
ஆர்குட்டில்,
நல்லவனாய் வல்லவனாய்
இருப்பது எளிது,
நல்லவனை வல்லவனாய்
நடிப்பது கடிது...
கவிதைகளோடு இணக்கமான
காலை வணக்கங்கள்;
பொன்மொழியில் மிளிரவேண்டும்
மாலை வணக்கங்கள்.
பழக்கமில்லா மனிதரையும்
'தோழா' 'தோழி'என
கூறுதல் வேண்டும்...
அழகான பெண்கள்
'அண்ணா' என்று அழைத்தாலும்
அனல்விடும் சினம் அடக்கி
அன்பொழுக பேச வேண்டும்...
சமூகத்தின் மீது
கோபம் வேண்டும்,
சாக்கிரடீஸ் மீது
தாகம் வேண்டும்,
எழைகள் மீது
பாவம் வேண்டும்,
மார்க்சியம் மீது
மோகம் வேண்டும்...
எல்லோர் கருத்துக்கும்
எதிர்கருத்து கூற வேண்டும்,
இல்லாத புள்ளிவிபரம்
இருப்பதாய் காட்டவேண்டும்...
வேளை தவறாமல்
வாதாட வேண்டும்,
விமர்சனங்கள் எதிர்நோக்கிய
வியாக்கானம் வேண்டும்...
நாளை சொல்லபோகும்
பொது உடமை கருத்துக்கு,
இருந்த பத்துரூபாயில்
தேநீர் குடித்துவிட்டு
தடித்த புத்தகங்களில்
தடயங்கள் சுட வேண்டும்...
மனிதர்களை
இகழ வேண்டும்,
மனிதனை
புகழ வேண்டும்...
ஆங்கில பெயர்கள்
அறுபதோ, எழுபதோ
அறிந்திருக்க வேண்டும்....
புரியாத சித்தாந்தம் தந்த
தெரியாத அறிஞரின்
புகைப்படம் சுட்டு
profile dp'yil வைக்க வேண்டும்...
பாரதியின் கவிதைகள்
இரண்டுஒன்று வேண்டும்...
தமிழ் மொழியில் தட்டச்சு
கைவர வேண்டும்...
அம்மாவின்
பிறந்த நாள் மறந்து,
Orkut அழகுகளுக்கு
புகழ்மழை பொழிய வேண்டும்...
மொக்கை ஜோக்குகளுக்கு
முகம் மலர்ந்து சிரிக்கவேண்டும்,
புண்படுத்தும் கேலிகளுக்கு
புன்னகை பரிசளிக்கவேண்டும்...
வேண்டும் வேண்டும்
இப்படி பல 'வேண்டும்'...
அவ்வப்பொழுது இவ்வாறு
உண்மைகள் உடைப்பதுபோல
கவிதைகள் எழுதி
நல்லவனாய் காட்ட வேண்டும்...
போதுமடா சாமி,
நல்லவனாய் நடிப்பதைவிட
நல்லவனாய் இருந்து விடலாம் போல...???!!!
வெகுவாக ரசித்தேன்.
ReplyDelete//அம்மாவின்
பிறந்த நாள் மறந்து,
Orkut அழகுகளுக்கு
புகழ்மழை பொழிய வேண்டும்...//
கொள்ள பேர் அப்பிடித்தான் திரியிறாய்ங்க இன்னைக்கு
அருமை ,அசத்திட்டீங்களே !!
ReplyDelete