
பெண்ணினம் மீதான
கண்ணிய குறைவு
வேர்விட்ட நேரத்தை
வரையறுக்க முடியவில்லை;
வரலாற்று சுவடுமில்லை!
மூன்று மதிப்பெண்கள்
முந்திசென்றத்தில்
வண்டு ரெண்டினை
கண்ணாய் கொண்டவளின்
கன்னம் கிள்ளியத்தில்
வேர்விட்டுருக்க வேண்டும்
பெண்களின் மீதான காழ்ப்புணர்ச்சி.
விடைதெரிய தருணங்களில்
வார்த்தைகளால் வறுத்தெடுக்கும்
வகுப்பாசிரியை புண்ணியத்தில்
வளர்ந்தது என் வக்கிரம்...
ஆணுக்கும் பெண்ணுக்குமான
அடிப்படை வித்தியாசங்களை
பத்தாம் வகுப்பு பயின்ற
அரையாண்டு விடுமுறையில்
ஆராய்ந்து முடித்ததில்
மொத்தமாய் செத்தது
மகளிர் மேல் மரியாதை...
காதல் மறுத்த கன்னிகளை
கல்லூரி கழிவறைகளில்
படம் வரைந்து
பாகம் குறித்ததெனது
பரிணாம வளர்ச்சி...
சமையலுக்கும்
சமயத்தில் மையலுக்குமென
மணம் முடித்தவன் நான்...
மனைவியை மதித்தாய்
சரித்திரம் கிடையாது...
உடல் மச்சங்களின்
எண்ணிக்கை தெரியும்;
உள்ளது மிச்சங்களின்
எண்ணங்கள் புரியாது.!
எப்பொழுதும் ஒரு கேள்வி
என்னுடன் தொங்கி நிற்கும்;
எவனின் காதலி
என்னுடைய மனைவி?
ஊரடங்கு உத்தரவாய்
ஊரே தூங்கியழும்
பிற்பகல் பொழுதுகளில்
உள்தாளிட்டு சாத்திஇருக்கும்
கதவுகளை காண்கையில்
சந்தேக சுனாமியொன்று
சந்தம் பாடிச்செல்லும்.!
நிமிடங்கள் செத்தொழிந்தும்
நாட்கள் புதைக்கப்பட்டும்
நான் மட்டும் மாறவில்லை..
நேற்றைய
பொன்மாலை பொழுதில்
பெண்பாலை பெற்றாள் மனைவி...
நேற்றுவரை
'என்னை போல் ஒருவனென'
நெஞ்சு குளிர்ந்திருந்தது;
இன்று
'என்னை போல் ஒருவனை' எண்ணி
கொஞ்சமாய் வலிக்கிறது...
இப்பொழுதெல்லாம்
இரக்கமற்ற சைத்தான்னொருவன்
இதய சுவருகளின்மேல்
கூரிய கத்திக்கொண்டு
'கிடார்' வாசிப்பதுபோல
இசைமாற்றம் கண்டதென்
இதய துடிப்பு.!
எப்பொழுதும் பிரமைதான்...
என் மகளின் வருகைக்கு
'என்னை போல் ஒருவன்'
எல்லா இடத்திலும் காத்திருப்பதாய்...!
எப்பொழுதும் ஒரு கேள்வி
ReplyDeleteஎன்னுடன் தொங்கி நிற்கும்;
எவனின் காதலி
என்னுடைய மனைவி?
ஊரடங்கு உத்தரவாய்
ஊரே தூங்கியழும்
பிற்பகல் பொழுதுகளில்
உள்தாளிட்டு சாத்திஇருக்கும்
கதவுகளை காண்கையில்
சந்தேக சுனாமியொன்று
சந்தம் பாடிச்செல்லும்.!
கண்ணீர் மழ்க கனக்கிறது நெஞ்சம்
எப்பொழுதும் ஒரு கேள்வி
ReplyDeleteஎன்னுடன் தொங்கி நிற்கும்;
எவனின் காதலி
என்னுடைய மனைவி?
ஊரடங்கு உத்தரவாய்
ஊரே தூங்கியழும்
பிற்பகல் பொழுதுகளில்
உள்தாளிட்டு சாத்திஇருக்கும்
கதவுகளை காண்கையில்
சந்தேக சுனாமியொன்று
சந்தம் பாடிச்செல்லும்.!
கண்ணீர் மழ்க கனக்கிறது நெஞ்சம்
:))
ReplyDelete