு பின்னால வாண்டவாண்டையா திட்டுவான். அதையெல்லாம் நமக்கு 'ஹேப்பி பொங்கல்' சொல்றாங்கன்னு நினைச்சுக்கிட்டு 'சேம் டூ யூ'ன்னு சொல்லி சிரிச்சுக்கிட்டே போயிடனும்.

அம்மா, பெரியம்மா, சின்னம்மா, மனோரமா, வீடு கூட்டுற பொன்னம்மா, சட்டசபை கூட்டுற ஆயா அம்மா வரை யார பார்த்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு கால்ல விழுந்திடனும். என்ன நாஞ்சொல்றது?தம்பிங்க, அரசியல் ஒரு யுத்த பூமி, அதுலயும் கர்நாடகா ஒரு ரத்த பூமி. நானெல்லாம் சண்டைன்னா ஓடினது கிடையாது, குத்துன்னா கூட சத்தம் வராது. முடிஞ்சளவு பேச்ச பேச்சாத்தான் வச்சிருக்கணும்.

இந்த பில்லா பய மாதிரி, நானும், என் வாழ்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானாத்தான் செதுக்கினேன். ஒவ்வொரு நொடியும் பாயா பணிந்து மடங்குறேன். சாதா செல்வமா இருந்த நான் இன்னைக்கு பணிவுசெல்வமா மாறுனதுக்கு பின்னாடி எவ்வளவு பணிவும் குனிவும் இருக்கு தெரியுமாப்பா?

ஆனா ஒண்ணு தம்பிங்க, இப்படி பணிந்து, திட்டு வாங்கி வாங்கி, இப்பெல்லாம் யாருக்கிட்டயும் திட்டுவாங்காட்டி அன்னைக்கு தூக்கமே வர மாட்டிக்குது. சில சமயம் விடியக்காலை மூணு மணிக்கெல்லாம் யாராவது ராங் நம்பருக்கு போன் பண்ணி, 'ஹலோ பிரபா ஒயின்ஸ் ஓனரா?'ன்னு கேட்டாவது ரெண்டு திட்டு வாங்கிக்கிறேன். பாருங்க தம்பிங்க, நம்ம தொழில்ல திட்டு வாங்குறது, லட்டு சாப்பிடுற மாதிரி. நான் சொன்ன மேட்டரையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு நடந்தா, ஓராண்டு அல்லா நூறாண்டும் நீங்க தான் கன்னட முதல்வர்"

புரூடாபுராணம்.!

அந்நியன் படம் மூலமா கருடபுராணத்தில் சொல்லப்பட்ட அந்தகூபம், கூம்பிபாகம், கிருமிபோஜனம் போன்ற தண்டனைகள் எல்லாமே உங்களுக்கு தெரியும், இன்றைய கலிகால லொள்ளுகளுக்கு அதெல்லாம் பத்தாது, அதனால இன்னமும் கொஞ்சம் லேட்டஸ்ட் தண்டனைகளை கடவுளுக்கு சிபாரிசு பண்றேன்.

ஹாரன்யவதம்
ரோட்டுல பூத்து பூத்துன்னு ஹாரன் அடிச்சாலும் மழையில நனைஞ்ச எரும மாடு மாதிரி நகராம இருக்கிற மனுஷ பசங்களுக்கு கொடுக்கும் தண்டனை இது. சுமார் 400 மினிபஸ்களை சுத்தி நிக்க வச்சு ஒரு மணி நேரம் ஓயாம ஏர் ஹார்ன அடிச்சு காதை டிஞ்சர் ஆக்குற தண்டனை தான் ஹாரன்யவதம்.

குழாய்குண்டம்
நாட்டுல ஆங்காங்கு ஆழ்குழாய் கிணறுகளை தொண்டிவிட்டுட்டு சரியா மூடாம போயி சின்னஞ்சிறு பிஞ்சுகளின் உயிர் போக்கும் மந்திகளுக்கான தண்டனை. அரை இஞ்சு இரும்பு குழாய் ஒண்ண எடுத்து, மொத்த உருவத்தையும் அதுக்குள்ளே குத்து குத்தி சொருகி விடும் தண்டனை தான் குழாய்குண்டம்.

பொய்யாபக்ஷம் :
வெண்ணைய இருக்குனா நெய்யா வருதோ இல்லையோ, வாய தொறந்தா பொய்யா பேசுற பக்கிகளுக்கு தரவேண்டிய தண்டனை இது. மிக கொடூரமான தண்டனை. அதாவது இந்தியாவின் எல்லா மாநில ஆளுங்கட்சி சேனல்களின் செய்திகள தொடர்ந்து ஒரு வாரம் பார்க்க வைக்கணும். அதுக்கும் மேல அவன் புத்தி சுவாதீனம் ஆகாம இருந்தா அது அவங்க தத்தா செஞ்ச புண்ணியம்.

மமோசிபத்திரம் :
எல்லாமே தெரிஞ்ச மாதிரி நிறுத்தாம மொக்கபோடுற ஆளுங்களுக்கு தரப்படும் தண்டனை இது. அதாவது நம்ம பிரதமர் ம.மோ.சிங் போல ஆறு மாசத்துக்கு எந்த கேள்வி கேட்டாலும் 'தெரியாது, தெரியாது'ன்னு மட்டுமே மூளை பதில் சொல்ல வைக்கும்.

குசகுசாசனம் :
அடுத்தவங்கள பத்தி எப்பவுமே குசுகுசுன்னு கிசுகிசு பேசறவங்களுக்கு இந்த தண்டனை. 'லாரி டமாலு, டிரைவர் பணாலு' டைப் தினசரிகளில் வரும் கள்ளக்காதல் செய்திகள ஒரு வருஷம் தொடர்ந்து மனப்பாடம் செய்யணும். வருஷ முடிவுல வைக்கிற டெஸ்டுல பாஸ் பண்ணாட்டி, அடுத்து ரெண்டு வருஷம் இதே செய்திகள மனப்பாடம் பண்ணனும்.

அரசாங்கரோதம்
தேடி வர சாதாரண பொதுமக்களை அவர பாருங்க, இதோ இவர பாருங்க, நாளைக்கு வாங்க, இன்னைக்கு போங்கன்னு ஓயாம அலையவிடுற சில அரசு உத்தியோகஸ்தர்களுக்கான குறைந்த பட்ச தண்டனை இது. www.irctc.co.in இணையதளத்துல மூணு மாசம் நகராம உட்கார்ந்தாவது ஒரு ரயில் டிக்கெட் புக் பண்ணி கொடுக்கணும், இல்லாட்டி அடுத்த மூணு மாசத்துக்கு கொசுவோட 'உய்ய்ய்யங்' சத்தம் காதுல கேட்டுக்கிட்டே இருக்கும்.

உருவுனரவு :
பொது இடங்களில் அளவுக்கு அதிகமா ஆபாசமா டிரஸ் செய்து வரும் பெண்களுக்கும், பேன்ட்டுக்கு வெளிய ஜட்டி தெரியுற மாதிரி வரும் பசங்களுக்குமான தண்டனை. இவங்களையெல்லாம் சத்தியமூர்த்தி (ச.மூ.) பவன் கலவரத்துல உள்ளாரா விட்டு ஓட ஓட வேட்டி டவுசர உருவி விடனும்.

பாலமூக்குவதம் :
நாட்டுல குழந்தைங்க குடிக்ககூட பால் வாங்க முடியாம இருக்காங்க, இதுல, புதுப்பட ரிலீஸ் அன்னைக்கு ஹீரோக்கள் கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் பண்ற பொடிபசங்களுக்கான தண்டனை. இவங்கள புடிச்சு, மூக்கு வழியா மூணு லிட்டர் பால குடிக்க விடனும். வெளிய சிந்துற பால திருப்பி காது வழியா விடனும்.

வக்கீல் வண்டுமுருகன்.!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதை எதிர்த்து வக்கீல் வண்டுமுருகனின் வாதம் :

'வைகை புயல்' வடிவேலு போலவே படித்தால் நாங்கள் பொறுப்பல்ல.

வக்கீல் வண்டுமுருகன்:
எச்சூச்சுமீ யுவர் ஆனர், உங்களுக்கு வக்கீல் வண்டுமுருகனாகிய எனது காலை வணக்கங்கள். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திருமண மண்டபமாக நடத்தக்கூடாது என்பது சின்னப்புள்ளத்தனமா இருக்குது யுவர் ஆனர், அய்யோ அய்யோ. அதாவது, நூலகத்தின் உதவியால் மக்கள் அறிவை வளர்க்கலாம், கலக்டர் ஆகலாம், டாக்டர் ஆகலாம், கவுன்சிலர் ஸ்நேக் பாபு ஆகலாம், இன்னமும் என்னவென்னமோ ஆகலாம். ஆனால் பாருங்க ஜட்ஜைய்யா, அதுக்கு தேவையான மக்கள் எப்படி கிடைப்பாங்க? கல்யாணம் பண்ணி குழந்தை பெத்தாதானே கிடைப்பாங்க? கிடைப்பாங்க? கிடைப்பாங்க? அப்போ ஏன் அதை கல்யாணம் மண்டபமா ஆக்கக்கூடாது? அதுமட்டுமில்லை யுவர் ஹானர், இந்த அண்ணா சாலையில் பன்னி குட்டி போட்ட மாதிரி எப்ப பார்த்தாலும் வதவதன்னு டிராபிக் ஜாமாகவே இருக்கிறது. யுவர் ஹானர், ஆணியே புடுங்க வேண்டாம். அண்ணா சாலையில் போக்குவரத்தை உடனடியாக தடை செய்து, துவைத்த துணியை காயபோட இடமில்லாமல் தவிக்கும் என்னை போன்ற அப்பாவி ஆண் சிங்கங்களுக்கு பொண்டாட்டி சேலையையும் மச்சினிச்சி தாவணியையும் காயப்போட வாடைகைக்கு விட வேண்டுகிறேன். அதுமட்டுமில்லை யுவர் ஆனார், இந்த மெரீனா பீச் இருக்கிறதே மெரீனா பீச், அந்த இடத்தை மக்கள் பயன்படுத்தும் திறந்தவெளி கட்டண கழிப்பிடமாக அதிகாரப்பூர்வமாக மாற்றினால், கிராமத்தில் இருந்து வந்து கஷ்டப்படும் வயசானவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும், நமக்கும் சில்லறை தேத்தியது போலவும் இருக்கும்.

ஜட்ஜ் :
மிஸ்டர் வண்டுமுருகன், நீங்க என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே?

வண்டுமுருகன்:
நோ யுவர் ஹானர், அப்படி கிண்டல் பண்ணுபவன் எங்க அண்ணன் சங்கி-மங்கி, நான் அவன் தம்பி மங்கி-சங்கி. யுவர் ஆனார், இங்க தான் இதுக்கு பேரு பீச்சு, தூத்துக்குடி, துபாய்ல இதுக்கு பேரு $%&#$#. அப்புறம் முக்கியமான விஷயம் ஜட்ஜைய்யா, உங்க காத கிட்ட கொண்டுவாங்க, அட சும்மா கிட்ட கொண்டு வாங்க, நானும் என் ஜூனியர்கள் குண்டு ஆர்த்தி, போண்டா மணியும் பீச்சு ஓரமா கேஸ் கீஸ் கிடைக்குமான்னு தேடிக்கிட்டு போறப்பெல்லாம் ..... அப்படி மொறைக்காதீங்க ஜட்ஜைய்யா, விலைவாசி ஏறிபோச்சு, வர கேசெல்லாம் மிட்டாய் திருடினது, முருங்கக்காய் திருடினது. முட்ட சாப்பிட்டே மூணு மாசமாச்சு, கேசு கீசு புடிச்சாதான் குடும்பம் நடத்த முடியும், கேளுங்க, பீசு பக்கம் போனோமா, ஒரு வெள்ளை கலர் கட்டிடத்தில் இருந்து கை தட்டுற சத்தமா வந்துக்கிட்டு இருக்கு, செயின்ட் சார்ஜு கோட்டையோ, சரோஜா கோட்டையோ, அந்த கட்டிடத்தை தீபாவளி பொங்கலுக்கு சாலமன் பாப்பய்யா குரூப்புக்கு பட்டிமன்றம் நடத்த வாடைக்கு விட்டா, அரசு கஜானாவை கொஞ்சம் நப்புலாம்ல, நப்புலாம்ல, நப்புலாம்ல.

ஜட்ஜ்: கக்கக்கபோ.!

வண்டுமுருகன்: இன்னும் கைவசம் நிறையா ஐடியா இருக்கு யுவர் ஆனர், இப்பெல்லாம் யாரு யுவர் ஆனர் திருக்குறள் எல்லாம் படிக்குறா, பேசாம, இந்த வள்ளுவர் கோட்டத்தை கட்சிக்காரர்களின் காதுகுத்து பங்சனுக்கு வாடைகைக்கு விட்டு விடலாம், எப்படி என் ஐடியா யுவர் ஆனர்? அப்புறம் கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையையும், வள்ளுவர் சிலையையும், 'ஏன்டா கல்யாணம் பண்ணுனோம், ஏன்டா குழந்தை பெத்தோம், ஏன்டா வோட்டு போட்டோம்' என பல்வேறு காரணங்களுக்காக செவுத்துல முட்டிக்கிறவங்களுக்கு வாடகைக்கு விடலாமே? அதுமட்டுமில்லை யுவர் ஆனர், சேப்பாக்கம் கிரவுண்டை சுற்றி கருப்பு பூனைகளை காவல் வைத்து, ஒரு மணி நேரத்துக்கு முப்பது ரூபாய் என உள்ளே வாக்கிங் செல்ல அனுமதித்தால், பல பேர் கொல்லப்படாமலும் கடத்தபடாமலும் வாக்கிங் போகலாம் இல்லையா? மேலும் இந்த செம்பரபாக்கம், புழல் ஏரிகளை மண்ணை போட்டு மூடிவிட்டு, அந்த இடங்களை சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட வாடகைக்கு விட்டால் லம்பா அமௌன்ட் தேத்தலாம் யுவர் ஹானர். மேலும், திருவல்லிக்கேணி கோவிலை டிரைவ் - இன் ஹோட்டலுக்கு வாடைகைக்கு விடலாம், ரூம் ரூமாக இருக்கும் இந்த புழல் சிறையை பொதுமக்கள் புழங்கும் குறைந்த விலை லாட்ஜாக வாடகைக்கு விடலாம், இந்த ரிப்பன், சுப்பன் பில்டிங்கையெல்லாம் ஆசிர்வாத, ஜெப கூட்டங்களுக்கு வாடைக்கு விடலாம். இந்த உசிலம்பட்டி பக்கம் மதுரை திருமலை நாயக்கர் மகாலை பூப்பு நீராட்டு விழாவுக்கு வாடகைக்கு விடலாம், ஊட்டி, கொடைக்கானல் மக்களை வெளியேற சொல்லி, அங்கிருக்கும் புதர்களை காதலர்களுக்கு வாடைக்கு விடலாம், இத்தனை வருடமாக பழனி மலையில் ஓசியில் குடியிருக்கும் முருக பெருமானுக்கு இனிமேல் மலையை வாடகைக்கு விடலாம். மிக மிக முக்கியமாக யுவர் ஆனர், இத்தனை வருடங்களாக தமிழன் என்று வெட்டி பெருமை பேசி திரியும் இந்த மக்களுக்கு இனி இங்கு இருக்க மொத்த தமிழ்நாட்டையும் வாடைக்கு விடலாம், வாடகை தராதவர்களை அண்ணம் தண்ணி புழங்க விடாமல் தமிழ்நாட்டை விட்டே தள்ளி வைத்துவிடலாம், எப்பூடி? இத்துடன் எனது வலுவான வாதங்களை முடித்துகொள்கிறேன் யுவர் ஆனர்.!

போண்டா மணி : ஏ சூப்பர்ப்பா, நீ இப்படியெல்லாம் பேசி நான் பார்த்ததே இல்லப்பா, உன் பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கா இருந்தாலும், உன் ஆர்குமென்ட் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்குப்பா.

குண்டு ஆர்த்தி : முதலாளி, காபி குடிக்கிறீங்களா முதலாளி? ஜட்ஜய்யா என்ன சொன்னார் முதலாளி?

வண்டு முருகன் : என் வாதத்த பார்த்த ஜட்ஜு, எவ்வளவு அடிச்சாலும் தாங்குற, நீயும் தமிழ்நாட்டு மக்கள் மாதிரி ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாரும்மா....வ்வ்வ்வ்வ்...

எமன் வாகனம்.!

கடந்த வாரத்தில் மட்டும் பள்ளி வாகனங்களால் உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை மூன்றுக்கு மேல். அதிலும் பள்ளி பேருந்தின் ஓட்டை வழியாக ஒரு குழந்தை விழுந்து இறந்ததை விபத்து என்று சொல்வதை காட்டிலும் மர்டர் என சொல்லலாம். அந்த மழலை விழுந்த ஓட்டை, பேருந்தின் ஓட்டையை மட்டுமல்ல, RTO / அரசு அலுவலகங்களின் ஓட்டைகளையும் சேர்த்து நமக்கு காட்டுகிறது. இந்த பேருந்துக்கு அனுமதி தந்த RTO / அரசு அலுவலர்களை கேட்டால் போக்குவரத்து துறை அமைச்சகத்தை கைகாட்டலாம். போக்குவரத்து அமைச்சகமோ சாலை சரியில்லாததால் பேருந்துகள் சீக்கிரம் பழுதடைகின்றன என நெடுஞ்சாலைகள் துறையை கைகாட்டும். நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகமோ இது பொதுப்பணித்துறையின் கீழ் வரும் சாலை என பொதுப் பணி துறையை கைகாட்டும். பொதுப் பணி துறை அமைச்சகமோ பள்ளிகளையும் பேருந்துகளையும் சரிவர ஆய்வு செய்யவில்லையென பள்ளிக் கல்வி அமைச்சகத்தை கைகாட்டும். பள்ளிகல்வி துறையோ பள்ளிகள் சரிவர ஒத்துழைக்கவில்லை என பள்ளியின் மீதே கை காட்டும். மேலே கூறியது கிண்டலுக்குகில்லை. உண்மை. நாம் தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள பார்க்கிறோமே தவிர, திருத்திக்கொள்ள பார்ப்பதில்லை. இவர்களை விடுங்கள், பள்ளியில் சேர்ப்பதுடன் நமது கடமைகள் முடிந்து விட்டதென பெரும்பாலானோர் நினைக்கிறோம். பெற்றோர்களாகிய நமக்கு பேராசைகள் இருக்கும் வரை இவர்கள் மேல் தப்பில்லை, நம் குழந்தைகள் பள்ளிகளால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என ஆராயவும் நமக்கு துப்பில்லை.!

Diet.!


சில இந்தியர்களுக்கு இருப்பது வயிறா? வெட் கிரைண்டரா'ன்னே தெரியல, எப்போதும் எதையாவது அரைச்சுக்கிட்டே இருக்காங்க. இந்தியாவில் சாப்பாடு கிடைக்காம செத்தவங்களை விட கண்ட கண்ட சாப்பிட்டு நோய் வந்து செத்தவங்க தான் அதிகம். போனவாரம் கறிக்கடையில் ஓங்கி அடிச்சா ஒரு டன் வெயிட்டுள்ள சிறு வயசு தம்பி ஒருத்தரு ஆறு நாட்டுகோழி வெட்ட சொன்னாரு, அட பாவி என்ன குடும்பம்டா இதுன்னு ஆச்சரியப்படுற நேரத்தில், 'ஏன் தம்பி இவ்வளவு கம்மியா வாங்குறீங்க'ன்னு வெடிகுண்டு போட்டாரு கடைக்காரரு. அந்த தம்பி சொன்ன பதில்ல என உடம்புக்கு மட்டும் 8 .2 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் வந்திடுச்சு, பதில் இதுதான் 'போதும்ண்ணே, வீட்டுல எல்லோரும் ஊருக்கு போயிருக்காங்க, நான் மட்டும் தான்'...

பணமில்லாதவன் வயிறு நிறைக்க ஓடுவதும், பணக்காரன் வயிறு குறைய ஓடுவதுமே இன்றைய தற்கால சமூக நிகழ்வு. சினிமா படங்களில் டூயட் காட்சிகள் எப்படி தவிர்க்க முடியாததோ, அதே போலத்தான் வாழ்கையில் 'டயட்' ஸீன் காட்சிகளும் தவிர்க்க முடியாதவை.வாயற்ற வாழ்வே நோயற்ற செல்வம். வாயை கட்டுப்படுத்தினால், நோயை கட்டுப்படுத்தலாம் என்பதால் இதோ சில டயட் டிப்ஸ்.

வாழத்தான் சாப்பிடுகிறோமே தவிர சாப்பிடுவதற்காக வாழவில்லை என வலது கையில் பச்சை குத்திக்கொள்ளலாம்.

வாயால் சாப்பிடுவதை குறைத்து கண்ணால் சாப்பிட்டு பழக வேண்டும்.

மனைவி சொல்வதற்கெல்லாம் தலையாட்டினாலும், சாப்பாடு போடட்டுமா? இன்னொரு தோசை? எனும் போது மட்டும் தலையை இடமும் வலமுமாக அசைக்க வேண்டும்.

பொரியை அரிசியாய் பாவித்து சாம்பார், ரசம், தயிர் ஊத்தி சாப்பிட்டால், நாம் சாப்பிடும் அளவு ஆட்டோமேட்டிக்காய் குறையும்.

டிவி பார்க்கும் பொழுது, கண்ணும் காதும் மட்டுமே திறந்திருக்க வேண்டும். தப்பிதவறியும் வாயை திறந்திட கூடாது.

சாப்பிட்டுவிட்டு வாக்கிங், ஜாக்கிங் போவதை விட வாக்கிங், ஜாக்கிங் போய்க்கொண்டே சாப்பிடுவது நல்லது.

வாரத்தில் ஏழு நாட்களும், மாதத்தில் முப்பது நாட்கள் மட்டும் உண்ணா விரதம் இருக்கலாம்.

வாக்கிங்கை அதிகரித்து விட்டு டாக்கிங்கை குறைப்பது நல்லது.

சாப்பாட்டை கைகளால் எடுத்து சாப்பிடும் பழக்கத்தை விட்டுவிட்டு, தட்டிலிருந்து வாயினால் எடுத்து சாப்பிடும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு இட்லி அல்ல ஒரு தோசை சாப்பிட்டு பழகவேண்டும், சாப்பாட்டுக்கு முன்போ பின்போ அல்ல, சாப்பாடே அதுதான்.

வீடு கட்டும் போதே, சமையலறையை ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி கட்டிவிட வேண்டும்.

ப்ரிட்ஜுன் மேலே, மாமியார் வீடு என்னும் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால், அதை திறக்கவே மனசு வராது.

எப்போதுமே விலங்குகளின் மக்கள்தொகை குறைய விடமாட்டேன் என சத்தியம் பேணலாம்.

மனிதர்களின் பிரச்சனையே வாய் தான், அந்த வாயை தேவையில்லாத போது சாப்பிடவும், பேசவும் திறக்காமல் இருந்தாலே போதும், உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும். கவிபேரரசு வைரமுத்து சொன்னது போல சாப்பிட 'பசியோடு உட்கார்ந்து பசியோடு எழுந்தால்' எந்நாளும் வாழ்வு சுகமே.

Film'Bore Awards 2012

உலகின் இரண்டாவது பெரிய சினிமா துறையான இந்திய சினிமாத்துறை தனது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க போகிறது. இந்த அருமையான தருணத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கனவு தொழிற்சாலையான கோடம்பாக்கத்து கோலிவுட்டில் நெஞ்சில் நங்கூரம் போட்டு நிலைத்து தங்கிய பல நடிப்பு தூண்களை நன்றியுடன் நினைத்து விருதுகள் கொடுத்து கவுரவிப்போம்.

தமிழ் சினிமாவின் சிறந்த கல்லூரி மாணவர்கள்
1981 to 1985 Batch - சந்திரசேகர், தியாகு, ராஜீவ், குண்டுகல்யாணம்
1986 to 1990 Batch - முரளி, சின்னி ஜெயந்த், சார்லி, தாமு
1991 to 1995 Batch - பிரசாந்த், விவேக், வடிவேல், வையாபுரி
2005'லிருந்து - மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது

சிறந்த கல்லூரி மாணவர் - முரளி
சிறந்த கல்லூரி நண்பர் - சின்னி ஜெயந்த்
சிறந்த கல்லூரி principal / லெக்சரர் - வெண்ணிற ஆடை மூர்த்தி
சிறந்த பள்ளிகூட மாணவன் - காஜா ஷெரிப்
சிறந்த பள்ளிக்கூட மாணவி - பேபி ஷாலினி
சிறந்த குடும்ப தலைவர் - விசு
சிறந்த குடும்ப தலைவி - கமலா காமேஷ்
சிறந்த கணவர் - சிவகுமார்
சிறந்த மனைவி - ராதிகா சரத்
சிறந்த பாசமான அப்பா - டெல்லி கணேஷ்
சிறந்த பாசமான அம்மா - ஸ்ரீ வித்யா
சிறந்த நல்ல தாய்மாமா - டி.ராஜேந்தர்
சிறந்த மோசமான தாய்மாமா - ஜெய்கணேஷ்
சிறந்த தாத்தா - V.S. ராகவன்
சிறந்த தாத்தா சிறப்பு பரிசு - பூரணம் விஸ்வநாதன்
சிறந்த அம்மாயி - மனோரமா
சிறந்த அப்பத்தா - காந்திமதி
சிறந்த அமெரிக்கா மாப்பிள்ளை ( 1980 - 2000 ) - ராஜா
சிறந்த அமெரிக்கா மாப்பிள்ளை ( From 2001 ) - கார்த்திக் (அலைபாயுதே )
சிறந்த பஞ்சாயத் தலைவர் - வினு சக்கரவர்த்தி
சிறந்த பஞ்சாயத் துவக்கி வைப்பவர் - பெரியகருப்பு தேவர்
சிறந்த உள்ளூர் நாட்டமை - சண்முகசுந்தரம் ( கரக்காட்டகாரன் புகழ் )
சிறந்த நாட்டாமை ( அகில உலகம் ) - விஜயகுமார்
சிறந்த உள்ளூர் மைனர் - ஆனந்த்ராஜ்
சிறந்த துருதுரு பையன் (1980 - 2000) - நவரசநாயகன் கார்த்திக்
சிறந்த துருதுரு பொண்ணு (1980 - 2000) - நதியா
சிறந்த துருதுரு பையன் (From 2000 ) - தனுஷ்
சிறந்த துருதுரு பொண்ணு ( From 2000 ) - ஜோதிகா
சிறந்த அறிவுரையாளர் (ஆண் ) - மணிவண்ணன்
சிறந்த அறிவுரையாளர் ( பெண் ) - சுகாசினி
சிறந்த சிந்தனையாளர் - செந்தில்
சிறந்த வர்ணனையாளர் - கவுண்டமணி
சிறந்த தமிழ் சொற்கள் கண்டுபிடிப்பாளர் 1 - சின்னி ஜெயந்த் (சில்பான்ஸ், கில்மா )
சிறந்த தமிழ் சொற்கள் கண்டுபிடிப்பாளர் 2 - சந்தானம் ( அப்பாடக்கர் )
சிறந்த சுறுசுறுப்பாளர் - சாருஹாசன்
சிறந்த உளறுவாய் - டெல்லிகணேஷ்
சிறந்த ஐடியா கொடுப்பவர் - ஒய்.ஜி.மகேந்திரன்
சிறந்த Love boy - ஜெமினி கணேசன்
சிறந்த Cow Boy - ஜெய்ஷங்கர்
சிறந்த பாடகர் - 'மைக்' மோகன்
சிறந்த ஆங்கில இலக்கியவாதி - லூஸ் மோகன்
சிறந்த புன்னைகையாளர் - குமரிமுத்து (ஹ் ஹாஹாஹாஹா )
சிறந்த புன்னகையாளர் சிறப்பு பரிசு - மதன் பாப்
சிறந்த டவுன் ரவுடி - பொன்னம்பலம்
சிறந்த கிராமத்து ரவுடி - ஆனந்தராஜ்
சிறந்த போலீஸ் காண்ஸ்டபிள் - மனோபாலா
சிறந்த விளையாட்டு வீரர் - விஜயகாந்த் (தேசிய 'பம்பரகட்' சாம்பியன் ).
சிறந்த விளையாட்டு வீராங்கனை - யுவராணி ( தேசிய 'கபடி' சாம்பியன் )
சிறந்த தலையாட்டி ( old ) - மோகன் ( மைக்கை பிடித்துகொண்டு )
சிறந்த தலையாட்டி ( new ) - ஜெய் ( சுப்ரமணியபுரம் )
சிறந்த தலையாட்டி சிறப்பு பரிசு - T. ராஜேந்தர்
சிறந்த சின்னவீடு - Y.E. விஜயா
சிறந்த சமையல் கலைஞர் - பாக்கியராஜ்
சிறந்த சைகோ / சாடிஸ்ட் - பிரதாப் போத்தான்
சிறந்த முறையில் சாப்பாடு உண்பவர் - ராஜ்கிரண்
சிறந்த ஆங்கில தமிழ் மொழிபெயர்ப்பாளர் - மேஜர் சுந்தரராஜன்
சிறந்த தற்கொலைவீரர் - வாகை சந்திரசேகர்
சிறந்த புலம்பல்வாதி - ஜனகராஜ்
சிறந்த தேசபற்றாளர் - ஆக்சன் கிங் அர்ஜுன்
சிறந்த கலக்டர் / தாசில்தார் - சரத்பாபு
சிறந்த போலீஸ் - விஜயகாந்த்
சிறந்த CID - ஜெயசங்கர்
சிறந்த போலீஸ் கமிஷனர் - ARS
சிறந்த திருந்தாத வில்லன் - R.S. மனோகர்
சிறந்த திருந்தும் வில்லன் - ராதாரவி
சிறந்த கற்பழிப்பாளர் (தோல்வியில் முடியும் ) - M.N. நம்பியார்
சிறந்த கற்பழிப்பாளர் Senior (வெற்றியில் முடியும் ) - செந்தாமரை
சிறந்த கற்பழிப்பாளர் Junior (வெற்றியில் முடியும் ) - ராஜிவ்
சிறந்த அடியாள் - பீலி சிவம் / அழகு
சிறந்த குழி பறிப்பாளர் - நிகழ்கள் ரவி
சிறந்த பாஸ் - அசோகன்
சிறந்த பாம் வைப்பாளர் - ரகுவரன்
சிறந்த அருவா தூக்கி - நெப்போலியன்
சிறந்த வில்லனின் ஆசை நாயகி (old ) - CID சகுந்தலா
சிறந்த வில்லனின் ஆசை நாயகி ( new ) - டிஸ்கோ சாந்தி
சிறந்த காஸ்டியுமர் - ராமராஜன்
சிறந்த காஸ்டியுமர் சிறப்பு பரிசு - செந்தில்
சிறந்த டபுள் மீனிங் பேசுபவர் - வெ.ஆ.மூர்த்தி
சிறந்த டபும் மீனிங் சிறப்பு பரிசு - எஸ்.ஜே. சூர்யா
சிறந்த காதலுக்கு உதவுபவர் ( ஆண் ) - சந்திரசேகர்
சிறந்த காதலுக்கு உதவுபவர் ( பெண் ) - சில்க் ஸ்மிதா
சிறந்த டிஸ்கோ டான்சர் ஆண் - ஆனந்த்பாபு
சிறந்த டிஸ்கோ டான்சர் பெண் - டிஸ்கோ சாந்தி
சிறந்த வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் - பவர்ஸ்டார்