Tuesday, June 26, 2012

2 hrs 38 minutes

ஆங்கில எழுத்து U போல கொஞ்சம் பெரிய சைஸில் வெட்டப்பட்ட ஜாக்கெட்டின் மூலமாக அனாமிகாவின் முதுகை சைட்டடித்து கொண்டிருந்தான் மாலை நேர சூரியன். லேட்டாகிவிட்டது. ஹைகோர்ட்டிலிருந்து BIKEக்கிகொண்டிருந்தாள். சைட்டடித்த சூரியனும் சூடாக இருந்ததால் சோலார் பேட்டரி பைக்கும் போதுமான ஒத்துழைப்பு கொடுத்தது. ஸ்கூலில் இருந்து ஸாராவும் ஷெல்வந்தும் 7 மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். இன்னமும் 17 நிமிடங்கள் 32 நொடிகளில் ஸ்டேஷனை தொட்டுவிட்டால் இரவு 8.11லிருந்து 8.12க்குள் ஏதேனும் ஒரு நொடியில் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்து விடலாம்.

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக வெறும் பிரட்டும், பிஸ்கெட்டும், சாலடுகளாலும் தான் உயிர்த்து கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். இன்று அவர்களுக்கு இட்லி தருவதாக மதர் பிராமிஸ் செய்திருந்தாள். என்ன செய்வது, இந்த மெக்கானிக்கல் யுகத்தில் ஒவ்வொரு நிமிடமும் நொடியும் முன்கூட்டியே திட்டமிடபட்டோ தீர்மானிக்கபட்டோ இருக்கிறது. அதுவும் அனாமிகா போன்ற புகழ் பெற்ற ஸ்பெஷல் வக்கீல்களுக்கு உத்தமனை பார்ப்பதோ எவ்வளவோ கடினமோ, அதே கடினம் ஓய்வு நேரத்தை பார்ப்பதும்.

மேற்கண்ட வரிகளை நீங்கள் படித்து முடித்த அதே நொடியில் ரயிலில் ஏறிவிட்டாள் அனாமிகா. தனக்காக மொபைல் மூலம் முன்பதிவு செய்துவிட்ட இடத்தை கண்டுபிடித்து, அமர்ந்து, தன் ஜீன்ஸ் தொடைகளை மேஜையாக்கி மடிகணினியின் தூக்கத்தை கலைத்தாள்.மனு கொடுக்க வந்த மக்களை மீறி சென்று காரில் ஏறும் கலக்டர் போல மரங்களையும் வீடுகளையும் உதாசீனப்படுத்தி விட்டு விரைந்தது ரயில். ஜன்னல்களில் விழுப்புரங்களும் திண்டிவனங்களும் உளுந்தூர்பேட்டைகளும் கடந்து கொண்டிருந்தன. மதுரை ஜங்க்ஷன் என்று 15மொழிகளில் போர்டு சிறு புள்ளியாய் தெரிய ஆரம்பித்த போது கணினியை கருணை கொலை செய்தாள். சென்னையில் வாடகை அதிகமென மதுரையில் குடியிருப்பது கொஞ்சம் செலவை குறைக்கிறது. மெட்ரோ பஸ்சின் உதவியுடன் மூன்றே நிமிடத்தில் வீடு வந்தது. உள்ளே வாட்டர் சோபாவில் அமர்ந்து டாம் ஜெர்ரியை துரத்துவதற்கு சாட்சிகளாகி கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.

'ஹாய் குட்டீஸ்'...
'ஹாய் மம்மி' - இது ஸாரா; 'பசிக்குதும்மா' - இது ஷெல்வந்த்.
'2 நிமிஷன்டா கண்ணா, 2 மினிட்ஸ்'

தன் செல்போனின் ஸ்கிரீனை சமையலறை அலமாரியின் ஸ்கேனருக்கு காட்டினாள். திறந்துகொண்டது. உள்ளே இட்லி என்று ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலில் இருந்து 6 மிட்டாய்களும் தேங்காய் சட்னி / தண்ணீர் என்று ஒட்டியிருந்த பாட்டில்களில் இருந்து தலா 3 மிட்டாய்களும் எடுத்துக்கொண்டாள். குழந்தைகளை நம்பி அலமாரியை விடமுடிவதில்லை, அதிகமாய் உண்டு பெருத்து விடுகிறார்கள். இளைக்க வைக்கவே பணம் அதிகம் செலவாகிறது இப்போது. குழந்தைகளிடம் நீட்டும் முன் எதோ சந்தேகம் வந்தவளாக மிட்டாய்களின் அட்டை கவரை பரிசோதித்தாள். 'Expirary Date OCT 2097' என்று இருந்தது.

ஒன்றும் பயமில்லை, கெட்டுப்போக இன்னமும் 4 மாசம் இருக்கிறது. குழந்தைகளை தூங்கவைத்து விட்டு, அடுத்தநாள் வழக்குக்காக, மனிதர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு பெண் ரோபோவை பற்றிய கேஸ்கட்டை எடுத்து குறிப்பெழுத தொடங்கினாள்.

பின்குறிப்பு : இந்த கதையில் கண்டுப்பிடிக்க கூடிய ஒரு தவறு இருக்கிறது. என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்.!

Friday, June 22, 2012

Top 10 Movies.!

வாசர்களே, இந்த வாரம் டாப் டென் திரைப்படங்கள் நிகழ்ச்சிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

இந்த வார புதுவரவு புதிதாக எம்.பி ஆகியிருக்கும் சச்சின் டெண்டுல்கரின் 'தோனி'. இவரை பற்றி வரும் வாரங்களில் விலாசமாக பார்ப்போம். தோனி - விளாசட்டும்.

பத்தாவது இடத்தில இருக்கும் சுப்ரமணியசாமியின் 'நான் மகன் அல்ல', ஒன்பதாவது இடத்திலிருக்கும் தங்கபாலுவின் 'உருமி', எட்டாவது இடத்திலிருக்கும் ஞானதேசிகனின் 'ஏழாம் அறிவு' பற்றி போதிய அளவில் அலசி துவச்சு தொங்க போட்டுவிட்டதால், இப்போ ஏழாவது இடத்தில இருக்கும் தாடியாரின் 'திடீர் வீராசாமி' பற்றி பார்ப்போம்.

நீண்ட தூக்கத்தில் இருந்த ஒரு கரடி குட்டி, திடிரென எழுந்து ஆதரவு குதியாட்டம் போடுவதே இந்த கதை. இந்தப்படத்தில் ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் ஆயிரம் பேர் ஒருங்கிணைத்து வேலை செய்திருக்கிறார்கள் என்பது சுவாரஸ்யம் கூட்டுகிறது. ஆகா மொத்தம் 'திடீர் வீராசாமி' - ஆள விடு சாமி

ஆறாவது இடத்திலிருக்கும் மன்மோகன்சிங்கின் 'மௌன குரு' பற்றி கடந்த வாரங்களில் மிக நுட்பமாக ஆராய்ந்தோம். பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு மிக குறைந்த அளவில் நாயகன் வசனம் பேசும் படம் இதுமட்டும் தான். மொத்தத்தில் மௌனகுரு - முகத்தில் பரு.

அடுத்தது ராமதாசின் 'தேவதாஸ்', சென்ற வாரம் இரண்டாம் இடத்தில இருந்த இப்படம், தொபுக்கடிர் என கீழே விழுந்து ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறது. பொழுதனைக்கும் '2016 ல் ஆட்சி, டாஸ்மாக்கை மூடு' என திரும்ப திரும்ப வரும் வசனங்கள் சலிப்பை தருகின்றன. மொத்தத்தில் ராமதாசின் 'தேவதாஸ்' - ஆமைதாஸ்.

ஐந்தாம் இடத்தில இருக்கும் ஆந்திரா ஜெகன் ரெட்டியின் 'வேட்டை', நான்காம் இடத்தில இருக்கும் அம்மாவின் 'மங்காத்தா' பற்றி போதிய அளவில் பார்த்து விட்டதால் இனி மூன்றாம் இடத்தில இருக்கும் எடியூரப்பாவின் 'வெங்காயம்'. ஒரு வயசான பெரியப்பா, பெரும்பாடு பட்டு படையப்பாவாக மாற போடும் தில்லாலங்கடி அழுவாச்சி நாடகமே 'வெங்காயம்'. நாயகர் எடியூரப்பாவின் பழுத்த பழம் கெட்டப் பொருந்தி போகிறது. ஆக வெங்காயம் - பெருங்காயம்.

இந்த வாரம் இரண்டாம் இடத்தில இருக்கும் படம் 'அத்வானி - மோடி' இணைந்து நடித்த 'அரசியலில் சொதப்புவது எப்படி?'. மிகுந்த எதிரிப்பார்ப்புகளோடு வெளிவந்து இந்த ஆக்சன் திரைப்படம், மக்களுக்கு காமடி படமாக மாறியது கவலை அளிக்கிறது. அத்வானி வரும் காட்சிகளில் மோடி தலைமறைவாவதும், மோடி வரும் காட்சிகளில் அத்வானி தூங்கி போவதுமாக ரொம்ப மெதுவாக நகரும் கதை மொக்கை போடுகிறது. நாயகனின் நண்பர்களாக வரும் சுஷ்மா, கத்காரி போன்றோர் சிரிப்பை வரவைக்கின்றனர். மொத்தத்தில் 'அரசியலில் சொதப்புவது எப்படி?' - சொதப்பீட்டீங்களே இப்படி.

முதலிடத்தில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக இருப்பது ஜால்ராகுமாரின் 'மக்குபாய்'. 29ரூபாய் உங்களுக்கு யார் பிச்சை போட்டார்கள் என நாயகன் கழுத்து நரம்பு புடைக்க கத்தும் போது, உங்களுக்கு 2ரூபா யாரு போட்டாங்களோ அவங்க தான் என ரசிகர்கள் கத்தும் அளவு லாஜிக் ஓட்டைகள் நிரம்பி இருக்கிறது. கதாநாயகன் கொடுத்த காசுக்கு மேல் கூவுவதும், ப்ளாஷ்பேக்கில் தற்பொழுது இருப்பதற்கு துளியும் சம்பந்தமில்லாமல் இருப்பதும் கதைக்கு ஒட்டவில்லை. ஆக மொத்தத்தில் 'மக்குபாய்' - மக்குபாயே தான்.!

காதல்.!

காதல் என்று உலகில் இருக்கிறதா என்று தெரியவில்லை; ஆனால் அதை காதலிப்பவர்கள் எல்லோரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்.! செல்போன்களும் சிறு சிறு பொய்களும் பெருகிவிட்ட இன்றைய கணினி யுகத்தில் கண்ணன்களும் கன்னிகளும் காதலுக்கான வரையறைகளை மாற்றிவிட்டனர். காதலை பாதியில் முறிக்கும் ஆண்கள் தியாகியாகிறார்கள்.! காதலை பாதியில் முறிக்கும் பெண்கள் பாவியாகிறார்கள். காதலை மெழுகுவர்த்தி போல உருகி உருகி எரிந்து தீரும் தருவாயில் அந்த நெருப்பிலிருந்தே அடுத்த பத்த வைத்துக்கொள்கிறார்கள். ஆயிரம் பொய் சொல்லி காதலிக்கிறார்கள், ஒரே ஒரு உண்மையை ஜீரணிக்க முடியாமல் பிரிந்து போகிறார்கள். காதலை சொல்வது என்பது பத்து மார்க் கொஸ்டீன் போல ஆகிவிட்டது, எப்பவுமே, பசங்க பக்கம் பக்கமா எழுதுகிறார்கள்; பொண்ணுங்க சாய்ஸில் விடுகிறார்கள். இன்றைய தேதியில் காதல் ஒரு கர்ச்சீப்பாகி விட்டது; சிலர் முகம் துடைக்கிறார்கள்,சிலர் கை துடைக்கிறார்கள்,சிலர் மடித்து கடைசிவரை ஒளித்தே வைத்திருக்கிறார்கள். காதல் ஒரு கெட்ட வார்த்தை போல மாற்றிவிட்டதும் காதலர்கள் தான், அதனால் தான் பல பெண்கள் அதை மனசுக்குள் மட்டும் சொல்லிப் பார்க்கிறார்கள். பொண்ணோட மனசு பொண்ணுக்கு தெரியும், ஆணாட மனசு ஆல்கஹாலுக்கு தெரியும்ங்கிற லெவலுக்கு காதல கொண்டுவந்துட்டாங்க. இந்திய இளைஞர்கள், காதலர்களை தெரிந்து வைத்திருக்கும் அளவு, காதலை தெரிந்து வைத்திருக்கவில்லை. கவிபேரரசு வைரமுத்து சொன்னது போல இந்தியா காதலின் தேசம் தான், காதலர்கள் தேசமல்ல.!

பெட்ரோல்.!

நாட்டுல டெங்கு காய்ச்சலால் அவதிப்படுபவனை விட பெட்ரோல் பங்கு காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் தான் அதிகம். இந்த பெட்ரோல் மட்டும் சினிமா நடிகைகளின் வயசை போல எப்போதும் ஒரே மாதிரியாக இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். பால் விலை போல இருந்த பெட்ரோல் விலை இப்போ பீர் விலையை விட அதிகமாயிடுச்சு, எப்படியும் லிட்டர் 200, 300 ரூபா போயி ஒட்டுமொத்த இந்திய மக்களும் இனி கால்நடையாத்தான் அலையவேண்டி இருக்கும். பெட்ரோல் விலை ஏற்றதால், ஒட்டுமொத்த இந்திய மக்களையும் குறுக்கு வழியில் செல்ல வைக்கிறது இந்திய அரசு. எதுக்கும் ரெண்டு லிட்டர் பெட்ரோல ஸ்டேட் பேங்க்ல டெபாசிட் பண்ணி, நம்ம வருங்கால சந்ததியினருக்கு பெரிய சொத்து சேர்த்து வைப்போம்னு பல பேரு திட்டம் தீட்டி இருக்காங்க. பெட்ரோல் விலையால பாதிக்கப்பட போவது போலீசாரின் மாமுல் வாழ்க்கை தான், எவனும் தண்ணியடிச்சுட்டு வண்டில போகமாட்டான், இனி நடந்துதான்.! "திராணி இருந்தால், பெட்ரோல் பங்க்ல 'டேங்க ஃபில் பண்ணுங்க"ன்னு அம்மா கேப்டன பார்த்து சவால் மட்டும் தான் விடல. அப்படியாப்பட்ட பெட்ரோலை சேமிக்கும் நாம செய்யவேண்டிய கட்டாய கடமைகளை பார்க்கலாம்.

வண்டி நல்ல மைலேஜ் கொடுக்கவேண்டுமென்றால், முதல் முப்பது கிலோமீட்டருக்கு வண்டியை தள்ளிக்கொண்டு போக வேண்டும், அப்புறம் ஸ்டார்ட் பண்ணி வண்டி ஓடுவது அவரவர் விருப்பம்.

வீட்டில் இரண்டு டூ-வீலருக்கு மேல் வைத்திருப்பவர்கள் இரண்டையும் வெல்டிங் பண்ணி இணைத்து, ஒரு எருமையை முன்னால் கட்டி, மாட்டு வண்டியாக்கி கொள்ளலாம்.

பெட்ரோல் வாங்குவதற்காக வாடிக்கையாளர் நலன் கருதி வங்கிகள் கடனுதவி அளிக்கலாம்.

பாய்மர கப்பல் காற்றில் பயணப்படுவது போல, காரில் பாயை கட்டி காற்று போகும் திசையில் காரை விடலாம்.

டூ-வீலர்களால் follow செய்யும் ஆண்களை மிக மெதுவாக நடந்து இம்சை செய்யாமல், இந்த பெண்கள் வேகமாக நடக்கலாம்.

மத்திய அரசு நாலடக்கு ரயிலும், மாநில அரசு ஆறடுக்கு பஸ்சும் விடலாம்.

சும்மா சும்மா தீக்குளிப்பேன் என அறிக்கைவிடும் அரசியல்வாதிகளை வருமானத்திற்கு அதிகமாக பெட்ரோல் சேர்த்த வழக்கில் கைது செய்து பெட்ரோலை பறிமுதல் செய்யலாம்.

காரின் கீழ்பாகத்தை கழட்டி வைத்துவிட்டு, வெறும் காலால் தரையை தேய்த்து தேய்த்து வண்டி ஓட்டலாம்.

காவல்துறையினர் ட்ரிபள்ஸ் மட்டுமல்ல, அதிகபட்சம் ஆறு பேர்கள் ஒரு பைக்கில் போக அனுமதி கொடுக்கலாம்.

வரதட்சணையாக வண்டி, கார் வாங்காமல் ஒரு லிட்டர் கேனில் பெட்ரோல் பெற்று கொள்ளலாம்.

பைக் இன்ஜினை எடுத்து காருக்குள் பொருத்தி, லிட்டருக்கு 50 கி.மீ மைலேஜ் பெறலாம்.

இவற்றை எல்லாம் விட பெட்ரோல் மழை பெய்ய கழுதைக்கும் தவளைக்கும், ஏன் மனிதனுக்கும் தவளைக்கும் கூட கல்யாணம் செய்து வைக்கலாம்.

ஃப்ளெக்ஸ் போர்டு.!

வெறும் பானையில பொங்க வைக்கிறவங்க ஃப்ளெக்ஸ் போர்டு அடிக்கிறவங்கன்னா, அத வெறும் வாயில திங்க வைக்கறவங்க இந்த ஃப்ளெக்ஸ் போர்டுக்கு வாசகம் யோசிக்கிறவங்க. தமிழ்நாட்டை கடந்த நாலஞ்சு வருஷமா புரட்டி போட்டுக்கொண்டிருக்கும் புதிய கலாச்சாரம் இது. கல்யாணம், காதுகுத்து, கருமாதிக்கு ஆரம்பிச்சு கொறட்டை விடுறது, கொட்டாவி விடுறது, ஏன் தூக்காதுல உச்சா உடுறது வரைக்கும் இன்னைக்கு ஃப்ளெக்ஸ் போர்டு வச்சு வாழ்த்தி கொலையா கொல்றாங்க டிபன் பாக்ஸ் தலையனுங்க. எனக்கு தெரிஞ்சு எல்லா ஃப்ளெக்ஸ் போர்டுலையும் தவறாமல் இடம்பெறும் வாசகம் "வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்". டேய்ய்ய் பாம்பு புத்து வாயனுங்களா, வாழ்த்த வயசு வேணான்டா, ஒழுங்கா விளக்குன வாய் இருந்தா போதுண்டா. போனவாரம் கல்யாணத்துல பார்த்த ஒரு ஃப்ளெக்ஸ் போர்டு "நண்பா, நேத்து நைட்டு வரை எங்களை விடமாட்டாய், இன்று நைட்டு முதல் நீ வரமாட்டாய்'. இந்த பிக்கிலீக்ஸ் வாயனுங்க வாயில பிளாஸ்திரி ஒட்ட.! ஃப்ளெக்ஸ் போர்டுக்கு போஸ் கொடுக்கவே கூலிங்கிளாஸ் வாங்கி வச்சிருப்பானுங்க போல. நாளுக்கு மூணு ஃப்ளெக்ஸ் போர்டுல கண்ணாடி போட்டுக்கிட்டு மொபைல சிரிச்சுகிட்டே பேசறவனுங்க தான் இருப்பாய்ங்க. சிலிண்டருக்கு சட்டை போட்ட மாதிரி இருப்பான், அவன இமயமேன்னு புகழ்ந்து இருப்பாங்க. வளர்மதி வயசுக்கு வந்ததா ஒரு ஃப்ளெக்ஸ் போர்டு "பூத்தது பூவின் பூகம்பம், இனி பின்தொடர்தல் ஆரம்பம்". முந்தாநேத்து முக்கு வீட்டு பெரியவர் ஒருத்தர் இறந்துட்டாருன்னு போனா அதுக்கும் ஒரு போர்டு "நிறுத்த மாட்டீரே பேச்சை, நிறுத்திவிட்டீரே மூச்சை". இப்படி வாசகத்த எழுத எப்படித்தான் யோசிக்கிறாங்களோ, எவனுக்கும் தெரியல. தக்காளி, தாஜ் ஹோட்டல ரூம் போட்டு யோசிச்சா கூட நமக்கும் ஒன்னும் தோணாது. தமிழ் சினிமாவுக்கு அடுத்து அம்பது வருஷத்துக்கு தேவையான பஞ்ச் டயலாக்க டிப்போ டிப்போவா கொட்டி வச்சிருக்கானுங்க இந்த டெர்ரர் டெவில்ஸ். இப்படி வாசகம் யோசிக்கவே எங்கேயாவது டியூஷன் போவானுங்களோ? நூத்தி அம்பது ரூபாய்க்கு ஒரு ஃப்ளெக்ஸ் போர்டுக்கு வச்சிட்டு, வாக்காளர் லிஸ்டுல இருக்குற அத்தனை பேரு போட்டோவையும் போட்டிருப்பானுங்க இந்த கொய்யாக்கா மண்டையனுங்க . முன்பெல்லாம் இந்த ஃப்ளெக்ஸ் போர்டுகளில் தவறாமல் இடம் பெறும் வார்த்தைகள் "கேடயமே, ராணுவமே, தென்றலே, புயலே, சிங்கமே, சிறுத்தையே". இப்போ ரொம்ப ஹைடெக்கா போயிட்டானுங்க; நேத்து எங்க தெரு கவுன்சிலர பத்தி ஒரு போர்டு பார்த்தேன் 'எங்கள் ஏரியாவின் Hydrogen Bomb'மே, ஆல் ஏரியாவின் Atom bomb'மேன்னு. என்னடா நியுசுன்னு விசாரிச்சா, தலைவரு வயித்து குடலை பட்டினி போட்டாலும் போடுவாராம், ஆனா கடலை சட்னி இல்லாம சாப்பிடமாட்டாராம். உங்களையெல்லாம் லத்திகா 2 எடுத்து, தனியா பாக்கவிடனுமடா வெட்டி பசங்களா.!

நானே தான்.!

ரத்த உதவி கேட்டு வரும் குறுந்தகவல்களை பார்வேர்ட் மட்டுமே செய்யமுடிகிறது நம்மால். செஸ்ஸையும் சீட்டையும் சக மனிதரோடு விளையாடாமல் கணிப்பொறியுடன் விளையாடிக் கொண்டிருக்கிறோம். அடுத்த வீட்டுக்காரன் பேர் தெரியாது ஆனா பேஸ்புக்ல ஆயிரம் நண்பர்கள் வைத்திருக்கிறோம். அம்மா / அப்பா மொபைல் நம்பரையே செல்போன் பார்த்து தான் சொல்ல முடிகிறது நம்மால். மருத்துவமனைகளின் பெயர்களைவிட சினிமா தியேட்டர்களின் பெயர்கள் அதிகம் தெரிந்து வைத்திருக்கிறோம். நெருங்கிய உறவினர்களுக்கு செய்யும் உதவியைக்கூட மனம் சுளித்தே செய்கிறோம். பஸ்ஸிலோ ரயிலிலோ பலரும் பார்க்க ரசித்து சிற்றுண்டி உண்ண நம்மால் முடிகிறது. அலைபேசியை நோண்டும் நேரம்கூட பக்கத்து வீட்டு குழந்தையை கொஞ்சுவதில்லை. நீண்ட கால நண்பர்களுக்கு சிறு கடனையும் சந்தேகத்தின் பேரிலியே தருகிறோம். ரோட்டில் படுத்து கிடக்கும் கடவுள் ஓவியத்தை மிதிக்காமலும், ஓவியனை மதிக்காமலும் போக கற்றுக் கொண்டோம். கதவை தட்டும் வாட்ச்மேனையும் சிறு சந்தேகமின்றி பார்ப்பதில்லை. வீட்டில் வேலைசெய்யும் அம்மாவை ஒரு முறைக்கூட நமக்கு முன் சாப்பிட வைத்ததில்லை. ஈமெயில், பேஸ்புக், ட்விட்டர், ஆர்குட் என தொள்ளாயிரம் பாஸ்வர்ட் நிறைத்திருக்கிறது நம் மூளையை, ஆனால் பெற்றவர்களின் பிறந்தநாள் தெரியாது. இப்படியாக, உண்மையில் நண்பா, நான் வாழ்கையை வாழவில்லை. வாழ்வதாய் நினைத்து தேய்ந்து வீழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.

மொபைலா மொபைலா.!!!

ரயில் ஹாரன், பஸ் ஹாரன், ஏரோப்ளேன் சத்தம், நிலத்தடி போர் போடும் வண்டி, இவை எல்லாத்தையும் விட டார்ச்சரான சவுண்ட் தருவது எது தெரியுமா மக்களே, அது சைனா மேக் செல்போனின் ரிங்டோன் தான்.

போனவாரம் ஓகே ஓகே படம் பாத்துகிட்டு இருந்தேன், நண்பர் உதயநிதி கஷ்டப்பட்டு ஹன்சிகாவ கரக்ட் பண்றப்போ, திடீரென 'புலி உறுமுது, இடி இடிக்குது' ' புலி உறுமுது, இடி இடிக்குது ' என நாலஞ்சு தடவை தியேட்டரில் 8.4ரிக்டேர் அளவு அதிர்வு வர மாதிரி ஒரு சத்தம், பக்கத்துல உட்கார்ந்து இருக்கிற பிகர்களுக்கு பாதுகாப்பு தர அவங்க இறுக்கி அணைச்சுக்கிட்டு எட்டி பார்த்தா, மொத ரோல, ஒரு டிப்பர் லாரி வாயன் கொரியன் மொபைல ரிங்டோனா அந்த பாட்டா வச்சிருக்கான்.

ரிங்டனோட மோசம், காலர்டோன். ஒரு குழாப்புட்டு மண்டையன் காலர்டோனா 'ஹா ஹ ஹா, போடா ஆண்டவனே என் பக்கம் இருக்கான்'னு பாட்சா பட டயலாக்க வச்சிருக்கான். ஏன்டா, இப்போ எங்ககூட மட்டும் என்ன அமிதாப்பச்சான இருக்காரு?

இந்த வருஷம் ஆடி மாசம் அம்மனுக்கு கூழ் ஊத்தறப்போ, எங்க தெருவுல குழாய் மைக்செட்டுக்கு பதிலா, இந்த சைனா மொபைலில் நாலஞ்சு எல்.ஆர்.ஈஸ்வரி பாட்ட போட்டு செலவ மிச்சம் பண்ணலாம்னு இருக்காங்க எங்க ஏரியா 'கதவை திற காத்து வரட்டும்' நற்பணி இயக்கத்தினர். சத்தம் எப்படி பார்த்தாலும் மூணு தெரு வரை Mute ஆகாம கேட்கும்.

செல்போனும் பண்டைய தமிழர் நாகரீகமும் என்று வருங்காலத்துல ஒரு புத்தகமே வந்தாலும் வரலாம், அந்தளவு செல்போனுல பேச பல வகையான பண்பாட்டை உருவாக்கி இருக்காங்க நம்ம மக்கள். அதுல கொஞ்சத்த இப்போ பார்ப்போம் மக்களே.

ரிலேடிவிட்டி தியரிய கூட புரிஞ்சுக்கலாம் நண்பா, ஆனா இதுவரை மொபைலில் அழைப்பு வந்தால், ஆம்பளைங்க வெளியே போய் ஏன் பேசறாங்க, பொம்பளைங்க ரூம்குள்ள போய் ஏன் பேசறாங்கன்னு இதுவரைக்கும் புரியல. ஒருவேளை, ஆண்களுக்கு அது (வெளியே௦)செல்'போன், பெண்களுக்கு அது (உள்ளே)செல்'போனோ?

'திருமலை' விஜய் மட்டுமல்ல, வாழ்க்கை ஒரு வட்டம்னு செல்போன் கூட நிரூபிக்குது. கல்யாணத்துக்கு முன்னால ஒரு ஆண் ஆர்வக்கோளாறுல ஒரு பொண்ணுக்கு அதிகம் அனுப்புற எஸ்.எம்.எஸ் "Where are you ? waiting ". கல்யாணத்துக்கு அப்புறம் அதே எஸ்.எம்.எஸ் தான், ஆனா இப்போ அதை பொண்ணுங்க அனுப்புவாங்க.

சின்ன வயசுல, ரேடியோவ முழுங்குன மாதிரி, சில பேரு செல்போன்ல அந்த கத்து கத்துறாங்க. ஏன்டா டேய், செல்ல ஆப்பண்ணிட்டு நீங்க பேசினாக்கூட எதிர்முனையில இருக்கிறவனுக்கு கேட்கும்டா, ஏன்டா எங்க காதுக்குள்ள வந்து கம்பிய காய்ச்சி உடுறீங்க. இந்த பொண்ணுங்க போன் பேசறது எவனுக்காவது கேட்டு இருக்காடா நூடுல்ஸ் தலையனுகளா. பொண்ணு பேசறது அந்த செல்லுக்கே கேட்காது.

வள்ளுவர் இன்னைக்கு இருந்திருந்தால் 'மிஸ்டு கால் கொடுத்து வாழ்வாரே வாழ்வார், மற்றவரெல்லாம் கால் பண்ணி காசு அழித்தே சாவார்'ன்னு குறள் எழுதியிருப்பாரு. பயபுள்ளைங்க செல் வாங்கி மொதல கத்துக்கிறதே மிஸ்டு கால் கொடுக்கத்தான். இருங்கடா இட்லி குக்கர் தலையனுங்களா, அடுத்த பட்ஜெட்ல மன்மோகன்சிங்கிட்ட சொல்லி, ஒரு ரிங் விட்டு கட் பண்ணினா ஒரு ரூவா பைன் போட சொல்றேன்.

ஒரு நோட்டிஸ ஐநூறு பிரதி எடுத்து ஆயிரம் பேருக்கு கொடுத்தா அங்காளபரமேஸ்வரி அருள்பாலிப்பான்னு சொல்லிக்கிட்டு திரிஞ்ச அதே கும்தலக்கா கொய்யாப்பழ குரூப்புதான், இன்னைக்கு தொழிநுட்ப புரட்சியால் ஒரு எஸ்.எம்.எஸ்ஸை அம்பது பேருக்கு அனுப்பினால் ஆஞ்சநேயர் அருள் தருவாருன்னு கிளப்பிகிட்டு திரியறானுங்க. உலகின் மோசமான தீவிரவாதிகள் அல்-உம்மாவில் எல்லாம் இல்லை, அவனுங்க நம்மகூடவே தான் இருக்காங்க, இலவச எஸ்.எம்.எஸ் ஆக்டிவேட் பண்ணின எல்லோரும் தான் அவனுங்க தான். காலையில் ஒரு குட் மார்னிங், மதியம் ஒரு குட் ஆப்ட்டர்நூன், சாயந்திரம் குட் ஈவ்னிங்னு நாள் முழுக்க ரன்னிங் கமெண்ட்ரி தருவானுங்க.

போன ஜென்மத்தில் பெரும் பாவம் பண்ணியவர்கள் பெண்களின் செல்போனில் கீ-பேடாய் பிறக்கிறார்கள்; என்னா அமுத்துடா டேய். ஒலி. ஒளியை விட வேகமாகமானது பொண்ணுங்க மெசேஜ் டைப் பண்ற வேகம். மெசேஜ் டைப்புவது மட்டும் ஒலிம்பிக்கில் இருந்தால், நிச்சயம் இந்திய பெண்கள் நாலஞ்சு தங்கப்பதக்கம் வாங்குவது நிச்சயம்.

ஒழுங்கா ஜட்டி போடுறாங்களோ இல்லையோ, பல பேரு செல்போனுக்கு ஸ்வெட்டர் போட்டு வச்சிருக்காங்க. ஜட்டியவாவது வாரம் ஒரு முறை மாத்துவாங்க, இந்த கவர் பாழடைஞ்சு சென்னை சூப்பர் கிங்க்ஸ் யூனிபார்ம் மஞ்சளா போனாலும் மாத்த மாட்டாங்க. இன்னமும் சில பேரு இருக்காங்க, செல்போனுக்கு வாக்கபட்டவங்க, கழுத்துல செல்போன தாலி மாதிரி தொங்க விட்டுட்டு அலையுவாங்க. அது என்ன போலீஸ் ஸ்டேஷன், ரயில்வே ஸ்டேஷன்ல சங்கிலி போட்டு கட்டியிருக்குற எவர்சில்வர் தம்ளாரா?

கேர்ள் பிரண்ட கடன் கேட்டாகூட ரெண்டு நாளைக்கு கொடுப்பானுங்க போல, ஆனா செல்போன பாத்துட்டு தரேன்னு சொன்னா போதும், ரெண்டு நிமிஷம் நோண்டிட்டு, எதையாவது அழிச்சுட்டு அப்புறம் தான் தருவாங்க. இருங்கடா நீங்க எல்லாம், ஒசாமாவோட ஒண்ணுவிட்ட பங்காளிங்கன்னு ஒபாமாகிட்ட போட்டு விடுறேன்.

ரோட்டுல நாலு பேர பாத்தா, அதுல மூணு பேரு பெவிகால் போட்டு ஒட்டுன மாதிரி தலையை தோள்பட்டை மேல சாய்ச்சு வச்சிட்டு போறான். என்னடா இது புது வகையான எலும்புருக்கி நோயான்னு பார்த்தா, வண்டி ஓட்டிக்கிட்டே செல்போன்ல பேசிக்கிட்டு போறானுங்க. அட பாவிங்க, வண்டி ஓட்டுறப்ப ரொம்ப பிடிச்ச woman 'னே கூப்பிட்டாலும் எடுக்காதீங்க, அவங்களே உனக்கு எமனாகிடுவாங்க.!

செல்போன்ல இருந்து ரெண்டு வொயர காதுல மாட்டிகிட்டு சில பேரு நாட்டுல சுத்திக்கிட்டு இருப்பாங்க. திடீரென பார்க்கிறப்போ, எதோ காது கேட்காம, மெஷின யூஸ் பண்ற மாதிரி இருக்கும். ஒரு தடவை பஸ்ல ஒருத்தர்கிட்ட சைகைல பேசி சண்டையே வந்திடுச்சு. இந்த சினிமாக்காரங்க தான் இப்படி பண்றாங்கன்ன, நமக்கெதுக்கு நண்பா நடிப்பெல்லாம்.

இந்தியாவில் பொய்களின் எண்ணிக்கையை அதிகரித்ததும் செல் தான். எங்க வரான்னு எவனையாவது கேளுங்க, முப்பது தடவை கேட்டாலும், " டர்னிங்ல இருக்கேன் மாப்ள', சிக்னல்ல இருக்கேன் மச்சான்'ன்னே தான் சொல்லுவான். போன பண்ணிட்டு சில அப்பாட்டக்கர்கள் யார்ன்னு சொல்ல மாட்டனுங்க. யாரு பேசறீங்கன்னு கேட்டா, 'நான்தான்'ன்னுப்பாங்க. இவனுங்க பெரிய எஸ்.பி.பாலசுப்ரமணியம், யேசுதாஸு இவிங்க குரலை பார்த்தே நாம கண்டுப்பிடிக்கனும். பானை வாயனுங்களா, மெசேஜ் அனுப்புற மாதிரி பாம் அனுப்ப முடிஞ்சா, உங்க காதுக்குள்ளையே குண்டு வச்சிருப்பேன்.

இந்த கம்ப்யூட்டர் ரெக்கார்டட் வாய்ஸ நிஜமுன்னு நம்புனவேல்லாம் உண்டு, " நீங்கள் தொடர்பு கொண்ட வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளார்'ன்னா, இவனுங்க 'சின்ன சண்டை தான், பரவாயில்லை கோவிச்சுக்காம உள்ள வந்து பேச சொல்லுங்க'ம்பானுங்க.!

இந்த கஸ்டமர் கேர் கால், அட்வர்டைஸிங் காலெல்லாம் எக்ஸ்ட்ரா இம்சைகள். 'ஹலோ, நாங்க ஓஸிஓஸிஓ பேங்க்ல இருந்து பேசுறோம், லோன் வேணுமா?' இதான்யா நான் அதிகமா செல்லுல கேட்ட வார்த்தைகள். ஆமா புள்ள, எனக்கும் லோனு வேணும், நாலு மெடிக்கல் காலேஜ், பத்து இஞ்சினியரிங் காலேஜ் கட்டலாம்னு இருக்கேன், லோன் தருவீங்களான்னு கேட்டேன், அதுக்கு அப்புறம் அந்த பொண்ணு இன்னவரைக்கும் கூப்பிடல.

இந்த செல்போன்கள் வந்தப்புறம், வீட்டு லேண்ட் லைன் போனால இருக்குற ஒரே நன்மை, செல்போன காணாம போயிட்டா, இதுல ரிங் விட்டு அத புடிக்கிறது மட்டும் தான்.!

சாப்பிடறப்போ, தூங்கப்போ, ஏன் பாத்ரூம் போறப்ப கூட செல்லோடையே அலையுறாங்க, இவங்க பொண்டாட்டியோட இருந்ததை விட போனோட இருந்தது தான் அதிகம்.!

நாட்டுல பல பேரு, செல்போன்ல எதுவுமே வராட்டியும் அடிக்கடி எடுத்து பார்க்கும் செலேரியா என்னும் நோயினால் பாதிக்கப்பட்டு இருக்காங்க. மீதி பேரு சம்பந்தமே இல்லாட்டியும் மெசேஜோ, போனோ பண்ணும் கால்ரா என்னும் நோயினால் பீடிக்கப்பட்டு இருக்காங்க. வரும் வருடங்களில் கிட்னி, லிவர், நுரையீரல் போல செல்போனும் மனிதர்களின் உடல் உறுப்புகளில் ஒன்றாக மாறிவிடும் என ஒரு கடுப்புகணிப்பு சொல்கிறது. செல்போன் என்பது வேகமாக தகவல் பரிமாறவும், தூரங்களை கடந்து விரைந்து பேசுவதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கருவி, இன்னைக்கு அதை வச்சு பேசுவதை தவிர எல்லாத்தையும் பண்ணிக்கிட்டு இருக்கோம்.!

யோகாசனம்.!

யோகாசனம் என்பது உடலுக்கும் உள்ளத்துக்கும் மட்டும் நல்லது தருவது அல்ல, அது உறவுக்கும் உணர்வுக்கும் நல்லது தருவதும் கூட . தொத்தலான திருமண வாழ்வும் பொத்தலாகாமல் இருக்க பின்பற்றவேண்டிய யோகாசனங்களில் முக்கியமானவைகளை பார்ப்போம் வறண்ட வாழ்கையை நொறண்டிக்கொண்டிருக்கும் கணவர்களே.

கஞ்சாசனாம் - வீட்டில் இருந்து வெளியே நண்பர்களை பார்க்க கிளம்பும் போது செய்யவேண்டிய ஆசனம் இது. வீட்டின் நாடு ஹாலில் மண்டை கமண்டலம் தரையில் முட்ட, தலைகீழாக நாலு நிமிஷங்கள் நிற்கவேண்டும். சட்டை, பேன்ட்டில் இருக்கும் ரூபாய் நோட்டுக்கள் முதல் எட்டணா, நாலணா சில்லறைகள் வரை வீட்டுக்கு உள்ளேயே சிதறிவிட வேண்டும். இது வெட்டி செலவு செய்யாதவர் என்ற பெயரை மனைவியிடம் பெற்று தரும்.

இளிப்பாசனம் - வாயை 8 செ.மீ விரித்து செய்யும் இந்த ஆசனத்தை மாமியாரை பார்க்கும் போது செயல்படுத்த வேண்டும், மச்சினியை பார்க்கும் போது செயல்படுத்த கூடாது.

சல்யூடாசனாம் - மனைவி சைடு உறவினர்கள் வரும்பொழுது செய்யவேண்டிய ஆசனம் இது. மனைவியின் உறவினர்கள் ஊரிலிருந்து கிளம்பும்போதே எஸ்.ஐயை பார்த்து ஏட்டைய்யா அடிக்கும் சல்யூட்டை போல அடிக்க ஆரம்பிக்க வேண்டும். பத்து நிமிஷ சல்யூடிற்கு ரெண்டு நொடிகள் ரெஸ்ட் எடுத்து கொள்ளலாம். இந்த ஆசனத்தை செய்யும் போது உடம்பை 45 டிகிரியில் வைத்துகொள்வது நல்ல ரிசல்ட் தரும்.

சரியாசனாம் - ஒரு கல்யாணமான ஆண் தன் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு பின்பற்ற வேண்டிய முக்கியமான ஆசனம் இதுதான். இந்த ஆசனத்தை எப்போ எப்படி செய்ய வேண்டுமென்றால், மனைவி ஏதேனும் வேலையோ, கருத்தோ சொல்லும் போது தலையை மேலும் கீழுமாக 130கி.மீ வேகத்தில் ஆட்ட வேண்டும். மனைவி மெளனமாக இருக்கும் போது கூட மெதுவாக நிற்காமல் ஆட்டிக்கொண்டிருப்பதும் தப்பில்லை.

ம்ம்ம்'மாசனம் - நீங்கள் கிரிக்கெட் பார்த்தாலோ, நியுஸ் பார்த்தாலோ, ஏதேனும் படித்துக்கொண்டிருந்தாலோ, அப்போ தான் மனைவிகள் தங்கள் தொணதொணப்பு வாயை திறந்து நிறுத்தாமல் பேசுவர். அப்போ நீங்கள் செய்யவேண்டிய எளிய ஆசனம் தான் இது. அதாவது அவர்களின் ஒவ்வொரு வாக்கியத்துக்கும் ம்ம்ம், ம்ம்ம் என சவுண்டு தரவேண்டும். அதுவும் புள்ளிவிவரம் சொல்லியபின் விஜயகாந்த் சொல்லும் 'ஆங்' போன்ற ஓசையில் சொன்னால் இன்னமும் ஓகே.

தாடையாசனம் - மனைவி புடவை எடுக்கும்போதோ, மேக்கப் பண்ணும் போதோ பொறுமையிழக்காமல் இருக்க, இரு கைகளையும் கன்னத்தில் முட்டக்கொடுத்து 90 டிகிரியில் முதுகை வைத்து பொறுமையாக உட்காரும் இந்த ஆசனத்தை செயல்படுத்த வேண்டும்.

அமுத்தாசனம் - இரவு பத்து மணிக்கு மேல் மனைவி தூங்க ஆரம்பிக்கையில், அவர்களின் இரு கால்களை, நம் இரு கைகளுக்கு கீழே வைத்து விட்டு விட்டு புடிக்க வேண்டும். இது அடுத்தநாள் காலை நல்ல காபி குடிக்க உதவும்.

இது மட்டுமின்றி, துணிமடிப்பாசனம், வீடு கூட்டாசனம், அலமாரி துடைப்பாசனம் என பல யோகாசனங்கள் உண்டு. அதற்கு முன் இவைகளை செயல்படுத்தி ரிசல்ட்டை பாருங்கள்.

US$ vs INR

ரம்பா தொடை போல மிக வலுவாக இருந்த இந்திய பொருளாதாரமும் ரூபாயின் மதிப்பும், பாட்டி சுட்ட வடையாக குறுகி போனதற்கு காரணம் தமிழர் உதயகுமார் கண்டுபிடித்த புதிய ரூபாய்க்கான சின்னத்தில் இருக்கும் வாஸ்து கோளாரென வடஇந்தியாவில் ஒரு கும்பல் கூவ ஆரம்பித்து இருக்கிறது. இவங்கள சும்மா விடலாமா, அதான் நம்ம பங்குக்கு ஒடிந்து நதியா போல இருக்கும் ரூபாயின் மதிப்பு நமீதா போல ஓங்குதாங்காய் எகிற வாஸ்து, அஸ்டாரலஜி , நியுமராலஜி, நேமாலிஜி, ராசிக்கல் ஜோசியர்களை தோண்டி துருவி நோண்டி நொங்கெடுத்து சில பல ஐடியாக்களை அள்ளி வந்திருக்கேன், இப்போ ஸ்டார்ட் மூஜிக்.

முதல, ரூபாய் நோட்டுல கடவுள் போன்ற காந்தி தாத்தாவ அச்சடிக்கிறதே தப்பாம், என்னாதான் அரைகுறையா அவரு டிரஸ் பண்ணியிருந்தாலும், ஒரு கவர்ச்சி மிஸ்ஸிங்காம். அதனால அம்பது ரூபாய் நோட்டுகளில் அமலாபாலையும், நூறு, ஐநூறு நோட்டுகளில் ஐஸ்வர்யா ராயையும், ஆயிரம் ரூபா நோட்டில் அனுஷ்கா போட்டோவையும் அச்சடிக்கணுமாம். அப்புறம் பார்த்தா ரூபாயின் மதிப்பு தாறுமாறா ஏறிடுமாம்.

நமது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பேருல மிகபெரும் தவறு இருக்காம். நியுமராலஜிப்படி அவரு பேர முரணாப் Figureஜி'ன்னு மாத்திட்டா, ஆட்டோமேட்டிக்கா ரூபாயின் மதிப்பு எகிறி, இந்திய பொருளாதாரம் கெட்ட குத்தாட்டம் போடுமாம்.

பிரபல வாஸ்து நிபுணர் வயலூர் வாய்க்காவாயன் கூற்றுப்படி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் பங்கு இருக்காம். அடுத்து வரும் ஆறு மாசத்துக்கு அவரு வாஸ்துபடி உள்பனியன சட்டைக்கு மேலே அணிந்து வாழ்ந்தா ஆசை அஜித் மாதிரி இருக்கும் ரூபாய் மதிப்பு அட்டகாசம் அஜித் மாதிரி ஆயிடுமாம்.

இந்தியா ரூபாய்கள் அச்சடிக்கப்படும் நாசிக் நகர பேரே சரியில்லையாம், ஒன்னு நாசிக்ங்குற பேர Classic'ன்னோ Music'ன்னோ மாத்தனுமாம், இல்லை அந்த நேஷனல் security அச்சகத்த அல்லேக்கா தூக்கி மதுரை ஆதீனத்துக்குள்ள வைக்கணுமாம். அப்புறம் காத்து கருப்பு அண்டாம ரூபாயின் மதிப்பு நட்டகுத்தலா நிக்குமாம்.!

எண்ணூரை சேர்ந்த நியுமராலஜி நிபுணர் நம்பர்நாதன் கூறுகையில், எல்லா ரூபாய் நோட்டுகளின் சீரியல் நம்பர்களும் கூட்டுத்தொகை 9 வருவது மாதிரி அமைத்து அச்சடித்தால், நல்ல முன்னேற்றம் கிடைக்குமாம்.

தேசிய வளர்ச்சியை கொண்டே இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் ரூபாயின் மதிப்பும் இருப்பதால், அதனை செயல்படுத்தும் குழுவை 'திட்ட கமிஷன்' என சொல்ல கூடாதாம், மாறாக 'வாழ்த்து கமிஷன்' என அழைத்துக்கொள்ளலாம். மேலும் அதன் துணைத்தலைவர் அலுவாலியா தன பெயரை சிரிப்புவாலியா என மாற்றிக்கொண்டு தினம் 1000 தடவையென 48 நாள் தொடர்ந்து எழுதிவந்தால் ரூபாயின் மதிப்பு எவரெஸ்டின் உயரத்திற்கு போகுமாம்.

இதையெல்லாம் விட குறுக்கு வழி, ஒரு தடவ சொன்னா நூறு தடவை பண்ணும் சூப்பர்ஸ்டாரின் படத்தை நோட்டுகளில் அச்சடித்தால், ஒரே நாளில் நூறு மடங்கு ரூபாயின் மதிப்பை உயர்த்திவிடலாம்.

கோதாவரி, கோட்ட கிழிடி.!

ஆயக்கலைகள் அறுபத்திநான்கு அல்ல, 65'வதாக ஒரு கலையும் கொண்டிருக்கிறோம் நாம். அது சீட் பிடிப்பது. இந்தியாவெங்கும் தவணைமுறையில் நடக்கும் பானிபட் யுத்தம் சீட் பிடிப்பது. 'கோதாவரி, கோட்ட கிழிடி' என விசு மாதிரி பஸ்ஸில், அன்ரிசர்வுட் ரயிலில், ரேஷன் கடை கியூவில் என ஆரம்பித்து ஆஸ்பிட்டல் செருப்பு கழட்டுவது, தியேட்டரில் டூ-வீலர் நிறுத்துவது வரை இந்த கொஸக்சி பசப்புகழ்கள் பண்ணும் இம்சைகளை பொறுமையின் சிகரம் மன்மோகன் சிங்கால் கூட பொறுக்க முடியாது. கர்சீப், துண்டு, தண்ணீர் பாட்டில், செருப்பு - இவையெல்லாம் இந்த முன்ஜாக்கிரதை மைக் டைசன்கள் பயன்படுத்தும் பேரழிவு ஆயுதங்கள். பஸ்ஸில் சீட் பிடிக்கவே திப்புசுல்தான் காலத்து துவைக்காத துண்டை வச்சிருக்காங்க சிலர். கட்டண கழிப்பிடம் போய் அப்போதான் குளித்துவிட்டு வரும் செருப்பையும் சீட் மேல போட்டு இடம் புடிச்சு வச்சிருப்பாங்க இந்த படு பாவிங்க; அதுல இருந்து வர வாசனையை கண்டு அமெரிக்காகாரன் நாம அணுஆயுதம் வச்சிருக்கோம் என்று மூன்றாம் உலகப்போர் தொடுத்தாலும் தொடுத்துடுவான். பஸ், பஸ் ஸ்டாண்ட் போறதுக்குள்ள, பின்னாடியே பைக்குல தொரத்திகிட்டு வந்து ஜன்னல் வழியா துண்ட ராக்கெட் விடும் விஞ்ஞானிகள் நம்ம நாட்டுல ரொம்ப அதிகம். இப்படி சீட் பிடிக்கிற, அல்லாக்க படுத்து ஆப்பம் சுடுறவங்கள இருக்காங்கன்னா, அவன் புடிச்ச சீட்ட 'உவ்வ்வே'ன்னு வாந்தி வர மாதிரி மிமிக்ரி பண்ணி, ஜன்னல் சீட்ட ஆக்கரமிப்பு பண்ற மல்லாக்க படுத்து முறுக்கு சுடுறவனும் இருக்கான்.பொண்டாட்டி முப்பது ரூபா மொய் எழுதிகிட்டு இருக்கறப்ப, கல்யாண பந்தியில புருஷன்காரன் மொத்த குடும்பத்துக்கும் இடம் புடிச்சு வச்சிருப்பான். தியேட்டர்ல டூ-வீலர் நிறுத்தப்போனா நம்ம காலு இடைவெளியில் எவன் வண்டி முன் சக்கரமாவது சொருகி நிற்கும். என் கேள்வியெல்லாம், இப்படி அவசர அவசரமா சீட் புடிச்சு வெறும் தரையில நீச்சல் அடிக்கிறாங்களே, இதே வேகத்த, மிலிட்டிரிக்கு ஆள் எடுக்கும்போதோ, ரத்ததானம் செய்யும்போதோ மட்டும் ஏன் எரும சாணில மூஞ்சி பேசியல் பண்ணின மாதிரி இருக்காங்க. டேய் டெரிபிக் டெர்ரர் கைய்ஸ், ஒரு நாள் எப்படியும் காத்துல மூச்ச, முட்லி விடத்தான் போறோம், அதுக்காக இப்பவே சுடுக்காட்டுலயோ, மின்சார மயானத்துலையோ இடம் புடிச்சு வைங்க, இல்லைனா, நீங்க இடம் புடிக்கிற பார்த்தா கடிச்சு வச்சிடுவோம்.!

IPL 2012

தட்டு தடுமாறி தாறுமாறா உருமாறி தள்ளாடும் சென்னை அணி, IPL இறுதிபோட்டிக்கு நுழைந்து கோப்பையை தக்கவைக்க சில யோசனைகள்.

சென்னை அணிக்கு மட்டும் இரண்டு முறை பேட்டிங் பிடிக்கும் வகையில் ரெண்டு இன்னிங்க்ஸ் ஆட சொல்லலாம்.
சென்னை பந்துவீசும்பொழுது, எதிரணி மட்டைவீச்சாளர்கள் பேட்டை தலைகீழாக, ஹேண்டில் கீழே இருக்குமாறு பேட் செய்ய ஆணையிடலாம்.
சென்னை அணி பீல்டிங் செய்யும்பொழுது, One Pitch / Two Pitch கேட்ச் பிடித்தாலே எதிரணி பேட்ஸ்மேன் அவுட்டென சொல்லலாம்.
சென்னை பந்துவீசும்பொழுது, ஆறு ஸ்டெம்ப்களாக மாற்றி, ஒவ்வொன்றுக்கும் அரையடி இடைவெளி விட்டு, பந்து உள்ளே புகுந்தாலே அவுட் என சொல்லலாம்.
சென்னை அணி பேட்டிங் செய்யும்பொழுது எதிரணி பவுலர்களை நெஹ்ரா, விராட் கோலி மற்றும் பியுஷ் சாவ்லா முகங்களை முகமூடி போல அணிந்து பந்து வீச சொல்லலாம்.
எதிரணி பேட் பிடிக்கும்போது, பவுண்டரி கயிறை 20 மீட்டர் தள்ளி வைக்கலாம்.
சென்னை பேட் பிடிக்கும்போது, பவுண்டரி கயிறை 40 மீட்டர் உள்ளே தள்ளி வைக்கலாம்.
சென்னை அணியின் ஒவ்வொரு மூன்று அப்பீலுக்கும் அறுதல் பரிசாக அம்பெயர்கள் ஒரு அவுட் கொடுக்கலாம்.
சென்னை பவுலிங் செய்யும்பொழுது ஓவருக்கு 4 பாலும், அதை ஈகுவல் செய்ய சென்னை பேட் பிடிக்கும்போது ஓவருக்கு 8 பாலும் போடலாம்.
சென்னை அணி பேட் பிடிக்கும்போது, எதிரணி பீல்டர்கள் எல்லோரும் Off side பக்கமே பீல்டிங் நிற்க சொல்லலாம்.
எதிரணி ஒரு விக்கெட் இழந்தாலே, ஆல் அவுட் என அம்பயரை சொல்ல சொல்லலாம்.
எதிரணி பவுலர்கள் 10 கி.மீ வேகத்துக்கு மேல் பந்துவீசக்கூடாதென கட்டுப்பாடு விதிக்கலாம்.
மிக முக்கியமாக, எதிரணி முதலில் பேட்டிங் பிடித்தால் Power Play முடிந்தவுடன் டிக்ளேர் செய்ய சொல்லலாம்.
இது எதுவுமே சரிப்பட்டுவரவில்லை என்றால், டெல்லி, கொல்கத்தா அணிகளின் பெயரை சென்னை என மாற்றிவிடலாம்.

எப்படி எப்படி?

2020ல இந்தியா வல்லரசாக உயிரை கொடுத்து உழைப்பவங்க, இந்த புத்தகம் எழுதறாங்க தான். அதிலும் இந்த 'எப்படி?' டைப் புத்தகங்களின் உதவி உன்னதமானது. தொல்காப்பிய பூங்காவின் சேல்சை தொடுமளவு விஞ்சி நிற்கிறது மாங்கா தொக்கு செய்வது எப்படிங்கிற புத்தகம். இந்தி கற்பது எப்படி? கோலம் போடுவது எப்படி? கும்மியடிப்பது எப்படி? வாழ்வது எப்படி? வயித்தெரிச்சல் படுவது எப்படி? சமைப்பது எப்படி? சாவது எப்படி? இப்படி பல பல எப்படி.!!! நம்ம களவுத்துறை உதவியுடன், பிரபலங்கள் இப்போ வாசித்துக்கொண்டிருக்கும் 'எப்படி?' டைப் புத்தகங்களின் விவரங்கள் உங்கள் பார்வைக்கு, என்சாய்..! தோனி - விளம்பரத்தை குறைத்து விளையாடுவது எப்படி?
நெஹ்ரா - 10 நாளில் பவுலிங் போடுவது எப்படி?
கேப்டன் - புள்ளிவிபரம் அள்ளி விடுவது எப்படி?
ராமதாஸ் - 2016ல் ஆட்சி அமைப்பது எப்படி?
நித்தியானந்தா - 5 நாளில் ஆதீனம் ஆவது எப்படி?
வைகோ - அழுகாமல் இருப்பது எப்படி?
அம்மா - பதவி பல்லாங்குழி விளையாடுவது எப்படி?
தமிழக மக்கள் - இருட்டில் வாழ்வது எப்படி?
அன்புமணி - வென்னீர் குடித்து வெறியேத்துவது எப்படி?
பிரதமர் - வாயை திறந்து வார்த்தை விடுவது எப்படி?
ஜனாதிபதி - உலகம் சுற்றுவது எப்படி?
தா.பாண்டியன் - புண்பட்ட நெஞ்சை புன்னகைக்க வைப்பது எப்படி?
சரத்குமார் - கோரஸ் பாடுவது எப்படி?
ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் - 30 டிகிரியில் குனிந்து கும்பிடுவது எப்படி?
ராகுல் காந்தி - தினமும் சாப்பாட்டுக்கு வழி செய்வது எப்படி?
தனுஷ் - Anthem பாடுவது எப்படி?
எடியூரப்பா - 3 நாளில் முதல்வாரவது எப்படி?
நமிதா - புடவை கட்டுவது எப்படி?
கலா மாஸ்டர் - கிழி கிழின்னு கிழிப்பது எப்படி?
பவர் ஸ்டார் - பயமுறுத்தாமல் நடிப்பது எப்படி?
ஞானதேசிகன் - குறட்டையை தடுப்பது எப்படி?
தமிழக காங்கிரஸார் - இறுக்கமாக வேட்டி கட்டுவது எப்படி?

ஒலிம்பிக் 2012

ஒலிம்பிக் போட்டிகள் ஒரு வழியாக வந்துவிட்டன, ஊழலில் சிக்கித்தவிக்கும் இந்திய ஒலிம்பிக் வாரியத்திற்கு யாரை எதுக்கு அனுப்பலாம்னு ஒரு யோசனை, அம்புட்டுதான்...

துப்பாக்கிசுடும் போட்டி - 'பரமக்குடி' புகழ் தமிழக காவல் துறை
ஜூடோ சண்டை - 'வேட்டி உருவு' புகழ் தமிழக காங்கிரஸார்
பளு தூக்குதல் - நமீதாவோடு நடித்த கதாநாயகன்கள்
தட்டு எறிதல் - கோவக்கார தமிழக மனைவிகள்
கத்திச்சண்டை - ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள்
ஜிம்னாஸ்டிக்ஸ் - 'மல்டி லெவல் பல்டி' பா.ம.க குரூப்ஸ்
நீச்சல் போட்டி - பண்ருட்டியார் தலைமையில் தேமுதிகவினர்
நடைப்போட்டி - அண்ணன் வைகோவை விட்டா வேறு யாரு?
சைக்கிளிங் - அண்ணன் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன்
குத்துச்சண்டை - 'பத்ரி' விஜய்
தடகளம் - தமிழக தெருக்களை தெரிந்து வைத்திருக்கும் கம்யூனிஸ்ட்கள்
குதிரையேற்றம் - சூப்பர் சானிக் விமாமனதிலேயே போன பிரதீபா பாட்டீல்
கூடைபந்து - கூட இருந்தே குழிபறிக்கும் கர்நாடக பா.ஜ.க
வில்வித்தை - சின்ன ஆதீனம், பெரிய ஆதீனம்
பீச் வாலிபால் - நடிகை சோனா
கால்பந்து - தமிழக ஐ.ஏ.எஸ் / ஐ.பி.எஸ் அதிகாரிகள்

முயற்சி 1

ஒரு பந்தயம், இந்த குறுங்கட்டுரையை நீங்கள் இரண்டாம் முறை படிப்பீர்கள்.
கண்கள் முக்கியம். இந்தியாவின் பலமே நல்ல நல்ல கண்கள் தான். கண்கள் மட்டுமில்லையென்றால் இந்த பூலோகத்தில் மனிதர்கள் வாழ்வதே வீண். பார்த்தவுடனே பிடித்து போய்விடும் சில கண்களை, பார்க்க பார்க்க பிடித்து போகும் சில கண்களை. கண்கள் எப்பொழுதும் அழகு தான் எனினும் , சில கண்களுக்கு கண்ணாடி அழகு, சில கண்களுக்கு கண்ணாடி போடாமல் இருப்பதே அழகு. கண்களே அழகு, அதிலும் கண்கள் சிரிப்பது சிதறடிக்கும் அழகு. ஒவ்வொரு கண்ணும் அழகு தான் எனினும், பார்த்தவுடன் கிறக்கத்தை உண்டு பண்ணும் கண்களும் உண்டு இந்த தேசத்தில். குற்றம் செய்த குறுகுறுக்கும் நெஞ்சுள்ள ஆண்கள் கண்களை பார்த்து பேசவே பயப்படுமளவு பவர் இருக்கிறது கண்களிடம். ஆண்களுக்கு ஒரு சாபம் உண்டு, அது கண்களை பார்த்து எந்நாளும் மனதில் ஓடும் எண்ணங்களை கண்டறிய முடியாததே அது. உண்மையான ஆண்மகன், கண்களின் கண்ணீரை கண்டு சும்மா இருக்க மாட்டான், ஏனெனில் கண்கள் கலங்கப்படுவது கண்களுக்கும் அழகில்லை, கொண்டிருக்கும் ஆண்களுக்கும் அழகில்லை. அங்கும் இங்கும் அலைபாயும் கண்கள் சிறியன, பெரியன, பலவகை; ஆனால் சந்தேமாய் பார்ப்பதில் எல்லா கண்களும் ஒரே வகை. இப்படிப்பட்ட அழகான கண்களிடம் பிடிக்காத ஒரே விஷயம், பல நேரம் வேறு கண்கள் அழுவதை பார்த்துக்கொண்டு தொலைக்காட்சி மெகா சீரியல்களில் மூழ்கிவிடுவது தான். கண்களிடம் ஒரே சிறு குறை, அவைகளின் பார்வைகள் டிவிகளின் மேல் விழுவதை விட புத்தகங்கள், பத்திரிக்கைகள் மேல் இன்னமும் கொஞ்சம் விழலாம்.
பின்குறிப்பு :
மன்னிக்கவும், சிறிது தவறு நடந்து விட்டது, இங்கு பெண்கள் என அச்சடிப்பதற்கு பதிலாய், கண்கள் என அச்சடிக்கப்பட்டு விட்டது.

சேலம் சித்தர்.!

தமிழ்கூறு நல்லுலக தமிழ்மகன் எவனாவது தனித்து விடப்பட்ட தனியார் தொலைகாட்சிகளில் சித்த வைத்திய நிகழ்சிகளை அரைமணி நேரம் பார்த்தான், கபாலம் உடைந்து சுத்த பைத்தியமாவான். எட்டு தலைமுறையா இருநூறு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவரும் முந்தாநேத்துதான் புழலில் இருந்து ரிலீசானவரும் போட்டி போட்டுக்கிட்டு லேகியம் விக்கிறாங்க. இந்த காலத்து பசங்க வாத்தியாருங்ககிட்ட வாங்கின திட்டவிட இந்த மாதிரி வைத்தியருங்ககிட்ட வாங்கின திட்டுதான் அதிகம். இவங்க நிகழ்ச்சிய பார்க்கிறப்ப, ஏழு புள்ள பெத்தவன்கூட தன் மேலயே சந்தேகப்படுவான். பத்து நிமிஷ நிகழ்ச்சியில் 2458 பேரன்களும், 1982 மகன் போன்ற வாலிபர்களும் என்ற வார்த்தைகளை உபோயோகப்படுத்தி லிம்கா புக் ஆப் ரிகார்ட்ஸ்சில் இடம்பெற்றார் டைனமிக் டெரர் டாக்டர் ஒருவர். சில வைத்தியர்கள் சிகிச்சைக்கு வருபவன் மூஞ்சிய பார்த்தே பிரச்சனைய கண்டுப்பிடிச்சுடுவாங்களாம். நரம்படி நாராயணன், கண்ணுல மைக்ரோஸ்கோப்போ டெலஸ்கோப்போ குமிச்சி வச்சிருப்பாரு போல. தமிழ்நாட்டுல பண்ணிக்காயச்சலுக்கு அப்புறம் வேகமா பரவறது இவீங்கதான். பிரதீபா பாட்டீல் பெரியம்மாவ விட அதிகமா டூர் போற அப்பாடக்கர்ஸ் இந்த வைத்தியருங்க. நல்ல டாக்டர தேடி நாடே வருமைய்யா, நீ ஏன்யா ஊர் ஊரா உடுக்க அடிக்க போற? பிரதி மாதம் ஏழாம் தேதி பாண்டிசேரி விஜயம், பிரதி மாதம் ஒன்பதாம் தேதி பெங்களூர் விஜயம், இப்படியே சுத்துங்க நைனா, பிரதி மாதம் எதோ ஒரு நாள் கண்டிப்பா புழல் விஜயம் உண்டு மக்கா. பொண்டாட்டி கண்ணு குருடு, புருஷன் காது செவுடுங்கிற கதையா, இவிங்க நிகழ்ச்சிய மட்டும் அஞ்சு நிமிஷம் mute பண்ணி பாருங்க, அய்யா பஸ்சுக்கு காசில்லையா, பத்து ரூபா கொடுங்கையான்னு சர்ச் பாதர்கிட்ட பாவமன்னிப்புக்கு கெஞ்சுற மாதிரியே இருக்கும். மக்களே, இவீங்கள பார்த்த பரிசோதனையெல்லாம் நடக்காது, பர்ஸுக்கு வேணா சோதனை நடக்கும். அரசாங்கம் இவிங்க மருந்த வாங்கி டெஸ்ட் பண்ணனும், மருந்து ஏமாத்து வேலைன்னா கூட மன்னிச்சு விட்டுடலாம், ஆனா லேகியம் பவருன்னா, மக்கள் தொகை பெருக்கத்துக்கு இவங்க தான் காரணமுன்னு புடிச்சு உள்ள போடணும் யுவர் ஹானர்.!

புதிய ஜனாதிபதி.!

வரும் ஜூலை மாதம் இந்தியாவிற்கான புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற போகிறதாம். இப்பவே எல்லா கட்சிகளும் மண்டைய பிச்சுகிட்டு கிடக்கிறாங்க. நல்லெண்ண, விளக்கெண்ண, கடலெண்ண, எவன் எக்கேடு கேட்டு போனா எனக்கென்னன்னு இல்லாம, முப்படை தளபதிக்கான தேர்தலில் எதோ நம்மாலான நாலு கேன்டிடேட்களை பரிந்துரைத்து நாமும் புண்ணியம் தேடிக்கொள்வோம்.

முதலாவது கேன்டிடேட் கேப்டன்; உலகத்தில் உள்ள 214785 தீவிரவாதிகளையும் அறிந்தவர் இவர், அத்தனை தீவிரவாதிகளுக்கும் தெரிந்தவர் இவர். தாடி வைத்தவன் மட்டுமே தீவிரவாதியல்ல என்ற பேருண்மையை கண்டறிந்த புள்ளி விபர கில்லி இவர். பாகிஸ்தான் முதல் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பர்மா, பூட்டான் என பயோரியா பல்பொடி விற்கும் நாடுகள் வரை சென்று தீவிரவாதிகளை பிடித்த பெருமைக்குரியவர். பாகிஸ்தானுடன் போர்வந்தால் வாஹா எல்லை சுவரில் இடது காலை வைத்து வலது காலால் எட்டி உதைத்தே பாக். ராணுவத்தை குதறி கொத்து புரோட்டா போடும் ஆற்றல் மிகுந்தவர். இவரது காலுக்கு மட்டும் Missed Call 'ஏ ஆகாது. இவர் நாக்கை துருத்தி வைத்திருக்கும் போட்டோவை இந்திய எல்லையில் வைத்தால், சீன ராணுவம் நம் பக்கமே எட்டி பார்க்காது.

அடுத்தது பாவகவுடா; உண்மையில் ஜனாதிபதி பதவிக்கு மிகசிறந்த போட்டியாளர் இவர். ஐம்பதாயிரம் பேர் அமர்ந்திருக்கும் மெகா மாநாட்டிலும் கச்சிதமா கண்மூடி தூங்கும் திறமை வாய்ந்தவர். சட்டை பாக்கெட்டில் இடியே விழுந்தாலும் சிறு கொட்டாவியுடன் கடந்து போகும் நியாயஸ்தன். IPL விளையாடும் மைதானத்தில் கூட மயங்கி தூங்கும் மானஸ்தன். எப்போதும் பொங்கல் தின்று தூங்குவது போல முகம் வைத்திருக்கும் இவரிடம் பேசி என்ன பியோஜனம் என்று பாகிஸ்தான் கூட தன் ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ளும்.

மூணாவது குப்புறமணிய சாமி; உகாண்டாவில் ஒட்டகம் செத்ததற்கு ஒபாமா எப்படி காரணம்? பெங்களூர் பல்கலைகழகத்தில் பாத்ரூம் சரியாக கழுவப்படாத பின்னணி என்ன? அண்ணா நகர் முதல் தெரு டிரைனேஜ் அடைச்சதுக்கு பின் இருக்கும் ஆஸ்திரேலியாவின் சதி என உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை அணைத்து நிகழ்வுகளுக்கும் சாட்சிகளை சட்டைப்பையிலும் பேன்ட் பாக்கெட்டிலும் வைத்துக்கொண்டு அலைபவர். ஐநா சபைக்கே தலைவராகும் திறமை பெற்றவர் இவருக்கு பிரச்சனையே 17.3 செ.மீ இருக்கும் வாய்தான்.

நான்காவது நொந்தபாலு; இவர் உலக உருவபொம்மை உருவாக்குவோர் சங்கத்தின் வாழ் நாள் சாதனையாளர் விருது வாங்கிய பெருமைக்குரியவர். இதுவரை இவரது 478563 கொடும்பாவிகள் எரிக்கப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் முறியடிக்கப்படாத சாதனையாக விளங்குகிறது. பொறுமையின் சிகரமான இவர், சீனாவை குறுகுறுவென உத்துபார்த்தே ஓட வைக்கும் திறமை வாய்ந்தவர்.

ஆயிரம் பேர் வந்தாலும் நம்ம டின்மோகன் சிங் அவர்களை போல ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவரை தேர்ந்தெடுப்பது கடினம். அவர் பெயரையும் சீட்டில் பேர் எழுதி குலுக்கி போட்டு பார்க்கலாம்.

Match the followings.!

ஒரு சின்ன பொதுஅறிவு போட்டி. எல்லாம் நாம சின்ன வயசுல பரிட்சையில எழுதியதுதான். கீழ்க்கண்ட வாக்கியங்களை சரியான விடைகளோடு பொருத்தனும். பத்துக்கும் மேற்பட்ட சரியான விடைகளை பொருத்தினால் தற்கால நிகழ்வுகளால் ரொம்பவே நொந்து போயிருக்கீங்கன்னு அர்த்தம், பார்க்கலாம்.! விடைகள் கீழே.!

1.தமிழக பாஜக - A. ஐ ஆம் கவுன்சிலர் ஸ்னேக் பாபு ஸ்பீக்கிங்
2.நித்தியானந்தா - B. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான், ரொம்ப நல்லவன்டா
3.தா.பாண்டியன் - C. இப்பவே கண்ண கட்டுதே
4.அம்மா - D. வருத்த படாத வாலிபர் சங்கம்
5.மக்கள் - E. கைய புடிச்சு இழுத்தியா? என்ன கைய புடிச்சு இழுத்தியா?
6.ராமதாஸ் - F. உசுபேத்தி உசுபேத்தியே உடம்ப ரணகள படுத்திடுறாங்க
7.விஜயகாந்த் - G. போச்சா, சோனமுத்தா போச்சா?
8.TNEB - H. லாங்குல பார்த்தா டெரர், கிட்டத்துல பாத்தா காமடி
9.தமிழ் திரைத்துறை - I. எதையும் பிளான் பண்ணி பண்ணனும்
10.தமிழக போலீஸ் - J. வேணாம், வலிக்குது, அழுதிடுவேன்
11.அபிஷேக் சிங்வி - K. வட போச்சே
12.வைகோ - L. பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கு
13.சுப்ரமணிய சாமி M. ரிஸ்கு எடுப்பது எனக்கு ரஸ்கு சாப்பிடுற மாதிரி
14.இடைதேர்தல் - N. மாப்பு, வச்சுட்டியே ஆப்பு
15.எஸ்.ஏ.சந்திரசேகர் - O. ஆணியே புடுங்க வேணாம்
16. தேர்தல் ஆணையம் - P. திஸ் இஸ் டிரங்கன் மங்கி ஸ்டைல்

விடைகள் :
1 - D, 2 - E, 3 - G, 4 - B, 5 - J , 6 - O, 7 - A, 8 - C , 9 - N,
10 - L, 11 - P, 12 - F, 13 - H, 14 - M, 15 - K, 16 - I

நக்கீரா.!

தருமி : சொக்கா, சொக்கா, 'கையில் ஒரு கோடி, ஆர் யூ ரெடி'க்கு அழைப்பு வந்திருக்கு, ஒரு கோடிய ஜெயிச்சா, ரெண்டு மாசம் மளிகை சாமானம் வாங்கிடுவேன், அப்படியே ஒரு மாச கரண்ட் பில் கட்டிடுவேன், மிச்ச பணத்துல ரெண்டு மெதுவடை வாங்கி வயித்த கழுவிடுவேன். எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா? ஐய்யோ, சொக்கா, சொக்கா, அருள் புரிய மாட்டாயா?
சொக்கர் : சிட்டிசனே..
தருமி : Who is the dog voice? யாருய்யா அது?
சொக்கர் : Yeah, its me; அழைத்தது நான் தான்.!
தருமி : ஏன் அழைச்சீங்க? யாருங்க நீங்க?
சொக்கர் : ஒவ்வொரு Friend 'ம் தேவை மச்சான் விளம்பரம் பார்க்கலை? நான் உன் நண்பனே.
தருமி : நம்ம ஜாதியா? உங்களுக்கும் 'கையில் ஒரு கோடி, ஆர் யூ ரெடி'க்கு அழைப்பு வந்திருக்கா?
சொக்கர் : ஒரு கோடிக்கான எல்லா கேள்விகளும் தெரிந்துவிட்டால் நீ ஜெயித்துவிடுவாய் அல்லவா?
தருமி : ஆஹா, அந்த லிஸ்ட் மட்டும் கிடைச்சா, பட்டய கிளப்பிடுவேன், ஆனா உங்கள நம்பறமாதிரி இல்ல.
சொக்கர் : என் திறமை மீது சந்தேகம் இருந்தால், என்னை டெஸ்ட் செய்து பாரேன், உனக்கு திறமையிருந்தால்.
தருமி : கொய்யாலே, என்கிட்டயே லந்து விடுறீங்களா?
சொக்கர் : கேள்விகளை நீ கேட்கிறாயா அல்லது நான் கேட்கட்டுமா?
தருமி : ஊஹூம்! நானே கேட்கிறேன், எனக்குக் கேட்க மட்டும் தான் தெரியும்.!
சொக்கர்: கேளும்!
தருமி : பிரிக்க முடியாதது எதுவோ?
சொக்கர் : அம்மாவும் சின்னமாவும்.
தருமி : பிரிந்தே இருப்பது?
சொக்கர் : அத்வானியும் மோடியும்.
தருமி : மாறிக்கொண்டே இருப்பது?
சொக்கர் : டாக்டர் ராமதாஸ்
தருமி : மாறாமல் இருப்பது?
சொக்கர் : விஜய.டி.ராஜேந்தர்
தருமி : சொல்லக்கூடியது?
சொக்கர் : கரண்ட் போகும் நேரம்
தருமி : சொல்ல முடியாதது?
சொக்கர் : கரண்ட் வரும் நேரம்
தருமி : குனிந்தே இருப்பது?
சொக்கர் : தமிழக அமைச்சர்கள்
தருமி : குனியாமல் இருப்பது?
சொக்கர் : பீல்டிங்கின் பொது சென்னை டீம் வீரர்கள்
தருமி : தெரியாமல் ஏமாறுவது?
சொக்கர் : பொதுத்தேர்தல்
தருமி : தெரிஞ்சே ஏமாறுவது?
சொக்கர் : இடைத்தேர்தல்
தருமி : மறக்க கூடியது?
சொக்கர் : ஆவின் பால்
தருமி : மறக்க முடியாதது?
சொக்கர் : அமலா பால்
தருமி : ஒரு நாள் கொன்றால்
சொக்கர் : எமன்
தருமி : ஒவ்வொரு நாளும் கொன்றால்
சொக்கர் : வுமன்
தருமி : மேஜை தட்டுக்கு?
சொக்கர் : தமிழக சட்டசபை
தருமி : கில்மா பிட்டுக்கு?
சொக்கர் : கர்நாடக சட்டசபை
தருமி : அத்தியாவசிய தேவை?
சொக்கர் : பெரியவங்களுக்கு டாஸ்மாக்
தருமி : அடிப்படை தேவை?
சொக்கர் : பசங்களுக்கு பாஸ்மார்க்
தருமி : இந்தியாவில் அழிக்க முடியாதது?
சொக்கர் : காதல்
தருமி : இந்தியாவில் ஒழிக்க முடியாதது?
சொக்கர் : ஊழல்
தருமி : ட்ரென்டுக்குக்கு?
சொக்கர் : 'அங்காடி தெரு' அஞ்சலி
தருமி : கரண்டுக்கு?
சொக்கர் : கண்ணீர் அஞ்சலி
தருமி : அய்யோ போதும் போதும், ஆள விடு, நீர் தான் உண்மையில் அடுத்த பிரபுதேவா.!

பச்ச, மஞ்ச, கருப்பு, ஆரஞ்சு தமிழன்.!

15 ஆயிரம் ரூபாய்க்கு மொபைல் வாங்கி அதில் அடுத்தவனுக்கு missed call கொடுத்தால், பஸ்ஸில் ஆரம்பித்து விமானம் வரை ஜன்னலோர சீட்டில் உட்கார வேண்டும் என ஆசைபட்டால் , தேங்கா சட்னி தொட்டுக்காம இட்லி தோசை திங்கமுடியாதுன்னா, உளுந்து வடைய தின்னுகிட்டே ஒபாமா பண்றது தப்புன்னு ஒலக அரசியல் பேசினா, 10 லட்ச ரூபா காரு ரெண்டு ரூபா எலுமிச்சையால தான் ஓடுதுன்னு நம்பினா, சனி பகவானும் குரு பகவானும் பேட்டையும் பந்தையும் வச்சு வாழ்கையில விளையாடிகிட்டு இருக்காங்கன்னு நினைச்சா, ஹோட்டலுக்கு போயி மெனு கார்ட பார்க்காம அடுத்தவன் வாயவே வேடிக்கை பார்த்தா, வயித்துல இடமில்லாட்டியும் கடைசியா ஆப்பாயில் சாப்பிட்டு புல்ஸ்டாப் வச்சா, கையேந்திபவனிலும் கடன் சொன்னா, பொறக்குற குழந்தைகளுக்கு 'ஷா' 'ஹா'ன்னு எழுத்து வரமாதிரி பேரு வைக்க மண்டைய குழப்பினா, கரண்ட் வரும் போகும் நேரத்த சரியா தெரிஞ்சு வச்சிருந்தா, பெட்ரோல் விலை 50 காசு ஏறப்போகுதுன்னு மொதநாளு நைட்டு கியுல நின்னு டேங்க நிரப்புனா, பஸ்ல 3.75 காசு டிக்கெட்டுக்கு நூறு ரூபா எடுத்து ஸீன் போட்டா , இங்கிலீஷ் மீடியத்தில் படிச்சாத்தான் குழந்தைகளுக்கு அறிவு வளருமுன்னு குருட்டுத்தனமா நம்பினா, முகப்பருவ பார்த்திட்டு பெரிய நோய் தனக்கு வந்திருக்குன்னு பயந்தா, காய்கறிக்காரங்ககிட்ட ரெண்டு ரூபாய்க்கு ஒரு மணிநேரம் பேரம் பேசினா, பெரிய ஹாஸ்பிட்டல எவ்வளவு செலவானாலும் பரவாயில்லைன்னு உளறி கொட்டினா, வெறும் ஊறுகாவ வச்சே ஒரு புல் அடிச்சா, இன்னைக்கு வாழாம நாளைக்குன்னு எல்லாத்தையும் சேர்த்தி வச்சா, பேச ஆரம்பிக்காத குழந்தைகிட்டையும் நீ அப்பா புள்ளையா, அம்மா புள்ளையான்னு டெரர் காட்டினா, பசிய மறந்துட்டு புடிச்ச நடிகருங்க கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் பண்ணின்னா, தமிழை தவிர எல்லா மொழியையும் சரியா பேசுனா, பெருமையா சொல்லிக்கொள்ளு உறவே , நீயும் தமிழ்கூறு நல்லுலக தன்மான தமிழன் தான்.!

அது ஏன்டா என்னை பார்த்து அப்படி கேட்ட?

படம் ஆரம்பிச்ச பரபரப்பா ஓடிக்கிட்டு இருக்கிறப்ப, பக்கத்து சீட்டுக்கு பால் காய்ச்ச வரவன், உட்காருவதற்கு முன்னாலையே நம்மள கேட்பான் 'படம் போட்டு எவ்வளவு நேரமாகுது'ன்னு; பத்து நிமிஷமாவது, அதுக்காக போயி சூசைடா பண்ணிக்க போற? படத்த பாக்கத்தானே போற? ஏன்டா கொல்றீங்க? புள்ளையாரு மாதிரி நாலு கை இருந்தாகூட பரவாயில்ல, இருக்கிற ரெண்டு கையில மொத்த குடும்பத்துக்கும் இடைவேளைல அரை டன் பாப்கார்ன வாங்கிட்டு தள்ளாடி போறப்பத்தான், நெருங்கி வந்து 'என்ன சினிமாவுக்கா?'ம்பான் மானஸ்தன் ஒருவன். ஏன்டா டேய்ய்ய்ய், பித்தள பாத்திரம் திருடி பேரீச்சம்பழம் தின்னவனே, தியேட்டர்ல படம் பார்க்க வராம, பாத்ரூம் கழுவவாடா வருவாங்க?

சென்னை வானிலை மையம் சொல்ற வானிலை அறிக்கை கூட சிலசமயம் சரியா இருக்கும், ஆனா இந்த தேசத்துல எப்பவுமே சரியா கணிக்க முடியாதது ரயில் வரும் நேரம் தான். எனக்கு தெரிஞ்சு ஒரு மணி நேரம், ஒரு நாள், ஏன் ஒரு வருஷம் லேட்டா வந்த ரயிலு கூட இருக்கு. இந்த லட்சணத்துல ரயிலு எப்போ வருமுன்னு காத்திருக்கும் போதுதான், நம்மகிட்ட வந்து 'ரயில் போயிடுச்சா'ம்பான் நல்லவன். ஏன்டா உலுத்துப்போன உளுந்தூர்ப்பேட்டை உலகநாதா, நான் ப்ளாட்பாரத்துல பிச்சை எடுக்கவாடா வந்தேன், ரயில் வந்திருந்தா நான் ஏன்டா இங்க நிக்கறேன்?

கல்யாணத்துக்கு வந்தோமா, வண்டி வண்டியா வடைய தின்னோமா, வயிர நப்பினோமான்னு இல்லாம, கை கழுவுறப்ப தான் 'என்ன ரொம்ப வெயிட் போட்டுடீங்கன்னு' கேட்பாங்க, ஆமாயா, சட்ட பாக்கெட்டுல ரெண்டு சிமென்ட் மூட்டை வச்சிருக்கேன், பேன்ட் பாக்கெட்டுல ராணா டார் முறுக்கு கம்பிய சுருட்டி வச்சிருக்கேன், ஏன்யா படுத்தறீங்க பாவிங்களா?

பஸ்சுல போடுற மொக்க படத்த அறைதூக்கத்துல முழிச்சு பார்த்துக்கிட்டு இருக்கறப்பத்தான் 'என்ன தூக்கம் வருதா?'ம்பாரு பக்கத்து சீட்டு பழைய சோறு அப்பரண்டீசு; இல்லங்க வாந்தி வருது, உங்க வாஷ் பேசின் மூஞ்சிய காட்டுங்களேன்னு சொல்ல நினைப்பேன். பொண்ணு கிடைக்காம அவனவன் மனசுல புண்ண சுமந்துகிட்டு இருக்கான், இவிங்க விஷேஷத்துல பார்க்கும் போது தான் 'கல்யாணமாயிடுச்சான்னும்பாங்க; ஆமாங்க நாலு தடவை ஆயிடுச்சு, இப்போ அஞ்சாவது முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன், உங்க பொண்ணு என்னா பண்ணுதுன்னு கேட்ட தோணும்.

வேக்காடு தாங்காம மொட்டைமாடிக்கு தூங்க போனா, 'என்ன கரண்ட் கட்டா?'ம்பாரு பக்கத்துக்கு வீட்டுக்காரரு, வர கடுப்புக்கு இல்லைய்யா கே.ஆர்.விஜயா நாடகம் பாக்க வந்தேன்னு சொல்ல நினைப்பேன்.

கரக்காட்டக்காரன் படத்துல கவுண்டமணி 'என்னை பார்த்து ஏன்டா அந்த கேள்விய கேட்ட'ன்னு செந்தில எத்தி எத்தி உதைக்கிற மாதிரி, இந்த நிஜ வாழ்க்கையிலும் தேவையற்ற பார்மாலிட்டி கேள்வி கேட்டே, நம்மள நோகடிக்கவே பொறந்திருக்கிற மண்ட மேல இருக்கிற கொண்டைய மறந்த வண்டவாளங்கள என்னைக்காவது ஒரு நாள் பதிலுக்கு நாம கடுப்பெத்தாம விடக்கூடாது? இதான் நம்ம வாழ்க்கை லட்சியம்.!

புரிஞ்சுக்கோங்க புருஷன்களே.!!!

மனைவி போன்ல, சீக்கிரம் வீட்டுக்கு வாங்கன்னு சொன்னா, மனைவி சைடுல இருந்து ஒரு சர்க்கஸ் கும்பலே வந்திருக்குன்னு அர்த்தம்.
மனைவி ஆசையா, இத டேஸ்ட் பண்ணிப்பாருங்கன்னு சொன்னா, அந்த பலகாரத்த அப்போதான் செஞ்சு பழகறாங்கன்னு அர்த்தம்.
மனைவி, தலை வலிக்குதுன்னு சொன்னா, ஏன்டா நாயே அந்த டிவிய ஆப் பண்ண மாட்டியான்னு அர்த்தம்
மனைவி, இன்னைக்கு ஆபிசுக்கு லீவு போடுங்கன்னு ஆசையா சொன்னா, வீட்ட ஒட்டடை அடிக்கணுமுன்னு அர்த்தம்.
மனைவி, கை காலெல்லாம் வலிக்குதுன்னு சொன்னா, நீயே தோசை ஊத்தி சாப்பிடுன்னு அர்த்தம்.
மனைவி, அப்பன் புத்தி அப்படியே இருக்குன்னு குழந்தைய திட்டுனா, குழந்த ஏதோ கோல்மால் பண்ணிட்டு நிக்குதுன்னு அர்த்தம்.
மனைவி, பீரோவுல இருக்கிற புடவையெல்லாம் பெட்டு மேல எடுத்து வச்சிருந்தா, ஈவ்னிங் எங்கோ பங்க்ஷன் போறான்னு அர்த்தம்.
மனைவி, தொடர்ந்து ஒரு வாரம் பாசமா இருந்தா, கல்யாண நாள் நெருங்கிடுச்சுன்னு அர்த்தம்.
மனைவி, மூணு நாள் தொடர்ந்து ரசமும் அப்பளமும் சாப்பிட வைத்தால், மாமியாரோட சண்டைன்னு அர்த்தம்.
மனைவி, சரிங்கன்னு சொன்னா, அவங்க சொன்னத நீ ஒத்துகிட்டது அவங்களுக்கு சந்தோஷம்ன்னு அர்த்தம்.
மனைவி, பரவாயில்லைன்னு சொன்னா, இதுக்கு மேல உன்கிட்ட எதிர்ப்பார்க்க முடியாதுன்னு சொல்றாங்கன்னு அர்த்தம்.
மனைவி, உங்களுக்கு எதுக்கு சிரமம்ன்னு சொன்னா, நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்ன்னு அர்த்தம்.
மனைவி, சமயலறையில் உருட்டும் பாத்திரங்களின் சப்தம் பெட்ரூம் வரை கேட்டால், கோவமாக இருக்காங்கன்னு அர்த்தம்.
மனைவி, நைட்டு மூணு மணிவரை தூங்காமா இருந்தா, பக்கத்து வீட்டுக்காரம்மா புது நகை வாங்கி இருக்குன்னு அர்த்தம்.
மனைவி, தன் தோழிகளோடு குசுகுசுன்னு பேசிகிட்டு இருந்தா, எதோ ஒரு பொம்பளைய திட்டுகிட்டு இருக்காங்கன்னு அர்த்தம்.

புரிஞ்சுக்கோங்க புருஷன்மார்களே, புத்தியோட பொழச்சுக்கோங்க.!

கடலை போடுவது எப்படி?

சமையல் குறிப்பு - கடலை போடுவது எப்படி? ஒரு ஜாலி டிப்ஸ்

தேவையானவை : வெயிட்டான பர்ஸ், செல்போன், 4 /5 சிம்கார்ட் , சகிப்புத்தன்மை, 'ம்ம்ம் சொல்லு' 'சும்மா' 'அப்புறம்' என்ற வார்த்தைகள், கூலிங்கிளாஸ், கிப்ட் பொருட்கள் & இளிச்சவாய நண்பர்கள்.

செய்முறை : அவரவர் பூர்வ ஜென்ம புண்ணியம் அல்லது பர்சின் கனத்தை பொறுத்து பிகர் எனும் பாத்திரத்தை வாங்கிக்கொள்ளவும். பாத்திரத்தை லேடிஸ் காலேஜோ, ஷாப்பிங் ப்ளாசாக்களோ இல்லை வேறு இடமோ அவரவர் வசதிக்கு ஏற்ப சென்று வாங்குவது அவரவர் பொறுப்பு, கம்பெனி எதுவும் செய்யாது. அதனை செல்போன் எனும் அடுப்பை பற்றவைத்து வைத்து சகிப்புத்தன்மை என்னும் சிலிண்டரை இணைத்து கொள்ளவும். அடுப்பு சும்மா எரிந்தாலும் சிலிண்டர் தீரக்கூடாது. சமையல் செய்யும் முன் நாலஞ்சு சிம்கார்ட் கரண்டிகள் வைத்துகொள்வது நன்மை பயக்கும். ஏனெனில் இந்த பதார்த்தத்தின் சுவையே பல்வேறு கரண்டிகள் கொண்டு நிறுத்தாமல் கிண்டுவதிலும் கிளருவதிலும் தான் இருக்கிறது. வாட்ச், கர்சீப், சென்ட், கரடி பொம்மைகள், வாழ்த்து அட்டைகள் போன்ற கிப்ட் பொருட்களை அவ்வப்பொழுது பாத்திரத்துக்குள் போட்டு கிளறிக்கொள்ளவும், இல்லையெனில் வெறும் பாத்திரம் சூடாகிவிடும். சமையலின் பொழுது 'ம்ம்ம் சொல்லு' என்ற கருவேப்பிலையையும் 'சும்மா' என்கிற கொத்தமல்லி இலையையும் 'அப்புறம்' என்ற புதினாவையும் நிறுத்தாமல் தூவிக்கொண்டே இருக்கவேண்டும், இல்லையெனில் கடலை பதார்த்தம் சுவை குறைந்து விடும் இல்லை கருகிவிடும். ஒவ்வொரு சமையலின் போதும் பாத்திரத்தின் பெற்றோர்களான பாத்திரகடையை பிடிக்காவிட்டாலும் புகழ வேண்டும், இது பாத்திரத்தை அடுப்பில் இருந்து நழுவ விடாமல் வைக்கும்.

முக்கிய குறிப்பு 1 :
உங்கள் பாத்திரம் பக்கத்தில் இருக்கும் பொழுது கூலிங்கிளாஸ் அணிவது நல்லது, ஏனெனில் நீங்க வேறு பாத்திரத்தை எடுத்து சமைக்கலாம் என எண்ணுவது கையில் இருக்கும் பாத்திரத்துக்கு தெரியக்கூடாது, தெரிந்தால் பாத்திரத்தின் ஆத்திரம் பொங்கிவிடும்.
முக்கிய குறிப்பு 2 :
இங்க முக்கியமே இளிச்சவாய நண்பர்கள் தான்; நீங்க சீரியசாக சமையல் செய்யும்பொழுது உங்கள் அடுப்பு சூடானால் அவங்களிடம் தான் அடுத்த அடுப்பை ஓசி கேட்க வேண்டும்.
முக்கிய குறிப்பு 3: அவரவர் திறமைகேற்ப நாலஞ்சு பாத்திரம் வைத்தும் சமையல் செய்யலாம் என்றாலும், ஒரு சமயத்தில் ஒரே பாத்திரத்தில் சமைப்பதே பின் விளைவுகள் இல்லாதது.

படம் ஆரம்பிச்ச பரபரப்பா ஓடிக்கிட்டு இருக்கிறப்ப, பக்கத்து சீட்டுக்கு பால் காய்ச்ச வரவன், உட்காருவதற்கு முன்னாலையே நம்மள கேட்பான் 'படம் போட்டு எவ்வளவு நேரமாகுது'ன்னு; பத்து நிமிஷமாவது, அதுக்காக போயி சூசைடா பண்ணிக்க போற? படத்த பாக்கத்தானே போற? ஏன்டா கொல்றீங்க? புள்ளையாரு மாதிரி நாலு கை இருந்தாகூட பரவாயில்ல, இருக்கிற ரெண்டு கையில மொத்த குடும்பத்துக்கும் இடைவேளைல அரை டன் பாப்கார்ன வாங்கிட்டு தள்ளாடி போறப்பத்தான், நெருங்கி வந்து 'என்ன சினிமாவுக்கா?'ம்பான் மானஸ்தன் ஒருவன். ஏன்டா டேய்ய்ய்ய், பித்தள பாத்திரம் திருடி பேரீச்சம்பழம் தின்னவனே, தியேட்டர்ல படம் பார்க்க வராம, பாத்ரூம் கழுவவாடா வருவாங்க? சென்னை வானிலை மையம் சொல்ற வானிலை அறிக்கை கூட சிலசமயம் சரியா இருக்கும், ஆனா இந்த தேசத்துல எப்பவுமே சரியா கணிக்க முடியாதது ரயில் வரும் நேரம் தான். எனக்கு தெரிஞ்சு ஒரு மணி நேரம், ஒரு நாள், ஏன் ஒரு வருஷம் லேட்டா வந்த ரயிலு கூட இருக்கு. இந்த லட்சணத்துல ரயிலு எப்போ வருமுன்னு காத்திருக்கும் போதுதான், நம்மகிட்ட வந்து 'ரயில் போயிடுச்சா'ம்பான் நல்லவன். ஏன்டா உலுத்துப்போன உளுந்தூர்ப்பேட்டை உலகநாதா, நான் ப்ளாட்பாரத்துல பிச்சை எடுக்கவாடா வந்தேன், ரயில் வந்திருந்தா நான் ஏன்டா இங்க நிக்கறேன்? கல்யாணத்துக்கு வந்தோமா, வண்டி வண்டியா வடைய தின்னோமா, வயிர நப்பினோமான்னு இல்லாம, கை கழுவுறப்ப தான் 'என்ன ரொம்ப வெயிட் போட்டுடீங்கன்னு' கேட்பாங்க, ஆமாயா, சட்ட பாக்கெட்டுல ரெண்டு சிமென்ட் மூட்டை வச்சிருக்கேன், பேன்ட் பாக்கெட்டுல ராணா டார் முறுக்கு கம்பிய சுருட்டி வச்சிருக்கேன், ஏன்யா படுத்தறீங்க பாவிங்களா? பஸ்சுல போடுற மொக்க படத்த அறைதூக்கத்துல முழிச்சு பார்த்துக்கிட்டு இருக்கறப்பத்தான் 'என்ன தூக்கம் வருதா?'ம்பாரு பக்கத்து சீட்டு பழைய சோறு அப்பரண்டீசு; இல்லங்க வாந்தி வருது, உங்க வாஷ் பேசின் மூஞ்சிய காட்டுங்களேன்னு சொல்ல நினைப்பேன். பொண்ணு கிடைக்காம அவனவன் மனசுல புண்ண சுமந்துகிட்டு இருக்கான், இவிங்க விஷேஷத்துல பார்க்கும் போது தான் 'கல்யாணமாயிடுச்சான்னும்பாங்க; ஆமாங்க நாலு தடவை ஆயிடுச்சு, இப்போ அஞ்சாவது முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன், உங்க பொண்ணு என்னா பண்ணுதுன்னு கேட்ட தோணும். வேக்காடு தாங்காம மொட்டைமாடிக்கு தூங்க போனா, 'என்ன கரண்ட் கட்டா?'ம்பாரு பக்கத்துக்கு வீட்டுக்காரரு, வர கடுப்புக்கு இல்லைய்யா கே.ஆர்.விஜயா நாடகம் பாக்க வந்தேன்னு சொல்ல நினைப்பேன். கரக்காட்டக்காரன் படத்துல கவுண்டமணி 'என்னை பார்த்து ஏன்டா அந்த கேள்விய கேட்ட'ன்னு செந்தில எத்தி எத்தி உதைக்கிற மாதிரி, இந்த நிஜ வாழ்க்கையிலும் தேவையற்ற பார்மாலிட்டி
கேள்வி கேட்டே, நம்மள நோகடிக்கவே பொறந்திருக்கிற மண்ட மேல இருக்கிற கொண்டைய மறந்த வண்டவாளங்கள என்னைக்காவது ஒரு நாள் பதிலுக்கு நாம கடுப்பெத்தாம விடக்கூடாது? இதான் நம்ம வாழ்க்கை லட்சியம்.!

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி.!

லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வாங்க எந்த விளையாட்டை சேர்க்கலாம்?
A. கப்லிங்க்ஸ் B. ஸ்பூன்லிங்க்ஸ் C. டிக்கிலோனா D. ஜலபுலஜங்

தமிழ்நாட்டில் அடுத்து மாற்றப்படப்போவது எந்த மாவட்ட கலெக்டர்?
A. அரியலூர் B. பொரியலூர் C. துவையலூர் D. சட்னியூர்

பெண்கள் அதிகம் பயன்படுத்துவது எது?
A. தட்கால் B. இடது கால் C. வலது கால் D. மிஸ்ஸுடு கால்

அதிக தீவிரவாதிகளை பிடித்தவர்கள் யார்?
A. ஜார்ஜ் புஷ் B. ஒபாமா C. கேப்டன் D. ஆக்சன் கிங்

கூடாங்குளத்திலிருந்து கரண்ட் வருமா?
A. வரும் B. வராது C. வரும், ஆனா வராது D.கரண்ட் இல்ல அப்புறம் சொல்றேன்

நாம் அடுத்து கொண்டாட கொண்டுவரவேண்டிய தினம் எது?
A. BUS தினம் B. YES தினம் C. MISS தினம் D. KISS தினம்

நடிக்க வராவிட்டால் நடிகைகள் என்னவாகி இருப்பார்கள்?
A. டாக்டர் B. கம்பவுண்டர் C. நர்ஸ் D. கல்யாணம் செய்து அம்மா

மச்சான் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துவது யார்?
A. நண்பர்கள் B. மாமன்கள் C. முறை பெண்கள் D. நமிதா

பால் விலை கட்டுப்படியாகததால் இனி வீட்டு பயன்பாட்டுக்கு பாலை எதில் வாங்கலாம்?
A. வாட்டர் கேன் மூடி B. இன்க் பில்லர் C. டீ ஸ்பூன் D. கண்ல பார்த்தா மட்டும் போதுங்க

Home Work செய்யாமல் அம்மாக்களிடம் அதிக திட்டு வாங்குபவர்கள் யார்?
A. மாணவர்கள் B. மாணவியர்கள் C. ஆசிரியர்கள் D. அப்பாக்கள்

ஆயிரம் அறிக்கைகள் விட்ட அபூர்வ சிந்தாமணி தலைவர் யார்?
A. தங்கபாலு B.ராமதாஸ் C. விஜய.டி.ஆர் D. All the above

மேற்கண்ட கேள்விகளுக்கு சரியான ஆப்ஷன்களை டைப் செய்து 00000 என்ற எண்ணுக்கு SMS பண்ணுங்க, உங்க பேலன்ஸ்ல எட்டணா போகும், Delivery failure ரிப்போர்ட் வரும். பின்ன என்னங்க? நாட்டுல அவனவன் டெலிபோன் பில்ல, கரண்ட் பில்ல ஏன் மெஸ்சுல சாப்பிட்ட ரெண்டு இட்லி ஒரு வடை பில்ல கூட கட்ட முடியாம நொந்து போயிருக்கான், இதுல தினம் கோட்ட போட்டுக்கிட்டு வந்து நயன்தாரா நாத்தனார யாரு கட்டினா? குஞ்சுமோன் கொழுந்தியாள யாரு கட்டினான்னு, எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன கால் ரேஞ்சுலையே கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு நம்மள டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்காங்க.! பீ கேர்புல், நாம நமக்கே சொல்லிக்கொள்வோம்.!

குழந்தைகள்.!

குழந்தைகள் மகிழ்ச்சியாய் இருப்பதன் காரணம், அவர்கள் குழந்தைகளாய் இருப்பதால் மட்டும் தான். தமிழ்நாட்டில் மொத்தம் மூன்று வகையான குழந்தைகள் இருக்கிறார்கள்; பெண் குழந்தைகள், ஆண் குழந்தைகள் மற்றும் சூப்பர் குழந்தைகள். மற்ற குழந்தைகள் ஸ்கூலுக்கு போவார்கள், சூப்பர் குழந்தைகள் ஷூட்டிங்கும் போவார்கள். மற்ற குழந்தைகள் பாடம் படிப்பார்கள், சூப்பர் குழந்தைகள் படப்பிடிப்பிலும் நடிப்பார்கள், பாட்டு பாடுவார்கள், ஆட்டமும் ஆடுவார்கள். சுமார் குழந்தைகள் பாஸாவார்கள், சூப்பர் குழந்தைகள் பர்ஸ்ட் மார்க் வாங்குவார்கள். நூறுக்கு நான்கு பேர் தான் சூப்பர் குழந்தைகள் எனினும், அவர்களின் தாக்கம் மற்ற குழந்தைகளின் மேல் அதிகம். ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் சூப்பர் குழந்தைகளாக இருக்கவே விரும்புகிறார்கள். சூப்பர் குழந்தைகள் தான் சூப்பராக இருக்க கொடுக்கும் விலைகள் என்ன தெரியுமா பெற்றோர்களே? தங்கள் குழந்தைதனத்தை.!!! ஒரு குழந்தையுடன் மற்றொரு குழந்தையை ஒப்பிடுவதை விட குழந்தைகள் மீதான பெரிய வன்கொடுமை வேறெதுவுமில்லை. நீங்கள் பத்து மாதம் சுமந்து ஒரு முறை தான் பிரசவிக்கிறீர்கள், ஆனால் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் பத்து மாதம் பாடம் படித்து ஒவ்வொரு வருடமும் பிரசவிக்கிறார்கள்.! மீதமிருக்கும் இரண்டு மாதத்தையும் கோடை வகுப்புகளில் சிறை வைத்து சித்தரவதை செய்யாதீர்கள். இசையோ, நடனமோ, கணினி அறிவோ, யோகாவோ, சதுரங்க ஆட்டதிறனோ, ஹிந்தியோ, ப்ரெஞ்சோ வேறு இரண்டு மாதங்களில் வந்து விடாது. இந்த இரண்டு மாதங்களை குழந்தைகளின் குணநலன்களை மேம்படுத்த பயன்படுத்துங்கள். கடந்த பத்து மாதம் குழந்தைகளுடன் ஏற்பட்ட இடைவெளியை இந்த இரண்டு மாதங்கள் நிரப்புங்கள். குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விட்டு முதலில் நாம் பெரியவர்கள் என காட்டுவோம். புரிந்துக்கொள்ளுவோம், எல்லா குழந்தைகளும் சூப்பர் தான், சூப்பர்களும் முதலில் குழந்தைகள் தான்.!

Wednesday, June 20, 2012

Tele buy

விக்கிற விலைவாசிக்கு வேர்கடலை கூட வாங்கி திங்க முடியாம வெந்து போயி வீட்டுக்கு வந்து டிவிய போட்டா, அத வாங்கு, இத வாங்குன்னு நம்மகிட்ட உதை வாங்காம போகமாட்டாங்க போல சில வெள்ளைக்கார பசங்க. நானும் பார்க்கறேன் 5 வருஷமா அமேசான் காடுகளில் கண்டுப்பிடித்த அரியவகை மூலிகைகளால் செய்யப்பட்ட முடி வளரும் தைலமுன்னு வித்துக்கிட்டு இருக்காங்க. ஏண்டா டேய், அதான் அலைஞ்சு திரிஞ்சு அறிய மூலிகைய கண்டுப்பிடிச்சாச்சுல அப்புறம் உள்ளூர்லையே சாகுபடி பண்ண வேண்டியது தானே? ஒரே வாரத்தில் ஓஹோன்னு முடி வளருமாம். அவ்வளவு பவரான தைலத்த கையில ஊத்தி தலைக்கு தேய்ச்சா உள்ளங்கையில முடி மொளச்சுடாதா முட்டாபசங்களா? தைலம் முடிகளின் அடி ஆழ வேர்கள் வரை செல்லுமாம், மயிறு* வளர்ப்பதை கூட உரம் போட்டு பயிறு வளர்க்கிற மாதிரியே சொல்றாங்களே. எனக்கு தெரிஞ்சு ஒரு அக்கா, அரைக்கால் டவுசர் போட்டுக்கிட்டு ஒன்பது வருஷமா சைக்கிள் ஓட்டி காமிச்சுக்கிட்டு இருக்கு. அவங்க ஓட்டுற சைக்கிள பார்த்தா எங்க கொமராபாளையம் குப்பம்மா ஆயா சட்டில மோர் சிலுப்புற மாதிரியே இருக்கும். நல்ல வேளை இந்த கொடுமைய பார்க்கா ஆயா இப்போ இல்லை. அந்தக்கா ஓட்டுன சைக்கிள்ல மட்டும் சக்கரம் இருந்துச்சு, இந்நேரம் அமெரிக்காவுக்கு அஞ்சாறு தடவ போயிட்டு வந்திருக்கலாம். சரி போங்கய்யா எக்சர்சைஸ் பண்ற பொண்ணையாவது மாத்துவாங்கன்னு பார்த்தா நான் அஞ்சாவது படிக்கிறதுல இருந்தே அதே பிகர போட்டு வெறுப்பேத்தறாங்க. இந்நேரம் அது அவங்க ஊர்ல அஞ்சாறு டைவர்சே பண்ணி சந்தோஷமா இருந்துகிட்டு இருக்கும். இன்னொன்னு டிரட்மில்; 30000 ரூபா கொடுத்து டிரட்மில் வாங்கி அது மேல ஓடுனா உடம்பு குறையுமான்னு தெரியாது. ஆனா வெறும் 3000 ரூபா பணத்த யாருக்காவது கடனா கொடுத்துட்டு திருப்பி வாங்க நீங்க நடக்குற நடையில பாதி உடம்பு குறைஞ்சிடும். கடன் வாங்கினவனுக்கே உங்கள அடையாளம் தெரியாது. டீக்கடையில கூட கடன் வைக்கமுடியாத நம்மள நம்பி இந்த நாட்டுல கடன் தர ஒரே குரூப்பு இவங்கதான். டிவில பொருள் விக்கறவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிகிறேன், 24மணி நேரமும் காமடி புரோகிராம் தரத்தான் ஆதித்யா சேனல் இருக்கே, பேசாம நீங்க கடைய சாத்திட்டு போயிடுங்கப்பா, புண்ணியமா போகும்.!

*பின்குறிப்பு: மயிர் என்பது தூய தமிழ் சொல். நல்ல தமிழ் வார்த்தைகளை கொச்சைபடுத்த வேண்டாம் மக்களே. வள்ளுவ பெருமானே சொல்லி இருக்காரு;
" மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார், உயிர்நீப்பர் மானம் வரின்."

பட்ஜெட் 2012-2013

நிதியமைச்சர் சார், ஏற்கனவே பால்விலை, மளிகை, பஸ்கட்டணம் உயர்வுன்னு நொறுங்கி போய் வெறும் புல்லையும் கொள்ளையும் தின்கிற குதிரையா வாழுறோம், இது புதுசு புதுசா வரி மேல வரி போட்டு மக்களை வரிக்குதிரையா மாத்திட்டீங்க. தமிழ்நாட்டுல மின்தட்டுப்பாட்டால் அதிக தயாரிப்பில்லாததால் வெளிமாநில சமையல் எண்ணெய் வாங்குனா, அதோட விலைய ஏத்திப்புட்டீங்க, ஆனா பணக்காரர்கள் குடிக்கும் ஓட்ஸ் விலையை குறைக்கறீங்க. மின் சக்தியால் இயங்கக்கூடிய இரு சக்கர வாகனங்களுக்கு வரிய குறைச்சுபுட்டு , மின்சாரத்த மொத்தமா கட் பண்ணிடீங்க, வண்டிய தள்ளிக்கிட்டே தான் போகணும். வீடு கட்டுற செங்கல் சுண்ணாம்பு விலை ஏறுது, ஆனா பூட்டு விலைய குறைச்சு இருக்கீங்க. பால் விலைய குறைப்பீங்கன்னு பார்த்தா, பாலூட்டும் புட்டிகள், பாலூட்டும் நிப்பிள்கள் விலைய குறைக்கறீங்க, இதானா உங்க டக்கு? எந்த நேரத்துல ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 740 கோடி ஒதுக்கீடுன்னு சொன்னீங்களோ, அடுத்த நொடி, தமிழகம் விபரீத விளைவுகளை சந்திக்கும்ன்னு குமாரசாமி அறிக்கை விடறாரு, நாங்க அப்படியே ஷாக் ஆயிட்டோம். மாணவர்களுக்கு ஜியாமெட்ரி பாக்ஸ், ஸ்கேல், பென்சில், அட்லஸ் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்ன்னு சொல்றீங்க, ஆனா பள்ளிக்கூட கட்டணத்தை இன்னமும் ஒழுங்கப்படுத்த காணோம்? தமிழறிஞர்களுக்கு கபிலர், உ.வே.சா விருதெல்லாம் தரீங்க, ஆனா அவங்க எழுதுன புத்தங்களை சுமக்கும் கருவறையான நூலகங்களை மாத்துறீங்க. பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க ரூ. 100 கோடி ஒதுக்கீடு பண்ணியிருக்கீங்க, ஆனா இந்த ஆறுமாசமா சாலைகளில் குவிந்துகிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற ஒன்னும் செய்ய காணோம். 3 ஆண்டுகளில் 3307 ஏரிகள் மேம்படுத்தப்படும்ன்னு சொல்றீங்க, முதல மண் அள்ளுற லாரிகள கட்டுப்படுத்துங்க. ரூ. 4000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படுவது ஓகே, அப்படியே பால் விலை ஏறிடுச்சு, ரூ.40 தயிர்கடன் கொடுத்தீங்கன்னா புண்ணியமா போகும்.! ஆகா மொத்தம் பட்ஜெட்ட பார்க்கிறப்போ வடிவேலு சொல்ற மாதிரி 'என்னமோ போடா மாதவா'ன்னு நினைக்க தோணுது. நீங்கள் எங்களுக்கு போட்ட நாமம் வாழ்க, நாங்கள் உங்களுக்கு போடப்போகும் நாமம் வாழ்க.!

கரண்ட் இல்ல.!

நாப்பது டிகிரில வெயில் சுட்டெரிக்குதுன்னு கூலிங்கா ஒரு சோடா கேட்டா, 'கரண்ட் இல்லை, அதனால கூலிங்கா இல்லை'ங்கிறாரு டீக்கடைக்காரர்; ஏம்மா, டேன்க்ல தண்ணி இல்ல, மோட்டார் போடலையா'ன்னு கேட்டா, கரண்ட் இல்லைங்கிறா வீட்டுக்காரம்மா; தமிழ்நாடு மின்சார வாரிய புண்ணியத்துல எல்லோரும் எல்லாத்துக்கும் ஒரு சாக்கு போக்கு பதில வச்சிருக்காங்க. உலகின் ஏதோ ஒரு மூலையில் கரண்ட் கட்டை அனுபவித்துக்கொண்டிருந்தால் நீயும் தமிழனே'ன்னு சேகுவேரா டயலாக்க ரீமிக்ஸ் பண்ணியடிக்குறாங்க. அதனால மக்களே, கீழ்க்கண்ட வழக்கமான கேள்விகளுக்கும்
நீங்க 'கரண்ட் இல்லை'ங்கிற பதில சொல்லி TNEB புண்ணியத்துல தப்பிச்சுக்கலாம்;
ஏன்டா மகனே, +2ல மார்க் குறைஞ்சுது?
தினம் வெறும் இட்லிபொடிதானா? சட்னி அரைக்கலாம்ல?
ஏம்மா டியுஷன் போகாம வீட்டுல உட்கார்ந்திருக்க?
சுவாமிஜி, ஏன் கதவ திறந்து வச்சீங்க?
ஏன் அசைன்மென்ட் எழுதாம வந்திருக்க?
ஏன் மொபைல் சுவிட்ச் ஆப்னே வருது?
சீக்கிரம் வந்துட்டீங்க? ஆபிஸ் போகலையா?
டைம் ஆய்டுச்சு, இன்னமுமா Function 'னுக்கு கிளம்பிக்கிட்டு இருக்க?
யோவ் வேலைக்கு போயா, சும்மா வெட்டியா வீட்டுல உட்கார்ந்திருக்க...
என்னய்யா சொல்ற, உன் பொண்டாட்டியோட கள்ளகாதல் இவ்ளோ நாள் தெரியாதா?
விக்கற விலைவாசிக்கு இன்னொரு குழந்தை தேவையா?
ஆதலால் மக்களே, நம்மை செத்தும் கெடுத்தான் சீதாக்காதி போல சிக்கலில் இருந்து மீட்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு நன்றியுடன் ஓ'போடுவோம்.!

பிட்டு - துட்டு - ஹிட்டு

கர்நாடகா பாஜக அமைச்சர்கள் சட்டசபைக்குள்ள பிட்டு படம் பார்த்த சர்ச்சையே இன்னமும் முடியல; அதுக்குள்ளே குஜராத் பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ள பிட்டு படம் பார்த்தாங்கன்னு புது சர்ச்சை வேற. அதுலயும் கர்நாடகால பிட்டு பார்த்த அமைச்சர்கள் வகித்த துறைதான் கவனிப்புக்கு உரியது. ஒருத்தர் 'மகளிர் மற்றும் குழந்தைகள்' நல அமைச்சர், கூட உட்கார்ந்து ஒத்துழைப்பு கொடுத்தது 'கூட்டுறவு துறை' அமைச்சர், பூமாதேவி வாய பொளந்து சிரிச்சுடுவாய்யா . ஏற்கனவே BJP'யின் விரிவாக்கத்த, பயபுள்ளைங்க, 'ப'யங்கர 'ஜொ'ள்ளு 'பா'ர்ட்டின்னு கலாய்ச்சுகிட்டு இருக்காங்க. பேசாம இனி பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டசபைய பிட்டுசபைன்னு மாத்திட்டா இன்னமும் கொஞ்சம் எதார்த்தமாவாவது இருக்கும். எது எப்படியோ கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி அண்ணன் பங்காரு லட்சுமணன வச்சு 'துட்டு' படம் வந்துச்சு, இப்போ பாஜக மந்திரிகள், எம்எல்ஏக்களை வச்சு 'பிட்டு' படம் வந்திருக்கு, மொத்ததுல எல்லாமே ஹிட்டு படம் தான். இந்தியா ஒளிர்வது இருக்கட்டும், முதல மொபைல் ஸ்கரீன ஒளிர விடாதீங்கப்பு.!