Tuesday, August 14, 2012

எமன் வாகனம்.!

கடந்த வாரத்தில் மட்டும் பள்ளி வாகனங்களால் உயிரிழந்த குழந்தைகள் எண்ணிக்கை மூன்றுக்கு மேல். அதிலும் பள்ளி பேருந்தின் ஓட்டை வழியாக ஒரு குழந்தை விழுந்து இறந்ததை விபத்து என்று சொல்வதை காட்டிலும் மர்டர் என சொல்லலாம். அந்த மழலை விழுந்த ஓட்டை, பேருந்தின் ஓட்டையை மட்டுமல்ல, RTO / அரசு அலுவலகங்களின் ஓட்டைகளையும் சேர்த்து நமக்கு காட்டுகிறது. இந்த பேருந்துக்கு அனுமதி தந்த RTO / அரசு அலுவலர்களை கேட்டால் போக்குவரத்து துறை அமைச்சகத்தை கைகாட்டலாம். போக்குவரத்து அமைச்சகமோ சாலை சரியில்லாததால் பேருந்துகள் சீக்கிரம் பழுதடைகின்றன என நெடுஞ்சாலைகள் துறையை கைகாட்டும். நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகமோ இது பொதுப்பணித்துறையின் கீழ் வரும் சாலை என பொதுப் பணி துறையை கைகாட்டும். பொதுப் பணி துறை அமைச்சகமோ பள்ளிகளையும் பேருந்துகளையும் சரிவர ஆய்வு செய்யவில்லையென பள்ளிக் கல்வி அமைச்சகத்தை கைகாட்டும். பள்ளிகல்வி துறையோ பள்ளிகள் சரிவர ஒத்துழைக்கவில்லை என பள்ளியின் மீதே கை காட்டும். மேலே கூறியது கிண்டலுக்குகில்லை. உண்மை. நாம் தவறுகளில் இருந்து தப்பித்துக்கொள்ள பார்க்கிறோமே தவிர, திருத்திக்கொள்ள பார்ப்பதில்லை. இவர்களை விடுங்கள், பள்ளியில் சேர்ப்பதுடன் நமது கடமைகள் முடிந்து விட்டதென பெரும்பாலானோர் நினைக்கிறோம். பெற்றோர்களாகிய நமக்கு பேராசைகள் இருக்கும் வரை இவர்கள் மேல் தப்பில்லை, நம் குழந்தைகள் பள்ளிகளால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என ஆராயவும் நமக்கு துப்பில்லை.!

Diet.!


சில இந்தியர்களுக்கு இருப்பது வயிறா? வெட் கிரைண்டரா'ன்னே தெரியல, எப்போதும் எதையாவது அரைச்சுக்கிட்டே இருக்காங்க. இந்தியாவில் சாப்பாடு கிடைக்காம செத்தவங்களை விட கண்ட கண்ட சாப்பிட்டு நோய் வந்து செத்தவங்க தான் அதிகம். போனவாரம் கறிக்கடையில் ஓங்கி அடிச்சா ஒரு டன் வெயிட்டுள்ள சிறு வயசு தம்பி ஒருத்தரு ஆறு நாட்டுகோழி வெட்ட சொன்னாரு, அட பாவி என்ன குடும்பம்டா இதுன்னு ஆச்சரியப்படுற நேரத்தில், 'ஏன் தம்பி இவ்வளவு கம்மியா வாங்குறீங்க'ன்னு வெடிகுண்டு போட்டாரு கடைக்காரரு. அந்த தம்பி சொன்ன பதில்ல என உடம்புக்கு மட்டும் 8 .2 ரிக்டர் அளவுக்கு பூகம்பம் வந்திடுச்சு, பதில் இதுதான் 'போதும்ண்ணே, வீட்டுல எல்லோரும் ஊருக்கு போயிருக்காங்க, நான் மட்டும் தான்'...

பணமில்லாதவன் வயிறு நிறைக்க ஓடுவதும், பணக்காரன் வயிறு குறைய ஓடுவதுமே இன்றைய தற்கால சமூக நிகழ்வு. சினிமா படங்களில் டூயட் காட்சிகள் எப்படி தவிர்க்க முடியாததோ, அதே போலத்தான் வாழ்கையில் 'டயட்' ஸீன் காட்சிகளும் தவிர்க்க முடியாதவை.வாயற்ற வாழ்வே நோயற்ற செல்வம். வாயை கட்டுப்படுத்தினால், நோயை கட்டுப்படுத்தலாம் என்பதால் இதோ சில டயட் டிப்ஸ்.

வாழத்தான் சாப்பிடுகிறோமே தவிர சாப்பிடுவதற்காக வாழவில்லை என வலது கையில் பச்சை குத்திக்கொள்ளலாம்.

வாயால் சாப்பிடுவதை குறைத்து கண்ணால் சாப்பிட்டு பழக வேண்டும்.

மனைவி சொல்வதற்கெல்லாம் தலையாட்டினாலும், சாப்பாடு போடட்டுமா? இன்னொரு தோசை? எனும் போது மட்டும் தலையை இடமும் வலமுமாக அசைக்க வேண்டும்.

பொரியை அரிசியாய் பாவித்து சாம்பார், ரசம், தயிர் ஊத்தி சாப்பிட்டால், நாம் சாப்பிடும் அளவு ஆட்டோமேட்டிக்காய் குறையும்.

டிவி பார்க்கும் பொழுது, கண்ணும் காதும் மட்டுமே திறந்திருக்க வேண்டும். தப்பிதவறியும் வாயை திறந்திட கூடாது.

சாப்பிட்டுவிட்டு வாக்கிங், ஜாக்கிங் போவதை விட வாக்கிங், ஜாக்கிங் போய்க்கொண்டே சாப்பிடுவது நல்லது.

வாரத்தில் ஏழு நாட்களும், மாதத்தில் முப்பது நாட்கள் மட்டும் உண்ணா விரதம் இருக்கலாம்.

வாக்கிங்கை அதிகரித்து விட்டு டாக்கிங்கை குறைப்பது நல்லது.

சாப்பாட்டை கைகளால் எடுத்து சாப்பிடும் பழக்கத்தை விட்டுவிட்டு, தட்டிலிருந்து வாயினால் எடுத்து சாப்பிடும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.

ஒரு இட்லி அல்ல ஒரு தோசை சாப்பிட்டு பழகவேண்டும், சாப்பாட்டுக்கு முன்போ பின்போ அல்ல, சாப்பாடே அதுதான்.

வீடு கட்டும் போதே, சமையலறையை ஒரு கிலோமீட்டர் தூரம் தள்ளி கட்டிவிட வேண்டும்.

ப்ரிட்ஜுன் மேலே, மாமியார் வீடு என்னும் ஸ்டிக்கர் ஒட்டிவிட்டால், அதை திறக்கவே மனசு வராது.

எப்போதுமே விலங்குகளின் மக்கள்தொகை குறைய விடமாட்டேன் என சத்தியம் பேணலாம்.

மனிதர்களின் பிரச்சனையே வாய் தான், அந்த வாயை தேவையில்லாத போது சாப்பிடவும், பேசவும் திறக்காமல் இருந்தாலே போதும், உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும். கவிபேரரசு வைரமுத்து சொன்னது போல சாப்பிட 'பசியோடு உட்கார்ந்து பசியோடு எழுந்தால்' எந்நாளும் வாழ்வு சுகமே.

Film'Bore Awards 2012

உலகின் இரண்டாவது பெரிய சினிமா துறையான இந்திய சினிமாத்துறை தனது நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க போகிறது. இந்த அருமையான தருணத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கனவு தொழிற்சாலையான கோடம்பாக்கத்து கோலிவுட்டில் நெஞ்சில் நங்கூரம் போட்டு நிலைத்து தங்கிய பல நடிப்பு தூண்களை நன்றியுடன் நினைத்து விருதுகள் கொடுத்து கவுரவிப்போம்.

தமிழ் சினிமாவின் சிறந்த கல்லூரி மாணவர்கள்
1981 to 1985 Batch - சந்திரசேகர், தியாகு, ராஜீவ், குண்டுகல்யாணம்
1986 to 1990 Batch - முரளி, சின்னி ஜெயந்த், சார்லி, தாமு
1991 to 1995 Batch - பிரசாந்த், விவேக், வடிவேல், வையாபுரி
2005'லிருந்து - மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது

சிறந்த கல்லூரி மாணவர் - முரளி
சிறந்த கல்லூரி நண்பர் - சின்னி ஜெயந்த்
சிறந்த கல்லூரி principal / லெக்சரர் - வெண்ணிற ஆடை மூர்த்தி
சிறந்த பள்ளிகூட மாணவன் - காஜா ஷெரிப்
சிறந்த பள்ளிக்கூட மாணவி - பேபி ஷாலினி
சிறந்த குடும்ப தலைவர் - விசு
சிறந்த குடும்ப தலைவி - கமலா காமேஷ்
சிறந்த கணவர் - சிவகுமார்
சிறந்த மனைவி - ராதிகா சரத்
சிறந்த பாசமான அப்பா - டெல்லி கணேஷ்
சிறந்த பாசமான அம்மா - ஸ்ரீ வித்யா
சிறந்த நல்ல தாய்மாமா - டி.ராஜேந்தர்
சிறந்த மோசமான தாய்மாமா - ஜெய்கணேஷ்
சிறந்த தாத்தா - V.S. ராகவன்
சிறந்த தாத்தா சிறப்பு பரிசு - பூரணம் விஸ்வநாதன்
சிறந்த அம்மாயி - மனோரமா
சிறந்த அப்பத்தா - காந்திமதி
சிறந்த அமெரிக்கா மாப்பிள்ளை ( 1980 - 2000 ) - ராஜா
சிறந்த அமெரிக்கா மாப்பிள்ளை ( From 2001 ) - கார்த்திக் (அலைபாயுதே )
சிறந்த பஞ்சாயத் தலைவர் - வினு சக்கரவர்த்தி
சிறந்த பஞ்சாயத் துவக்கி வைப்பவர் - பெரியகருப்பு தேவர்
சிறந்த உள்ளூர் நாட்டமை - சண்முகசுந்தரம் ( கரக்காட்டகாரன் புகழ் )
சிறந்த நாட்டாமை ( அகில உலகம் ) - விஜயகுமார்
சிறந்த உள்ளூர் மைனர் - ஆனந்த்ராஜ்
சிறந்த துருதுரு பையன் (1980 - 2000) - நவரசநாயகன் கார்த்திக்
சிறந்த துருதுரு பொண்ணு (1980 - 2000) - நதியா
சிறந்த துருதுரு பையன் (From 2000 ) - தனுஷ்
சிறந்த துருதுரு பொண்ணு ( From 2000 ) - ஜோதிகா
சிறந்த அறிவுரையாளர் (ஆண் ) - மணிவண்ணன்
சிறந்த அறிவுரையாளர் ( பெண் ) - சுகாசினி
சிறந்த சிந்தனையாளர் - செந்தில்
சிறந்த வர்ணனையாளர் - கவுண்டமணி
சிறந்த தமிழ் சொற்கள் கண்டுபிடிப்பாளர் 1 - சின்னி ஜெயந்த் (சில்பான்ஸ், கில்மா )
சிறந்த தமிழ் சொற்கள் கண்டுபிடிப்பாளர் 2 - சந்தானம் ( அப்பாடக்கர் )
சிறந்த சுறுசுறுப்பாளர் - சாருஹாசன்
சிறந்த உளறுவாய் - டெல்லிகணேஷ்
சிறந்த ஐடியா கொடுப்பவர் - ஒய்.ஜி.மகேந்திரன்
சிறந்த Love boy - ஜெமினி கணேசன்
சிறந்த Cow Boy - ஜெய்ஷங்கர்
சிறந்த பாடகர் - 'மைக்' மோகன்
சிறந்த ஆங்கில இலக்கியவாதி - லூஸ் மோகன்
சிறந்த புன்னைகையாளர் - குமரிமுத்து (ஹ் ஹாஹாஹாஹா )
சிறந்த புன்னகையாளர் சிறப்பு பரிசு - மதன் பாப்
சிறந்த டவுன் ரவுடி - பொன்னம்பலம்
சிறந்த கிராமத்து ரவுடி - ஆனந்தராஜ்
சிறந்த போலீஸ் காண்ஸ்டபிள் - மனோபாலா
சிறந்த விளையாட்டு வீரர் - விஜயகாந்த் (தேசிய 'பம்பரகட்' சாம்பியன் ).
சிறந்த விளையாட்டு வீராங்கனை - யுவராணி ( தேசிய 'கபடி' சாம்பியன் )
சிறந்த தலையாட்டி ( old ) - மோகன் ( மைக்கை பிடித்துகொண்டு )
சிறந்த தலையாட்டி ( new ) - ஜெய் ( சுப்ரமணியபுரம் )
சிறந்த தலையாட்டி சிறப்பு பரிசு - T. ராஜேந்தர்
சிறந்த சின்னவீடு - Y.E. விஜயா
சிறந்த சமையல் கலைஞர் - பாக்கியராஜ்
சிறந்த சைகோ / சாடிஸ்ட் - பிரதாப் போத்தான்
சிறந்த முறையில் சாப்பாடு உண்பவர் - ராஜ்கிரண்
சிறந்த ஆங்கில தமிழ் மொழிபெயர்ப்பாளர் - மேஜர் சுந்தரராஜன்
சிறந்த தற்கொலைவீரர் - வாகை சந்திரசேகர்
சிறந்த புலம்பல்வாதி - ஜனகராஜ்
சிறந்த தேசபற்றாளர் - ஆக்சன் கிங் அர்ஜுன்
சிறந்த கலக்டர் / தாசில்தார் - சரத்பாபு
சிறந்த போலீஸ் - விஜயகாந்த்
சிறந்த CID - ஜெயசங்கர்
சிறந்த போலீஸ் கமிஷனர் - ARS
சிறந்த திருந்தாத வில்லன் - R.S. மனோகர்
சிறந்த திருந்தும் வில்லன் - ராதாரவி
சிறந்த கற்பழிப்பாளர் (தோல்வியில் முடியும் ) - M.N. நம்பியார்
சிறந்த கற்பழிப்பாளர் Senior (வெற்றியில் முடியும் ) - செந்தாமரை
சிறந்த கற்பழிப்பாளர் Junior (வெற்றியில் முடியும் ) - ராஜிவ்
சிறந்த அடியாள் - பீலி சிவம் / அழகு
சிறந்த குழி பறிப்பாளர் - நிகழ்கள் ரவி
சிறந்த பாஸ் - அசோகன்
சிறந்த பாம் வைப்பாளர் - ரகுவரன்
சிறந்த அருவா தூக்கி - நெப்போலியன்
சிறந்த வில்லனின் ஆசை நாயகி (old ) - CID சகுந்தலா
சிறந்த வில்லனின் ஆசை நாயகி ( new ) - டிஸ்கோ சாந்தி
சிறந்த காஸ்டியுமர் - ராமராஜன்
சிறந்த காஸ்டியுமர் சிறப்பு பரிசு - செந்தில்
சிறந்த டபுள் மீனிங் பேசுபவர் - வெ.ஆ.மூர்த்தி
சிறந்த டபும் மீனிங் சிறப்பு பரிசு - எஸ்.ஜே. சூர்யா
சிறந்த காதலுக்கு உதவுபவர் ( ஆண் ) - சந்திரசேகர்
சிறந்த காதலுக்கு உதவுபவர் ( பெண் ) - சில்க் ஸ்மிதா
சிறந்த டிஸ்கோ டான்சர் ஆண் - ஆனந்த்பாபு
சிறந்த டிஸ்கோ டான்சர் பெண் - டிஸ்கோ சாந்தி
சிறந்த வருங்கால நம்பிக்கை நட்சத்திரம் - பவர்ஸ்டார்