Friday, July 6, 2012

சும்மா.!!!

உங்க பையன் என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்? இப்போதைக்கு ____________ தான் இருக்கான்.!
நீங்க அழகா இருக்கீங்க.! _________ சொல்றீங்களா? இல்லை உண்மையாவா ?
அட இல்லீங்க, நான் _________ கிண்டல் பண்ணினேன்.
ஏண்டா மச்சான் கிரிக்கெட் விளையாட வரல, பிசியா? இல்ல மச்சான் _________ தான்.
ஏன்யா என் மச்சினியவே பார்க்குற? _________ பார்த்தேன்'ப்பா.!
ஆபிஸ் எப்போங்க முடிஞ்சது? ஏன் கேட்குற? இல்ல _______________
என்னய்யா புதுசா இந்த பக்கம், ஏதாவது முக்கியமான செய்தியா? _______ கூட வரக்கூடாதா?
_________ திட்டுனேன் சார், கோவிச்சுக்கிட்டு இப்படி பண்ணிட்டான்.
சட்டை சூப்பர் , மாமியார் வீட்டுல வாங்கி தந்ததா? ___________ தருவாங்கடா.!
வேணாம், ________ இரு, அப்புறம் உனக்குத்தான் கஷ்டம்.!
கொஞ்ச நேரம் ___________ இருடா, ஒரு மண்ணாங்கட்டியும் புரில.!

மேலே இருக்கும் எந்த வாக்கியதுக்காவது சரியா அர்த்தம் விளங்குதா நட்பூஸ்? இருக்காது. ஏன்னா, தமிழில் சும்மா'ங்கிற வார்த்தை மட்டும் நாம சும்மா சும்மா பயன்படுத்தலேனா, சுத்தமா நாம பேசுறது நமக்கே புரியாது. சும்மா சொல்லல, சீரியஸா சொல்றேன். தமிழ் வாழ்க. தமிழ் வளர்க.

லீவ் லெட்டர்

குங்குமம் வாசகர்களுக்காக மிக மிக சிரமப்பட்டு, பிரபலங்கள் ஸ்கூலில் படிக்கும்போது எழுதிய லீவ் லெட்டர்களை ( லீவ், லவ் அல்ல ) கண்டுபிடித்து பிரசுகத்திருக்கிறோம். இனி உங்க பாடு.

கவுண்டமணி, ஐந்தாம் வகுப்பு, குண்டலகேசி ஆரம்பப்பள்ளி:
டேய் டமரடக்க வாய, நீயெல்லாம் வாத்தியாராடா? ஏய் கொய்யாக்கா தலையா, ஏய் கோமுட்டி தலையா, உன் மூஞ்சி எனக்கு புடிக்கலடா, என்னால ஸ்கூலுக்கு வர முடியாது போடா. ஐயோ ஆண்டவா, என்ன ஏன் இதுமாதிரி பிசினாறி பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்ட. ஐயோ ராமா.!

மாணிக்கம் என்கிற நாமு ( ராமு ), ஏழாம் வகுப்பு, அண்ணா உயர்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம் :
ஐயோ தீத்சர், அம்மா மேல ஆணையா சொல்தேன், எனக்கு ரெண்து நாளா மூத்து வலி தீத்சர். ஐயோ, காலெல்லாம் கிதுகிதுன்னு ஆதுது தீத்சர். கண்ணெல்லாம் இருளுது தீத்சர். பள்ளிகூததுக்கு இன்னைக்கு வர முதியாது தீத்சர். என்னை மன்னிச்சிருங்க தீத்சர் என்னை மன்னிசிதுங்க.

வீராசாமி, ஐந்தாம் வகுப்பு, உயர்நிலை பள்ளி வண்டலூர்:
வாத்தியாரம்மா வணக்கம், எனக்கு ரெண்டு நாளா சுணக்கம், வேர் இஸ் யுவர் டாட்டரு? அதான் மேட்டரு.! உங்க டாட்டர பார்க்காம எனக்கு நோவு, அதான் இன்னைக்கு லீவு, ஏய் டண்டணக்கா, ஏய் டனக்குனக்கா.!

போக்கிரி, இரண்டாம் வகுப்பு, திருப்பாச்சி நடுநிலை பள்ளி, சிவகாசி
ண்ணா, வணக்கங்கண்ணா, நான் போக்கிரி எழுதறேங்கன்னா, நேத்து மதுரை முத்துபாண்டி கிரவுண்டுல கபடி மேட்ச்ங்கண்ணா, சும்மா கில்லி கில்லி கில்லி மாதிரி ஆடுறப்போ, கீழ சில்லற வாரி கால் உடைஞ்சு போச்சுங்கண்ணா. ண்ணா, யாரு பள்ளிகூடத்துக்கு மொதல வரோங்கிறது முக்கியமில்லண்ணா, யாரு வூட்டுக்கு போறன்கிறது தான் முக்கியம்ண்ணா.

கட்டபொம்மன் (எ) கர்ணன், எட்டாம் வகுப்பு, இயல் இசை பள்ளி, சென்னை
டீச்சர்ர்ர் டீச்சர்ர்ர்ர் டீச்சர்ர்ர்ர், லதா டீச்சர்ர்ர், எனக்கும் மட்டும் ஆண்டவன் பறக்கும் சக்தியை கொடுத்திருந்தால் டீச்சர்ர்ர், நான் நேரா பறந்து வந்து லீவு கேட்டிருப்பேன் டீச்சர். உங்கம்மா நேத்து சூப்பர் மார்கெட்ல தடுக்கி விழுந்தப்போ என் ரெண்டு கையால தாங்கி பிடிச்சேன் டீச்சர். இப்போ என் கை ஒடஞ்சு கை வீசம்மா கை வீசு, கை வீசம்மா கை வீசுன்னு உள்ளுக்குள்ள அழுவறேன் டீச்சர். இடி தாங்கும் கைகள், அடி தாங்குமா......

கைப்புள்ள, ஆறாம் வகுப்பு, நாய் சேகர் நினைவு துவக்கப்பள்ளி, கட்டதுரைபுரம்.
ஹலோ, நான் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் கைப்புள்ள எழுதறேன், எங்க வாத்தியார் ஜாக் இருக்காரா? ஏய், ஏய் மிஸ்டர், இது லவ் லெட்டர் இல்ல, லீவ் லெட்டர். நேத்து பத்து பாஞ்சு பேரு, கல்லுக்கல்டை மூத்திர சந்துல வச்சு என்ன நொங்கி நோம்பி கும்பிட்டுட்டாங்க. நான் அதுக்கு சரி பட்டு வரமட்டேனாம். அதனால, அதனால, ஐ ஆம் சிங் இன் தா ரெயின், ஐ ஆம் சொய்ங் இன் தா ரெயின்.

கேப்டன், பத்தாம் வகுப்பு, B செக்சன், காவலர் குடியிருப்பு உயர்நிலை பள்ளி, செங்கோட்டை
ஏய் புள்ள டீச்சரு, தமிழ்நாட்டுல இருக்கிறது மொத்தம் 21698 பள்ளிக்கூடம். அதுல ஆரம்பள்ளி 14356, நடுநிலைபள்ளி 4415, உயர்நிலைபள்ளி 2927. மொத்தமா படிக்கிற குழந்தைங்க 674857. அதுல ஆம்பள குழந்தைங்க 389748 பொம்பள குழந்தைங்க 285109. இதுல நான் ஒருத்தன் வராட்டி ஒரு தப்பும் இல்ல, மொதல அவங்களுக்கு புரியுற மாதிரி பாடம் எடுங்கவரட்டா, ஆங்.!

Laughing club

இந்தியாவின் பொருளாதார தலைநகரமும், குற்றங்களின் தலைநகரமுமான மும்பையில், மும்பை காவல்துறை சரித்திர முக்கயத்துவம் வாய்ந்த ஒரு செயலை சென்றவாரம் செய்திருக்கிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்; கொஞ்சம் பழசா இருக்குல, இப்படி வச்சுக்குவோம், பல்லு தெரிய சிரித்தால் உடல் தொல்ல விட்டு போகும் என்பதற்காக ஊருக்கு ஊருக்கு சிரிப்பு சங்கங்களை ஆரம்பித்தால், மும்பை மாநகர போலீஸ், மும்பை Laughing club'ஐ தடை செய்திருக்கிறது. காரணம், அவர்கள் பூங்கா, நண்பர்கள் வீடு போன்ற இடங்களில் சப்தமாக சிரிக்கறாங்களாம். ஆக நாட்டுல நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சாலும், நாம சிரிக்க கூட சுதந்திரமில்லை. பதருகளா, விலங்குகிட்ட இருந்த நம்மள கொஞ்சமாவது பிரித்து காமிப்பதே சிரிப்பு தான்யா. என்னய்யா நடக்குது இந்த தேசத்தில், நாடு ரோட்டுல எச்சில் துப்புறவன், உச்சா போறவனையெல்லாம் விட்டுடுறாங்க, சிரிக்கறவங்கள புடிக்கிறாங்க. தடியெடுத்தவன் எல்லாம் தாணாக்காரன் ஆனாலும், தாணாக்காரன் தடி எடுத்தாலும் நஷ்டம் நமக்குதான்.! இப்படியே போனால் இவிங்க, அடுத்து கொட்டாவி விடுறவன், தும்முறவன், விக்குறவன், இருமறவன் கன்னத்தில் எல்லாம் கைரேகையை பன்ச் பண்ணிடுவாங்க போலிருக்கு. அப்படியே அடுத்து ஒவ்வொரு காலேஜா போனீங்கன்னா, இந்த சைட்டடிப்பது, கடலை போடுவது, மொக்கை போடுவதுக்கெல்லாம் தடா, பொடா போட்டு கெடா வெட்டி விட்டுடுங்க. அதை முடிச்சுட்டு அப்படியே ஒவ்வொரு வீடா போனீங்கன்னா நகம் வெட்டுறது, மூஞ்சி கழுவறது, குளிக்கறது, கக்கா போறதுக்கெல்லாம் ஒரு தடைய போட்டுடுங்க. அப்படியே டைவர்ஷன் எடுத்து டாஸ்மாக் பக்கம் போனா, ஏப்பம் விடுறது, வாந்தி எடுக்கறது, மாட்டையாவது போன்ற குடிமகன்களின் உரிமைகளிலும் கல்ல தூக்கி போட்டுடலாம். அப்புறம் மிச்சமிருக்கிறது மூக்கு நோண்டுவது, தலை சொறிவது, சளி சிந்துவது போன்ற அன்றாட கடமைகளையும் தடுத்துட்டா, மொத்த சோலியும் முடிச்சுடலாம். உலகின் பெரிய ஜனநாயகமான இந்திய தேசத்தில், இப்படியாய்யா சிரிக்கும் உரிமைகளை கூட பறிப்பீங்க? இருங்கய்யா, உங்களையெல்லாம் நடிகர் பிரபுவோட கால்ஷீட் வாங்கி வந்து புரட்சி பண்ண வைக்கறேன்.