
உள்ளத்தை ரணமாக்கி,
உடலை பணமாக்கும் சோகம்.!
உணர்வு பசி தீர்த்தாலே,
உணவு பசி தீரும் அவலம்.!
வாடகைக்கு போகும்
விலை போகா வீணைகள்.!
இரவில் அட்சய வீணைகள்;
பகலிலோ எச்சை வீணைகள்.!
காலத்தின் தடுமாற்றத்தால்
கட்டில் மேடையில் அரங்கேற்றம்,
வீணைகள் என்ற போதிலும்
அரங்கேற்றத்தில் மௌனங்களே பரிமாற்றம்.!
ஒவ்வொரு மீட்டலிலும் ஒவ்வொன்றாய்
உணர்ச்சி தந்திகள் அறுபட்டதால்
தங்கள் சொந்த சிதைக்கே
விறகாகும் வீணைகள்.!
பாரதி இருந்திருந்தால்
பல்லவியை மாற்றியிருப்பான்,
நல்லதோர் வீணை செய்து
அதை நலங்கெட 'புழுதியில்' - அன்று
'படுக்கையில்' எறிந்தோம் என்று.!
காமத்தினால் வெந்த
மோகத்தினால் வந்த
வேகத்தினால் இவர்களின்
தேகத்தை அணைக்க ஆட்களுண்டு;
சோகத்தை அணைக்க ஒருவராவது...?
வாசித்தீர்கள், நேசித்திற்ப்பீர்கள்;
யாசிக்கிறேன், யோசிப்பீர்களா?
No comments:
Post a Comment