Wednesday, August 15, 2012

குறுங்கதை - 3 : அரோகரா.!

'சாவடிக்கிறாங்கடா மாப்ள' என்றான் செல்வா, போனை அணைத்துக்கொண்டே .

ஏன்டா என்னாச்சு? - இது நான்.

'திருத்தணி இப்போ வேண்டாமாம், மொதல பழனிக்கு போக சொல்றாங்க, கடுப்பேத்தறாங்க மை லார்ட்'...

ஹாஹாஹா, சரி, நம்ம வேலை அதானே, செய்யும் தொழிலே பணம், சலிச்சுக்ககூடாது, வண்டிய விடு...

'எல்லாம் பண திமிருடா, இவனுங்களுக்காக நாம லோல்பட வேண்டியாதா இருக்கு'

அந்த திமிர் இருக்கிற வரை தான், நமக்கு சோறு, ஆக்சிலேட்டர அமுத்து கண்ணா..

மொதல மருதமலை, அப்புறம் திருத்தணி, இப்போ கடைசில பழனியாம், எல்லா முருகரும் ஒன்னு தானடா?

எல்லாமே ஜூசுமே நல்லாத்தான் இருக்கு, வயிர நிரப்புது, நீ ஏன் எப்பவுமே பைனாப்பிள் ஃப்ளேவரே குடிக்கிற?

அய்யா அரிஸ்டாட்டிலே போதும் உங்க தத்துவ மழை...முடியல...

ஹாஹாஹா, நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு, நான் ஓட்டுறேன், பழனி வந்தா எழுப்பி விடுறேன்...

தூரத்தில் தெரிந்தது பழனி மலை. மலை மேல் ஓம் முருகா என்ற நியான் விளக்கு போர்டு எங்களை அன்புடன் வரவேற்றது.

செல்வா, ம்ம்ம்ம் செல்வா, மொதல Solar Depthrazer வச்சு மலைய சுத்தி 200 மீட்டர் ஆழத்துக்கு, 2 மீட்டர் அகலத்துக்கு குழி வெட்டு. அப்புறம் மலைய சுத்தி 20அடிக்கு ஒரு எலக்ட்ரோ stonetic சங்கிலியை ஒட்ட வை. நாப்பது ரோபோவ விட்டு பூமியோட ஒட்டி இருக்கிற மலையோட அடிபகுதிய வெட்ட சொல்லு. ம்ம்ம், சீக்கிரம், டூ இட் ஃபாஸ்ட் மேன்' என்று சொல்லிக்கொண்டே ஒரு எலக்ட்ரானிக் சிகரெட்டை பற்றவைத்தேன்.

ரோபோவுக்களுக்கு களைப்பு தெரியாம இருக்க 'அரோகரா அரோகரானு' கூவ சொல்லட்டுமா என்று கண்ணடித்தான்.

நாற்பது நிமிடம் கரைந்தது, கொஞ்சம் லேட்தான்.

பழனி மலை எங்கள் விண்கலத்துடன் இப்போது வானத்தில் பறந்து கொண்டிருந்தது. எல்லாம் நான்காம் உலகப்போருக்கு பின் செயலிழந்த பூமியில் எஞ்சி, க்லூட்டோ கிரகத்தில் குடியமர்த்தப்பட்ட பணக்கார தமிழர்களுக்காக.

**********
டவுட்டு : அது பழனியா? பழநியா?

குறுங்கதை - 2

தட்.. தட்...தட்.... கதவை திறந்தேன். புல் மேக்கப்பில் நின்றுக்கொண்டிருந்தார் ஒருவர். ருக்குமணி நாடக சபா அடுத்த பில்டிங் என்றுவிட்டு கதவை மூடினேன்.

தட்..தட்...தட்... கதவை திறந்தேன். நான் கடவுள் என்றார். நானும் தான் என்றுவிட்டு கதவை மூட போனேன். என் தலைக்கு பின்னால் ஒளிவட்டம் பாரு என்றார். அட ஆமா, 33 சென்டிமீட்டர் அகலத்துக்கு ஒளிவட்டம். சாமீமீமீமீமீமீமீ என்று கையெடுத்து கும்பிட்டு, மயக்கமடைந்தேன். நைட்டே பாதி காலியாகி இருந்த வாட்டர் பாக்கெட் தண்ணிய என் மூஞ்சியில் மிக்ஸ் செய்து எழுப்பிவிட்டார் கடவுள். என்ன சாமி இந்தபக்கம் என்றேன். சென்னை சிட்டியில் தங்கி இருந்த கோவிலுக்கு வழி மறந்துடுச்சு ஹெல்ப் பண்ணுன்னார். சட்டைய போட்டு, குட்டிகுரா பவுடர் அப்பி, கடவுளுடன் கோவிலுக்கு கிளம்பினேன்.

கோவில்...
'ஏய் என்ன வேண்டுதலா? வேஷத்துல இருக்கீங்க, போ, போயி லைன்ல வாங்க' என்றார் சிறப்பு தரிசன டோக்கன் கிழிப்பவர்.

ஏம்பா, இவரு யாரு தெரியுமா? இவர் தான் சாமி என்றேன். எங்களை ஏற இறங்க பார்த்து, தெரியுது என்றுவிட்டு சிறப்பு டோக்கன் இருக்கார் என்றார்.

இல்ல.. அது எதுக்கு இவர் தான் சாமியாச்சே, டிரஸ் பாரு, நகை பாரு, பியூர் கோல்டு...

'அது இல்லாம இந்த வழியா போகமுடியாது, என்ன திட்டுவாங்க'..
யோவ் இவரு நம்மள காப்பாத்துற சாமிய்யா, வழி தவறி வந்துட்டாராம், உள்ள உடுய்யா...

'நாட்டுல பல பேரு இப்படித்தான் சொல்லிக்கிட்டு அலையுறான், வி.ஐ.பி பாஸ் இருக்கா?'...

யோவ், இவரே பெரிய வி.ஐ.பி தான், என்ன எங்கள உள்ள விடமாட்டியா?..

'அப்படியெல்லாம் அனுப்ப முடியாதுங்க, இவ்வளவு பேசறீங்க சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கலாம்ல'....

நான் யாருன்னு தெரியுமா? இந்த ஏரியா கவுன்சிலரோட கொளுந்தியாளோட சின்னம்மா பையனோட தோஸ்து...

'ஐயோ சார் மன்னிச்சுடுங்க, நீங்க போங்க, நான் சொல்லிக்கிறேன்'...

கருவறையில் இருக்கும் சிலையை காண, என் பின்னாடி நடக்க ஆரம்பித்தார் கடவுள்.

Tuesday, August 14, 2012

பரத்தைகூற்று.!


புதுமைப்பித்தன் நடந்து சென்ற அதே வீதிதான், ஜி.நாகராஜன் புழங்கிய அதே வீடுகள் தான், சாரு சந்தித்த அதே மனிதர்கள் தான், பரத்தைகூற்றும் கிட்டத்தட்ட அதையே தான் விளிக்கிறது.!!! ஆனால், சூரியனையும் நிலவையும் கூட தினம் தினம் பார்க்கிறோம், அலுத்தா போய்விடுகிறது? ஒவ்வொரு நாளும்
புதுசாகத்தானே தெரிகிறது, அதுபோல படிக்கும் போது புதிதாகவே தோன்றியது பரத்தைகூற்று.!!!