Thursday, August 26, 2010

நிர்வாணம்...!


நாம் எப்பொழுதெல்லாம்
நிர்வாணமாய் இருந்திருக்கிறோம்?

உலகின்பால் பிறத்தளிலும்
உடலின்பால் இறத்தளிலும்
சுத்தத்தின்பால் குளித்தளிலும்
சுகத்தின்பால் கூடலிலும்
நாம் நிர்வாணம் தரித்திரிகிறோம்.

சரி,
நாம் எப்பொழுதெல்லாம்
நிர்வாணமாய் உணர்ந்திற்க்கிறோம்?

மனைவியின் தோழி ஒருத்தி
'முகம் பார்த்து பேசுங்கள்'
என்ற பொழுது
என் மேலாடைகள்
களையப்பட்டன...

கர்ப்பிணியை
கண்டுகொள்ளாத
பேருந்து பயணங்களில்
என் கீழாடைகள் கிழிக்கப்பட்டன.

சிறுவன் பரிமாற
சிரித்துண்ட சிற்றுண்டி நிமிடங்களில்;

அடிபட்டு கிடந்தவனைவிட
அலுவலக கடிகாரம்
பெரிதாய் தெரிந்த நொடிகளில்;

கருப்பான குழந்தையென
கொஞ்சாத தருணங்களில்;

இப்படி அன்றாட வாழ்வின்
கொடூர நேரங்களில்
நானே திரௌபதியாய்
என் தவறுகளே துச்சாததனாய்
மேலாடைகள் களையப்பட்டும்
கீழாடைகள் கிழிக்கப்பட்டும்
உள்ளாடைகள் கூட
ஒவ்வொன்றாய் உருவப்பட்டும்;

அங்காடிதெருவில் அலைகின்ற
நிர்வாண நாய்போல நிற்பதுவாய்
என் நெஞ்சம்நிற்காமல் சொல்கிறது
உங்களுக்கு எப்படியென
எனக்கு தெரியவில்லை...

அன்பாய் சொல்லுகிறேன்
'ஆடைகள் பத்திரம்'....!

17 comments:

  1. மீ த பர்ஸ்ட்.. பெருமையடைகிறேன் !

    ReplyDelete
  2. நம்மால் கொடுமைகளைத்தவிர்க்க முடியவில்லை, நாமும் அதில் உடந்தையாகி விட்டோமே என்ற இயலாமை, ஆகவே நாம் ஆடைகள் அணிந்து இருந்தாலும், மானங்கெட்டவர்கள் என்ற சாடல் உணரப்படுகிறது. மனதைத்தொடும், தொட்ட கவிதை! ஆனால் இயற்கை விதி, அழிதலுக்கும், ஆக்கத்திற்கும் அவ்வளவு வித்தியாசம் பார்ப்பதில்லை! மலர்வதும், மடிவதும் இயற்கைக்கு சாதாரணம்! நாம் நாமல்ல! வலி வழி தரும்! ஆயிரம் விதிகள்..நாம் அறியாதவை..புரியாதவை! புலப்படும்போது நேரம் முடிந்திருக்கும்.

    உங்கள் கவிதைகள் உண்மையைத்தாங்கி வருவதால்,என்னால் அதை அனுபவிக்க முடிந்தது.
    படைப்புக்கு நன்றி!

    ReplyDelete
  3. அர்த்தமுள்ள அழகான கவிதை

    ReplyDelete
  4. உண்மையிலே சுட்டு விட்டீர்களே அண்ணா
    இதயம் வலிக்கிறது என் நிர்வாண நிமிடங்களை நினைக்கயில் ;))

    ReplyDelete
  5. இது என்ன தசாவாதர முயற்சி?? எங்க தோட்டாவா இது????

    ReplyDelete
  6. முதல் 10 வரிகள் தேவையற்றவை என நினைக்கிறேன். கவிதை 11வது வரியில் தொடங்குகிறது. முன்னேற்பாடெல்லாம் இன்றைய வாசகர்களுக்கு தேவையில்லை.

    ஆனா மேட்டர் சூப்பர்.. வார்த்தை பிரயோகங்களும் நச்!

    இப்படி ஒரு தோட்டாவும் இருக்காரா? ரைட்டு

    ReplyDelete
  7. செம்ம செம்ம ;-))

    ReplyDelete
  8. உண்மைக்கு ஆடை கிடையாது அது நிர்வாணமானது உங்கள் எழுத்துக்களில் நிதரிசனம் சுடுகிறது.நானும் அவமானப்பட்டு தலைகவிழ்க்கிறேன.நீங்கள் சொல்லிய தருணங்களை கவனித்து , உணர்ந்து பின் ஒதுங்கி போனவன்.நானும் இந்த சமூக அவலங்களை கண்டும் காணமல் ஓடிக்கொண்டிருக்கிறேன்

    ReplyDelete
  9. சுரேந்தர்December 27, 2011 at 12:31 AM

    தேவையில்லாத சில வார்த்தைகளையோ, சில வரிகளையோ 'எடிட்' செஞ்சா... போதும், நிச்சயம் இது நல்ல கவிதை. பாராட்டுகள் நண்பா.

    ReplyDelete
  10. சுரேந்தர்December 27, 2011 at 12:34 AM

    உங்க மத்த கவிதைகளை தேட வைக்குது....

    ReplyDelete
  11. //அடிபட்டு கிடந்தவனைவிட
    அலுவலக கடிகாரம்
    பெரிதாய் தெரிந்த நொடிகளில்//

    nalla varigal

    ReplyDelete
  12. மிகவும் நன்று!மேலும் எழுதுங்கள்

    ReplyDelete
  13. இங்க கமெண்ட் போட தகுதி இருக்கான்னு தெரியல எதுக்கும் போட்டு வைப்போம் நிஜமாவே இப்படி ஒரு தோட்டாவான்னு யோசிக்க வச்சிட்டீங்க.....வார்த்தைகள் பயன்படுத்திய இடம் அருமை....கார்க்கி அண்ணா சொன்னா மாதிரியே கவிதைக்கு முன்னேற்பாடு தேவையான்னு நானும் நினைக்கிறேன்....# இத சொல்லியே ஆகனும் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்...

    ReplyDelete
  14. அருமை .அருமை .இதற்குமேல் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    ReplyDelete