From: கிரதீபா பாட்டில்@ பழையஜனாதிபதி.காம்
Sent: Wednesday, July 25, 2012 2:12 PM
To: முரணாப்_முகர்ஜி@புதுஜனாதிபதி.காம்
Cc: சோ.காந்தி@டெல்லி.காம், பிரதமர்@இந்தியா.காம்
Subject: வாழ்த்துகள்
மதிப்பிற்குரிய முரணாப் ஐயாவிற்கு,
வாழ்த்துகள். ஜெயலலிதாஜி பேச்ச கேட்டுகிட்டு சங்மா ஊரூரா லேகியம் விற்க போகும் போதே எனக்கு தெரியும் நீங்க தான் அடுத்த ஜனாதிபதினு. எப்படியோ இன்னமும் நாலு வருஷத்துக்கு ஜாலியா நீங்க இருக்கலாம். இரண்டு லட்சம் சதுரடி பரப்பளவு கொண்ட ராஷ்டிரபதிபவன்ல பால் காய்ச்சீட்டீங்களா? இடம் கம்மியா இருக்குனு வருத்தப்படாதீங்க, பின்னால வாக்கிங் போக முகல் கார்டன்ஸ் இருக்கு. உங்களுக்கு ஒரு நல்ல விஷயம், ஒரு கெட்ட விஷயம் சொல்றேன். நல்ல விஷயம் ராஷ்டிரபதிபவன்ல மொத்தம் 340 ரூம்கள் இருக்கு. கெட்ட விஷயம் என்னான்னா நான் வெளிநாடு டூர் போனதுல அதுல 339 ரூம் சாவிய தொலைச்சுட்டேன். இருந்தாலும் கொஞ்சம் ரூம்களுக்கு டூப்ளிகேட் சாவி போட்டு வச்சிருக்கோம். ஐயா, சமையல்கட்டு தண்ணி பைப்பு கொஞ்சம் லூசு, சரியா அடைங்க, இல்லனா தண்ணி ஒழுகிகிட்டே இருக்கும். ஹால் டியுப்லைட் சுட்சு கொஞ்சம் எர்த் அடிக்கும் கவனமா இருங்க. பெட்ரூம்ல இருக்கிற அட்டாச் பாத்ரூம்ல பாசான் அதிகம், வழுக்கி விட்டுடும் பார்த்துக்கோங்க. பாத்ரூம் ஹீட்டர் சூடாக லேட்டாகும். வேடிக்கை பார்க்கறேன்னு மாடி பல்கனில ரொம்ப நேரம் நிக்காதீங்க, நேர் மேல குருவி கூடு கட்டி இருக்கு. அவ்வப்பொழுது அசிங்கம் பண்ணிடும். ஹால்ல இருக்கிற டிவி கொஞ்சம் ரிப்பேர், மேல ரெண்டு தட்டு தட்டினா சரியா ஓடும். எதுவும் பயமில்ல அங்க, தமிழக காங்கிரஸ்காரங்க மனு கொடுக்க வரும் போது மட்டும் கவனமா இருக்கவும். ஐயா, வெளிநாடு போறப்ப எல்லாம் எடுத்த போட்டோக்கள இரண்டு மூட்டையா கட்டி வச்சிருக்கேன். டவாலி சைக்கிள கட்டி எனக்கு அனுப்பி விடுங்க. அப்படியே எம்டி சிலிண்டர் ரெண்டு இருந்தா கொடுங்க, அடுத்த வாரம் திருப்பி தந்துடுறேன். மன்மோகன் சிங் அங்க வந்தாருன்னா, சமையல்காரங்கள விட்டு அவருக்கு புடிச்ச அதிரசம் செஞ்சுக்கொடுக்க சொல்லுங்க. உங்களுக்கு தெரியாததா, பாவம் அவரு அது சாப்பிட மட்டும் தான் வாய திறப்பாரு.
மற்றவை நேரில்.
அன்பு சகோதரி
கிரதீபா
From: முரணாப்_முகர்ஜி@புதுஜனாதிபதி.காம்
Sent: Thursday, July 26, 2012 12:19 PM
To: கிரதீபா பாட்டில்@ பழையஜனாதிபதி.காம்
Cc: சோ.காந்தி@டெல்லி.காம், பிரதமர்@இந்தியா.காம்
Subject: RE : வாழ்த்துகள்
மதிற்பிற்குரிய கிரதீபா சகோதரிக்கு,
உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள். புது இடம் பயமா இருக்கும்னு வந்தேன். உங்கள் தகவல்கள் உதவிகரமா இருந்தது. இருந்தாலும் நீங்க பாத்ரூம்ல கரப்பான் பூச்சி இருப்பத சொல்லல, அப்புறம் சமையல்கட்டுல பெருச்சாளி இருப்பதையும் சொல்லல. நான் அப்படியே ஷாக்காயிட்டேன். இன்னொரு உதவி பண்ணுங்க, எந்தெந்த வெளிநாடு போகலாம், எந்தெந்த சீசனில் போகலாம், என்ன கொண்டு போகலாம், எங்க தங்கலாம், என்ன வாங்கி வரலாம்னு சொன்னீங்கன்னா, இன்னமும் உதவிகரமா இருக்கும்.
நன்றிகளுடன்,
முரணாப்
பின்குறிப்பு : காலி சிலிண்டர்களையும், போட்டோ மூட்டைகளையும், அத்துடன் பாக்கு குத்தும் உரலையும் டவாலியிடம் இன்று காலை கொடுத்து விட்டேன். கிடைத்தவுடன் தெரிவிக்கவும்.
From: கிரதீபா பாட்டில்@ பழையஜனாதிபதி.காம்
Sent: Friday, July 27, 2012 18.36 PM
To: முரணாப்_முகர்ஜி@புதுஜனாதிபதி.காம்
Cc: சோ.காந்தி@டெல்லி.காம், பிரதமர்@இந்தியா.காம்
Subject: Re: Re : வாழ்த்துகள்
மதிற்பிற்குரிய முரணாப் ஐயா,
காலி சிலிண்டர்களையும், போட்டோ மூட்டைகளையும், பாக்கு இடிப்பதையும் அனுப்பியதற்கு நன்றிகள். ரம்ஜான் மாதத்தில் சவூதி, துபாய், அபுதாபி போக வேண்டாம். பாவம் அவங்களே ஒரு வேளை சோறு தான் சாப்பிடுவாங்க, ஹோட்டல்கள் மூடி இருக்கும். சீனா பக்கம் போகாம முடிஞ்சளவு தவிர்த்து விடுங்க, ஏன்னா, அங்க நண்டு, ஆமை ஓட்டுல தான் சோறே பொங்குவாங்க. பாரிஸ் பக்கம் போனா பீட்சா சாப்பிட்டுடாதீங்க, வயிறு கட்டிக்கும். அமெரிக்கா கிறிஸ்துமஸ் சமயம் போங்க, ஒரே கலர்புல்லா இருக்கும். ரஷ்யா டிசம்பர்ல போகாதீங்க, பனி ஓவர், போன தடவை போனப்ப போட்டோ புடிக்கிற கேமரா துரு புடிச்சுகிச்சு. ஆப்பிரிக்கா பக்கம் சுத்தமா போக வேண்டாம், போதுமான நல்லுறவு நீடிக்குதுன்னு கதை விட்டுடுங்க. இத்தாலி, பிரச்னை இல்ல, நீங்க போனவுடனே டிபன் கேரியர்ல காலையில இட்லியும், மதியம் சாதமும் வந்திடும். நைட்டுக்கு 2 சப்பாத்தியும் கொடுத்துடுவாங்க. அடிக்கடி பாகிஸ்தான் தான் போகவேண்டி இருக்கும், அவங்கள நம்பாதீங்க, எதுக்கும் , அங்கு போகும் போது நம்மூர் அக்கமாலா, கப்சி எடுத்து போகவும்.
அன்பு சகோதரி,
கிரதீபா
No comments:
Post a Comment