தட்.. தட்...தட்.... கதவை திறந்தேன். புல் மேக்கப்பில் நின்றுக்கொண்டிருந்தார் ஒருவர். ருக்குமணி நாடக சபா அடுத்த பில்டிங் என்றுவிட்டு கதவை மூடினேன்.
தட்..தட்...தட்... கதவை திறந்தேன். நான் கடவுள் என்றார். நானும் தான் என்றுவிட்டு கதவை மூட போனேன். என் தலைக்கு பின்னால் ஒளிவட்டம் பாரு என்றார். அட ஆமா, 33 சென்டிமீட்டர் அகலத்துக்கு ஒளிவட்டம். சாமீமீமீமீமீமீமீ என்று கையெடுத்து கும்பிட்டு, மயக்கமடைந்தேன். நைட்டே பாதி காலியாகி இருந்த வாட்டர் பாக்கெட் தண்ணிய என் மூஞ்சியில் மிக்ஸ் செய்து எழுப்பிவிட்டார் கடவுள். என்ன சாமி இந்தபக்கம் என்றேன். சென்னை சிட்டியில் தங்கி இருந்த கோவிலுக்கு வழி மறந்துடுச்சு ஹெல்ப் பண்ணுன்னார். சட்டைய போட்டு, குட்டிகுரா பவுடர் அப்பி, கடவுளுடன் கோவிலுக்கு கிளம்பினேன்.
கோவில்...
'ஏய் என்ன வேண்டுதலா? வேஷத்துல இருக்கீங்க, போ, போயி லைன்ல வாங்க' என்றார் சிறப்பு தரிசன டோக்கன் கிழிப்பவர்.
ஏம்பா, இவரு யாரு தெரியுமா? இவர் தான் சாமி என்றேன். எங்களை ஏற இறங்க பார்த்து, தெரியுது என்றுவிட்டு சிறப்பு டோக்கன் இருக்கார் என்றார்.
இல்ல.. அது எதுக்கு இவர் தான் சாமியாச்சே, டிரஸ் பாரு, நகை பாரு, பியூர் கோல்டு...
'அது இல்லாம இந்த வழியா போகமுடியாது, என்ன திட்டுவாங்க'..
யோவ் இவரு நம்மள காப்பாத்துற சாமிய்யா, வழி தவறி வந்துட்டாராம், உள்ள உடுய்யா...
'நாட்டுல பல பேரு இப்படித்தான் சொல்லிக்கிட்டு அலையுறான், வி.ஐ.பி பாஸ் இருக்கா?'...
யோவ், இவரே பெரிய வி.ஐ.பி தான், என்ன எங்கள உள்ள விடமாட்டியா?..
'அப்படியெல்லாம் அனுப்ப முடியாதுங்க, இவ்வளவு பேசறீங்க சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கலாம்ல'....
நான் யாருன்னு தெரியுமா? இந்த ஏரியா கவுன்சிலரோட கொளுந்தியாளோட சின்னம்மா பையனோட தோஸ்து...
'ஐயோ சார் மன்னிச்சுடுங்க, நீங்க போங்க, நான் சொல்லிக்கிறேன்'...
கருவறையில் இருக்கும் சிலையை காண, என் பின்னாடி நடக்க ஆரம்பித்தார் கடவுள்.
nalla muyarchchi.. vaalthukkal
ReplyDeleteஅருமை!
ReplyDeleteஅருமை..வாழ்த்துகள்..
ReplyDeleteநல்ல இருக்கு சகோ ...வாழ்த்துக்கள்...jokin.jey
ReplyDeletesuperb. ஒருவர் என்பதற்கு பதிலாக அவர் என்று அறிமுகப்படுத்தியிருக்கலாம் கடவுளை.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇந்தக்கதை சூப்பர் ஜெகன்.... ”கருவறையில் இருக்கும் தன்னை(சிலையை) காண, என் பின்னாடி நடக்க ஆரம்பித்தார் கடவுள்.” இப்புடி போட்டிருந்தா?
ReplyDelete