Friday, July 6, 2012

Laughing club

இந்தியாவின் பொருளாதார தலைநகரமும், குற்றங்களின் தலைநகரமுமான மும்பையில், மும்பை காவல்துறை சரித்திர முக்கயத்துவம் வாய்ந்த ஒரு செயலை சென்றவாரம் செய்திருக்கிறது. வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்; கொஞ்சம் பழசா இருக்குல, இப்படி வச்சுக்குவோம், பல்லு தெரிய சிரித்தால் உடல் தொல்ல விட்டு போகும் என்பதற்காக ஊருக்கு ஊருக்கு சிரிப்பு சங்கங்களை ஆரம்பித்தால், மும்பை மாநகர போலீஸ், மும்பை Laughing club'ஐ தடை செய்திருக்கிறது. காரணம், அவர்கள் பூங்கா, நண்பர்கள் வீடு போன்ற இடங்களில் சப்தமாக சிரிக்கறாங்களாம். ஆக நாட்டுல நம்ம பொழப்பு சிரிப்பா சிரிச்சாலும், நாம சிரிக்க கூட சுதந்திரமில்லை. பதருகளா, விலங்குகிட்ட இருந்த நம்மள கொஞ்சமாவது பிரித்து காமிப்பதே சிரிப்பு தான்யா. என்னய்யா நடக்குது இந்த தேசத்தில், நாடு ரோட்டுல எச்சில் துப்புறவன், உச்சா போறவனையெல்லாம் விட்டுடுறாங்க, சிரிக்கறவங்கள புடிக்கிறாங்க. தடியெடுத்தவன் எல்லாம் தாணாக்காரன் ஆனாலும், தாணாக்காரன் தடி எடுத்தாலும் நஷ்டம் நமக்குதான்.! இப்படியே போனால் இவிங்க, அடுத்து கொட்டாவி விடுறவன், தும்முறவன், விக்குறவன், இருமறவன் கன்னத்தில் எல்லாம் கைரேகையை பன்ச் பண்ணிடுவாங்க போலிருக்கு. அப்படியே அடுத்து ஒவ்வொரு காலேஜா போனீங்கன்னா, இந்த சைட்டடிப்பது, கடலை போடுவது, மொக்கை போடுவதுக்கெல்லாம் தடா, பொடா போட்டு கெடா வெட்டி விட்டுடுங்க. அதை முடிச்சுட்டு அப்படியே ஒவ்வொரு வீடா போனீங்கன்னா நகம் வெட்டுறது, மூஞ்சி கழுவறது, குளிக்கறது, கக்கா போறதுக்கெல்லாம் ஒரு தடைய போட்டுடுங்க. அப்படியே டைவர்ஷன் எடுத்து டாஸ்மாக் பக்கம் போனா, ஏப்பம் விடுறது, வாந்தி எடுக்கறது, மாட்டையாவது போன்ற குடிமகன்களின் உரிமைகளிலும் கல்ல தூக்கி போட்டுடலாம். அப்புறம் மிச்சமிருக்கிறது மூக்கு நோண்டுவது, தலை சொறிவது, சளி சிந்துவது போன்ற அன்றாட கடமைகளையும் தடுத்துட்டா, மொத்த சோலியும் முடிச்சுடலாம். உலகின் பெரிய ஜனநாயகமான இந்திய தேசத்தில், இப்படியாய்யா சிரிக்கும் உரிமைகளை கூட பறிப்பீங்க? இருங்கய்யா, உங்களையெல்லாம் நடிகர் பிரபுவோட கால்ஷீட் வாங்கி வந்து புரட்சி பண்ண வைக்கறேன்.

No comments:

Post a Comment