Thursday, June 25, 2009

'உலக' நாயகன் கமல்.!?

பத்து விதமான குணாதிசியங்களுக்கும் பத்து விதமான கதாபாத்திரங்களுக்கும் இடையே சிக்கி தவித்த குழப்ப குப்பையான தசாவதாரம் திரைப்படத்தில் 'உலக' நாயகன் கமலஹாசனை போற்றி துதித்து ஒரு பாடல் வரும்; 'உலக நாயகனே' என்று கலைஞானியின் ரசிகர்களை புல்லரிக்க வைக்கும்...! உண்மையில் கமல் உலக நாயகன் தானா? இல்லை கமல் ரசிகர்களுக்கு கமல் தான் உலகமா? இல்லை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உலகம் பற்றி தெரியவில்லையா? எது எப்படியோ, கமல் 'உலக' நாயகன் ஆனதொரு காரணத்தை மட்டுமே ஆராயும் போக்கு எனக்கு.! 'உலக' தரமான ஒரு தமிழ் திரைபடம் தர வேண்டும் என பிரியப்படுவது கமலஹாசனின் நீண்ட நாள் கனவு (ஒரு வேளை எனக்கோ உங்களுக்கோ தெரியாமல் அப்படி ஒரு திரை படம் வந்து இருக்கலாமோ?). அதனால் அவரை 'உலக' நாயகன் என்று அவரது அடிபிடிகள் கூபிடுவார்களோ? யாம் அறியேன் பராபரமே.! தசாவதாரம் திரைப்பட பாடல்கள் வெளியீது விழாவிற்கு தமிழே தெரியாத சீன தேசத்து ஜாக்கிசானை வரவைப்பதும், மருதநாயக திரைப்பட தொடக்க விழாவிற்கு இங்கிலாந்து ராணியை வரவைத்து துதிப்பதும் செய்வதால் அவர் 'உலக' நாயகனோ? அவரை உலக நாயகன் என அழைக்க எனக்கு நல்ல காரணம் ஒன்று இருக்கிறது. அது அவர் இத்தனை நாள் உலக சினிமாக்களை சுட்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஊட்டிக்கொண்டு இருந்ததால்.! தமிழ் சினிமாவின் தலை சிறந்த திரைப்படங்கள் என கமல் ரசிகர்களால் கொண்டாடப்படும் 'ராஜபார்வை, மகாநதி, அன்பேசிவம், விருமாண்டி...' போன்ற திரைப்படங்களை ஒரு காலத்தில் ஆஸ்கார் பரிசின் மேல் அளவற்ற அன்பு கொண்டு இருந்த கலைஞானி ஏன் ஆஸ்காருக்கு அனுப்பவில்லை...? அனுப்பினால் ஆஸ்கார் வராது, அவமானம் தான் வரும்.! பிறகு ஹாலிவுட் படங்களை சுட்டு தமிழில் எடுத்து அவனுக்கே அனுப்பினால் ஆஸ்கார் என்ன அம்பாசிடர் காரே வராது.! நான் ஒன்றும் மிக பெரும் சினிமா விமர்சகன் அல்ல.! பிளாட்பாரத்தில் விற்கும் இருபது ரூபாய் போலி DVD'களை வாங்கும் நண்பர்களிடம் இருந்து அதையே ஓசியில் வாங்கி பார்க்கும் மிக சாதரண சினிமா காதலன் நான்.! ஆனால் எனது சிற்றறிவுக்கே தென்படும் வகையில் உலக நாயகன் ஹாலிவுட் திரைப்படங்களை காட்சிக்கு காட்சி சுட்டு இங்கே துட்டு பண்ணியது தான் கொஞ்சம் பொறுக்கவில்லை.!

ஆங்கில திரைப்படமான The GodFather நாயகன் ஆனது பலருக்கும் தெரியும், இருபீனும் மணிரத்னம் அவர்களின் உயரிய?! படைப்பின் கீழ் இது வருவதால் இதனை பற்றி இங்கு அலச வேண்டாம்.! மேலும் பல காட்சிகள் இயக்குனரின் புத்திசாலிதனத்தால் மாற்றி அமைக்கப்பட்டு புதியதொரு தோற்றம் தரப்பட்டது.! நம்ம உலக நாயகனை பாப்போம்.! ஊரு உலகத்துக்கே அன்பை போதிக்க ஆட்டம் போட்ட திரைப்படம் அன்பேசிவம்.! படம் ஜூப்பர் தான் ஆனா பாராட்டு கமலுக்கு போக கூடாது. இது ஆங்கிலத்தில் வெளிவந்த "Planes, Trains & Automobiles" என்ற ஆங்கில Burger'in அப்பட்டமான தமிழ் வடை...'இஞ்சிரிங்கோ இஞ்சிரிங்கோ' என்று தொப்பை ஜோதிகாவுடன் உலக நாயகன் போட்ட கெட்ட ஆட்டம் கொண்ட தெனாலி திரைபடத்தை யாரும் அவ்வளவு மறந்து இருக்க முடியாது.! தெய்வ மச்சான் ஆகிய ஜெயராமின் தெய்வ மாபிள்ளை கமல் அந்த படத்தை சுட்டது என்கிற "What About Bob?" ஆங்கில படத்தை பார்த்து...!கார்டூன் நெட்வொர்க், ஜெடிக்ஸ், போகோ பார்குற சின்ன குழந்தை கூட சொல்லும் 'அவ்வை ஷண்முகி' Robin Williams'oda "Mrs.Doubtfire" தான் என்று.!"Butterflies Are Free" (கட்டிபுடிச்சு) தழுவி 'அந்தி மழை' பொழிய பொழிய எடுக்கப்பட்ட படம் தான் ராஜ்கமல் இன்டர்நேஷலின் முதல் தயாரிப்பான ராஜபார்வை.!உலக நாயகனின் மற்றும் ஒரு தயாரிப்பான மகளிர் மட்டும், ஆங்கிலத்தில் வெளிவந்தது பலரை வயிறு வலிக்க சிரிக்க வைத்த ஆங்கில ஜிலேபி 'Nine to Five'...சர்வதேச சினிமா பத்தி பேசுற எல்லா டுபாகூர் பசங்களும் முதல சொல்லுற திரைப்பட பெயர் Rashômon.! அந்த திரைப்படத்தில் அதன் இயக்குனர் அகிரோ காரசேவோ / குரசெவோ ( எதோ ஒண்ணு ) ஒரு வித்தியாசமான உத்தி கொண்டு திரைகதையை வடிவு அமைச்சு இருப்பார்.! முக்கியமான கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் அவங்க வாங்க பார்வையில் கதைய நகர்த்தி செல்வாங்க...அந்த திரைகதை வடிவத்தை காப்பி அடிச்சா நம்ம கலைஞானி விருமாண்டி வருவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னால வெளிவந்த 'The Life of David Gale' திரைப்படத்தையும் கலந்து செஞ்ச போங்கள் தான் விருமாண்டி...!

"Átame" என்கிற இந்த அக்மார்க் ஆங்கில படத்தை அப்படியே தமில குணா என்று எடுத்து பல தமிழ் சினிமா ரசிகர்களை அபிராமி அபிராமி என்று பினாத்த வைத்து தான் உலக நாயகனின் உலகமயமாக்கள்.!அன்பே சிவம் பழக்கதில வந்த பார்ப்பான பாசத்தினால் மாதவனை கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான 'நள தயமந்தி' என்கிற உலக நாயகனின் உன்னத படைப்பு உருவப்பட்டது "Green Card" என்கிற ஆங்கில படத்தில் இருந்து.!கமல் வித்தியாசமா படம் தரேன் என்று ஒரு அட்ட படம் தருவாரு.! அது தோல்வி அடைஞ்ச சோகத்தில உடனே ஒரு காமடி படம் தந்து நம்மள நோகடிப்பாரு.! அப்படி வந்த பஞ்சதந்திரதில கதைக்கு என்ன பஞ்சமோ, அந்த கதை அப்படியே "Very Bad Things" என்கிற ஆங்கில படத்தின் அன்பு தழுவல்.!அவரின் இன்னொரு தயாரிப்பான சதி லீலாவதி, "She devil" என்கிற படத்தில் இருந்து சுட்டது.! வாத்தியார வந்து, பசங்க பரீட்சை பேப்பர கரக்ட் பண்ணாம படத்துல கௌதமிய கரக்ட் பண்ணுவாரே அந்த படம், ஆங் பேரு கூட நம்மவர், அது Client Eastwood'ae போற்றி புகழ்ந்த திரைப்படமான 'To Sir, with Love' என்கிற படத்தை தமிழில் தழுவியது.!ஐயாமாரே, எனக்கு ஒரு சந்தேகம், இது நம்ம உலக நாயகன் அவங்க கிட்ட இருந்து சுட்டாரா? இல்லை இவரு இப்படி எல்லாம் படம் எடுப்பாருன்னு தெரிஞ்சு அவங்க முந்திகிட்டாங்களா? இப்படி 'உலகளாவிய' சிந்தனை கொண்டு இருப்பதால் தான அவரு உலக நாயகன்?!!!

கீழ இருப்பதெல்லாம் அந்த அந்த படங்களின் IMDB webiste'oda link... IMDB என்பது International Movie Data Base. சொடுக்கி பாருங்க, உண்மைய தெரிந்து கொள்ளுங்கள்.!

What About Bob?
http://www.imdb.com/title/tt0103241

Mrs. Doubtfire
http://www.imdb.com/title/tt0107614/

Butterflies Are Free
http://www.imdb.com/title/tt0068326

Rashômon /The Life of David Gale
http://www.imdb.com/title/tt0042876/ ,
http://www.imdb.com/title/tt0289992

Nine to Five
http://www.imdb.com/title/tt0080319/

Planes, Trains & Automobiles
http://www.imdb.com/title/tt0093748/

Átame!
http://www.imdb.com/title/tt0101026/

Green Card
http://www.imdb.com/title/tt0099699/

Very Bad Things
http://www.imdb.com/title/tt0124198/

She Devil
http://www.imdb.com/title/tt0098309/

To sir, with love
http://www.imdb.com/title/tt0062376/

இப்ப சொல
்லுங்க, கமல் உலக நாயகனா இல்லை உலகமயமாக்கல் நாயகனா?

Sunday, June 7, 2009

என்னை போல் ஒருவன்..!



பெண்ணினம் மீதான
கண்ணிய குறைவு
வேர்விட்ட நேரத்தை
வரையறுக்க முடியவில்லை;
வரலாற்று சுவடுமில்லை!

மூன்று மதிப்பெண்கள்
முந்திசென்றத்தில்
வண்டு ரெண்டினை
கண்ணாய் கொண்டவளின்
கன்னம் கிள்ளியத்தில்
வேர்விட்டுருக்க வேண்டும்
பெண்களின் மீதான காழ்ப்புணர்ச்சி.

விடைதெரிய தருணங்களில்
வார்த்தைகளால் வறுத்தெடுக்கும்
வகுப்பாசிரியை புண்ணியத்தில்
வளர்ந்தது என் வக்கிரம்...

ஆணுக்கும் பெண்ணுக்குமான
அடிப்படை வித்தியாசங்களை
பத்தாம் வகுப்பு பயின்ற
அரையாண்டு விடுமுறையில்
ஆராய்ந்து முடித்ததில்
மொத்தமாய் செத்தது
மகளிர் மேல் மரியாதை...

காதல் மறுத்த கன்னிகளை
கல்லூரி கழிவறைகளில்
படம் வரைந்து
பாகம் குறித்ததெனது
பரிணாம வளர்ச்சி...

சமையலுக்கும்
சமயத்தில் மையலுக்குமென
மணம் முடித்தவன் நான்...

மனைவியை மதித்தாய்
சரித்திரம் கிடையாது...

உடல் மச்சங்களின்
எண்ணிக்கை தெரியும்;
உள்ளது மிச்சங்களின்
எண்ணங்கள் புரியாது.!

எப்பொழுதும் ஒரு கேள்வி
என்னுடன் தொங்கி நிற்கும்;
எவனின் காதலி
என்னுடைய மனைவி?

ஊரடங்கு உத்தரவாய்
ஊரே தூங்கியழும்
பிற்பகல் பொழுதுகளில்
உள்தாளிட்டு சாத்திஇருக்கும்
கதவுகளை காண்கையில்
சந்தேக சுனாமியொன்று
சந்தம் பாடிச்செல்லும்.!

நிமிடங்கள் செத்தொழிந்தும்
நாட்கள் புதைக்கப்பட்டும்
நான் மட்டும் மாறவில்லை..

நேற்றைய
பொன்மாலை பொழுதில்
பெண்பாலை பெற்றாள் மனைவி...

நேற்றுவரை
'என்னை போல் ஒருவனென'
நெஞ்சு குளிர்ந்திருந்தது;
இன்று
'என்னை போல் ஒருவனை' எண்ணி
கொஞ்சமாய் வலிக்கிறது...

இப்பொழுதெல்லாம்
இரக்கமற்ற சைத்தான்னொருவன்
இதய சுவருகளின்மேல்
கூரிய கத்திக்கொண்டு
'கிடார்' வாசிப்பதுபோல
இசைமாற்றம் கண்டதென்
இதய துடிப்பு.!

எப்பொழுதும் பிரமைதான்...
என் மகளின் வருகைக்கு
'என்னை போல் ஒருவன்'
எல்லா இடத்திலும் காத்திருப்பதாய்...!

விறகான வீணைகள்.!



உள்ளத்தை ரணமாக்கி,
உடலை பணமாக்கும் சோகம்.!
உணர்வு பசி தீர்த்தாலே,
உணவு பசி தீரும் அவலம்.!

வாடகைக்கு போகும்
விலை போகா வீணைகள்.!

இரவில் அட்சய வீணைகள்;
பகலிலோ எச்சை வீணைகள்.!

காலத்தின் தடுமாற்றத்தால்
கட்டில் மேடையில் அரங்கேற்றம்,
வீணைகள் என்ற போதிலும்
அரங்கேற்றத்தில் மௌனங்களே பரிமாற்றம்.!

ஒவ்வொரு மீட்டலிலும் ஒவ்வொன்றாய்
உணர்ச்சி தந்திகள் அறுபட்டதால்
தங்கள் சொந்த சிதைக்கே
விறகாகும் வீணைகள்.!

பாரதி இருந்திருந்தால்
பல்லவியை மாற்றியிருப்பான்,
நல்லதோர் வீணை செய்து
அதை நலங்கெட 'புழுதியில்' - அன்று
'படுக்கையில்' எறிந்தோம் என்று.!

காமத்தினால் வெந்த
மோகத்தினால் வந்த
வேகத்தினால் இவர்களின்
தேகத்தை அணைக்க ஆட்களுண்டு;
சோகத்தை அணைக்க ஒருவராவது...?

வாசித்தீர்கள், நேசித்திற்ப்பீர்கள்;
யாசிக்கிறேன், யோசிப்பீர்களா?

ஆர்குட்டில் நல்லவனாய்/வல்லவனாய் நடிப்பது எப்படி?



ஆர்குட்டில்,
நல்லவனாய் வல்லவனாய்
இருப்பது எளிது,
நல்லவனை வல்லவனாய்
நடிப்பது கடிது...

கவிதைகளோடு இணக்கமான
காலை வணக்கங்கள்;
பொன்மொழியில் மிளிரவேண்டும்
மாலை வணக்கங்கள்.

பழக்கமில்லா மனிதரையும்
'தோழா' 'தோழி'என
கூறுதல் வேண்டும்...

அழகான பெண்கள்
'அண்ணா' என்று அழைத்தாலும்
அனல்விடும் சினம் அடக்கி
அன்பொழுக பேச வேண்டும்...

சமூகத்தின் மீது
கோபம் வேண்டும்,
சாக்கிரடீஸ் மீது
தாகம் வேண்டும்,
எழைகள் மீது
பாவம் வேண்டும்,
மார்க்சியம் மீது
மோகம் வேண்டும்...

எல்லோர் கருத்துக்கும்
எதிர்கருத்து கூற வேண்டும்,
இல்லாத புள்ளிவிபரம்
இருப்பதாய் காட்டவேண்டும்...

வேளை தவறாமல்
வாதாட வேண்டும்,
விமர்சனங்கள் எதிர்நோக்கிய
வியாக்கானம் வேண்டும்...

நாளை சொல்லபோகும்
பொது உடமை கருத்துக்கு,
இருந்த பத்துரூபாயில்
தேநீர் குடித்துவிட்டு
தடித்த புத்தகங்களில்
தடயங்கள் சுட வேண்டும்...

மனிதர்களை
இகழ வேண்டும்,
மனிதனை
புகழ வேண்டும்...

ஆங்கில பெயர்கள்
அறுபதோ, எழுபதோ
அறிந்திருக்க வேண்டும்....

புரியாத சித்தாந்தம் தந்த
தெரியாத அறிஞரின்
புகைப்படம் சுட்டு
profile dp'yil வைக்க வேண்டும்...

பாரதியின் கவிதைகள்
இரண்டுஒன்று வேண்டும்...
தமிழ் மொழியில் தட்டச்சு
கைவர வேண்டும்...

அம்மாவின்
பிறந்த நாள் மறந்து,
Orkut அழகுகளுக்கு
புகழ்மழை பொழிய வேண்டும்...

மொக்கை ஜோக்குகளுக்கு
முகம் மலர்ந்து சிரிக்கவேண்டும்,
புண்படுத்தும் கேலிகளுக்கு
புன்னகை பரிசளிக்கவேண்டும்...

வேண்டும் வேண்டும்
இப்படி பல 'வேண்டும்'...

அவ்வப்பொழுது இவ்வாறு
உண்மைகள் உடைப்பதுபோல
கவிதைகள் எழுதி
நல்லவனாய் காட்ட வேண்டும்...

போதுமடா சாமி,
நல்லவனாய் நடிப்பதைவிட
நல்லவனாய் இருந்து விடலாம் போல...???!!!

To: கடவுள், சொர்க்கம் Cc: எமதர்மராஜா, வைகுண்டம்



பெறுதல்:
ஏதேனும் ஒரு கடவுள்
சொர்க்கம்

அனுப்புதல்:
ஒரு மனிதன்
பூமி.

காது கேட்காத கடவுளுக்கு,
காணவிரும்புபவன் எழுதுவது....

கோரிக்கைகள் பலவைத்தும்
கணபொழுதும் செவிசாய்க்காமல்
கல்லாய் நிற்பதனால்
காது செவிடென நானே கொண்டேன்;
பிறகு நான் என்ன செய்ய பரம்பொருளே?

முதலில் நாமொரு
முடிவுக்கு வருவோம்;
நம்மில் சிறந்தவர் யார்?

முன் ஆதியில் நீயொரு
மனிதனை படைத்தாய்
பின்பாதியில் நாங்கள்
பலகடவுள்கள் படைத்தோம்,
உதடுகளை திறந்து
உண்மைகளை சொல்
நம்மில் சிறந்தவர் யார்?

மறைந்திருக்கும் பொருளுக்கு
மதிப்பதிகம் என்பதால்
புலப்படாத உன்னை
பெரியவனாக கொள்கிறேன்.

உலகத்தை படைத்தாய் சரி
உடனே தூக்கிஎரிந்தோட
உலகம் என்ன உனக்கு
உசிலம்பட்டி பெண்குழந்தையா?

தாகம் எடுத்தது
பரிணாம வளர்ச்சி,
வேகம் பிடித்தது
பூமியின் சுழற்சி.

அபிராமி அப்ரஹகமாக
அப்ரஹகாம் இப்ராஹிமாக
மனிதர்கள் யாவரும்
அறிவாளிகள் ஆக,
அறிவாளிகளில் சிலர்
உளவாளிகள் ஆக,
மொத்தத்தில் யாவரும்
களவாளிகள் ஆனோம்;

பற்றிக்கொண்டது
நான் பிறந்த பூமி,
அதை பார்க்காமல் நீங்க
எங்க போனீங்க சாமி?

மனித கண்டுபிடிப்பில்
மிச்சம் இருப்பது
'கண்டுபிடிக்காதது எதுவென
கண்டறியும் கருவி' தான்..

'காலையில் ஏழு
கடவுளை தொழு'என
ஒரு கும்பல் உரைக்க;
'மனிதனை நினை
கடவுளை மற' என
ஒரு கும்பல் இடிக்க
எதற்கு வம்பென
இரண்டையும் மறந்தோம்..

அய்யோ சரி சரி,
நடந்து முடிந்தவை
நிறைய இருக்கு,
நடவப்பவை கூறவே
விருப்பம் எனக்கு...

தண்ணீர் விட்டு
பயிர் வளர்த்து - இன்று
கண்ணீர் விட்டு
பயிர் வளர்க்கும்
விவசாய கதைகளை;
உடைகளின் அளவு
குறைய குறைய
நாகரீகத்தின் அளவு
உயர உயரும் கதைகளை;
நாட்டில் ஆண்டவனை விட
நாட்டை ஆண்டவன்
வலிதாகி போன கருமங்களை;

கண்ணில்லா மனிதர்களை
கண்ணிருந்தும் குருடர்களை
கருப்புபண புனிதர்களை
காவியுடை திருடர்களை

வறுமையின் கதறலை
செழுமையின் உதறலை
தாய்மையின் பதறலை
தாய்நாட்டு சிதறலை

மதவாதிகள் சாத்திரத்தை
மேதாவிகள் சூத்திரத்தை
பயந்துபோனவன் மூத்திரத்தை
பொறுமைஇழந்தவன் ஆத்திரத்தை

கந்தக வாசத்தை
காணகிடைக்கா நேசத்தை
பகுத்தறிவாளன் வேசத்தை
பாசக்காரன் மோசத்தை

பியிக்கப்பட்ட நகங்களை
கிழிக்கப்பட்ட உதடுகளை
கசக்கப்பட்ட மார்புகளை
நசுக்கப்பட்ட நெஞ்சுகளை

கண்ணீரை பேனாவில் நிரப்பி
கடிதம் நூறு எழுத வேண்டும்...

பக்கம் பக்கமாய்
துக்கம் சொல்லவேண்டும் நான்...

அதற்குமுன்;
எல்லாம் வல்ல இறைவா
எனக்கொன்று விளக்கிவிடு........

எழுத படிக்க தெரியுமா உனக்கு?