ஆங்கில எழுத்து U போல கொஞ்சம் பெரிய சைஸில் வெட்டப்பட்ட ஜாக்கெட்டின் மூலமாக அனாமிகாவின் முதுகை சைட்டடித்து கொண்டிருந்தான் மாலை நேர சூரியன். லேட்டாகிவிட்டது. ஹைகோர்ட்டிலிருந்து BIKEக்கிகொண்டிருந்தாள். சைட்டடித்த சூரியனும் சூடாக இருந்ததால் சோலார் பேட்டரி பைக்கும் போதுமான ஒத்துழைப்பு கொடுத்தது. ஸ்கூலில் இருந்து ஸாராவும் ஷெல்வந்தும் 7 மணிக்கெல்லாம் வந்துவிடுவார்கள். இன்னமும் 17 நிமிடங்கள் 32 நொடிகளில் ஸ்டேஷனை தொட்டுவிட்டால் இரவு 8.11லிருந்து 8.12க்குள் ஏதேனும் ஒரு நொடியில் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்து விடலாம்.
கடந்த இரண்டு மூன்று வாரங்களாக வெறும் பிரட்டும், பிஸ்கெட்டும், சாலடுகளாலும் தான் உயிர்த்து கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். இன்று அவர்களுக்கு இட்லி தருவதாக மதர் பிராமிஸ் செய்திருந்தாள். என்ன செய்வது, இந்த மெக்கானிக்கல் யுகத்தில் ஒவ்வொரு நிமிடமும் நொடியும் முன்கூட்டியே திட்டமிடபட்டோ தீர்மானிக்கபட்டோ இருக்கிறது. அதுவும் அனாமிகா போன்ற புகழ் பெற்ற ஸ்பெஷல் வக்கீல்களுக்கு உத்தமனை பார்ப்பதோ எவ்வளவோ கடினமோ, அதே கடினம் ஓய்வு நேரத்தை பார்ப்பதும்.
மேற்கண்ட வரிகளை நீங்கள் படித்து முடித்த அதே நொடியில் ரயிலில் ஏறிவிட்டாள் அனாமிகா. தனக்காக மொபைல் மூலம் முன்பதிவு செய்துவிட்ட இடத்தை கண்டுபிடித்து, அமர்ந்து, தன் ஜீன்ஸ் தொடைகளை மேஜையாக்கி மடிகணினியின் தூக்கத்தை கலைத்தாள்.மனு கொடுக்க வந்த மக்களை மீறி சென்று காரில் ஏறும் கலக்டர் போல மரங்களையும் வீடுகளையும் உதாசீனப்படுத்தி விட்டு விரைந்தது ரயில். ஜன்னல்களில் விழுப்புரங்களும் திண்டிவனங்களும் உளுந்தூர்பேட்டைகளும் கடந்து கொண்டிருந்தன. மதுரை ஜங்க்ஷன் என்று 15மொழிகளில் போர்டு சிறு புள்ளியாய் தெரிய ஆரம்பித்த போது கணினியை கருணை கொலை செய்தாள். சென்னையில் வாடகை அதிகமென மதுரையில் குடியிருப்பது கொஞ்சம் செலவை குறைக்கிறது. மெட்ரோ பஸ்சின் உதவியுடன் மூன்றே நிமிடத்தில் வீடு வந்தது. உள்ளே வாட்டர் சோபாவில் அமர்ந்து டாம் ஜெர்ரியை துரத்துவதற்கு சாட்சிகளாகி கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.
'ஹாய் குட்டீஸ்'...
'ஹாய் மம்மி' - இது ஸாரா; 'பசிக்குதும்மா' - இது ஷெல்வந்த்.
'2 நிமிஷன்டா கண்ணா, 2 மினிட்ஸ்'
தன் செல்போனின் ஸ்கிரீனை சமையலறை அலமாரியின் ஸ்கேனருக்கு காட்டினாள். திறந்துகொண்டது. உள்ளே இட்லி என்று ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலில் இருந்து 6 மிட்டாய்களும் தேங்காய் சட்னி / தண்ணீர் என்று ஒட்டியிருந்த பாட்டில்களில் இருந்து தலா 3 மிட்டாய்களும் எடுத்துக்கொண்டாள். குழந்தைகளை நம்பி அலமாரியை விடமுடிவதில்லை, அதிகமாய் உண்டு பெருத்து விடுகிறார்கள். இளைக்க வைக்கவே பணம் அதிகம் செலவாகிறது இப்போது. குழந்தைகளிடம் நீட்டும் முன் எதோ சந்தேகம் வந்தவளாக மிட்டாய்களின் அட்டை கவரை பரிசோதித்தாள். 'Expirary Date OCT 2097' என்று இருந்தது.
ஒன்றும் பயமில்லை, கெட்டுப்போக இன்னமும் 4 மாசம் இருக்கிறது. குழந்தைகளை தூங்கவைத்து விட்டு, அடுத்தநாள் வழக்குக்காக, மனிதர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு பெண் ரோபோவை பற்றிய கேஸ்கட்டை எடுத்து குறிப்பெழுத தொடங்கினாள்.
பின்குறிப்பு : இந்த கதையில் கண்டுப்பிடிக்க கூடிய ஒரு தவறு இருக்கிறது. என்னன்னு சொல்லுங்க பார்ப்போம்.!
//தவறு// சென்னை மதுரை மார்க்கத்தில் திண்டிவனத்துக்குப் பிறகு தான் விழுப்புரம் வர வேண்டும்!
ReplyDeleteஎனக்கென்னமோ... ரயிலுன்னு சொல்லிட்டு மெட்ரோ பஸ்சு முடிச்சது தப்புன்னு தோணுது...
ReplyDeleteவேற ஏதோ டைமிங் பிராப்ளம்னு நினைக்கிறேன்...
ReplyDeleteநெக்ஸ்ட் மீட் பண்ணுவோம்..
Varudam Mattum 2097 ku pathill 3097 yendru irunthaal nandraga irunthu irukum. About the mistake I think it's her dress. Blouse with the deep u neck with jeans pant not nice at all
ReplyDelete1. RT சி. சரவணகார்த்திகேயன் : //தவறு// சென்னை மதுரை மார்க்கத்தில் திண்டிவனத்துக்குப் பிறகு தான் விழுப்புரம் வர வேண்டும்!
ReplyDelete2. 'Expirary Date OCT 2097' - Expiry Month என்பதுதான் சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.
டிஸ்கி : என்னை திட்டறதா இருந்தா போன் நம்பர் கொடுக்கறேன். இங்க திட்டக்கூடாது. :-))
RT சி. சரவணகார்த்திகேயன் : //தவறு// சென்னை மதுரை மார்க்கத்தில் திண்டிவனத்துக்குப் பிறகு தான் விழுப்புரம் வர வேண்டும்!// ;-)))
ReplyDeleteஜாக்கெட் அணிந்து இருப்பவள், ஜீன்ஸ் அணிந்து இருப்பதாக சொன்னதுதான் தவறு!
ReplyDelete//டாம் ஜெர்ரியை துரத்துவதற்கு சாட்சிகளாகி கொண்டிருந்தார்கள் குழந்தைகள்.//
ReplyDelete//மனிதர்களால் வன்கொடுமை செய்யப்பட்ட ஒரு பெண் ரோபோவை பற்றிய கேஸ்கட்டை எடுத்து குறிப்பெழுத தொடங்கினாள்.//
தோட்டா டச்.. ரசித்தேன்.!!
அனாமிக்காவோட ஹஸ்பண்ட் எங்க போனான்.?! மிக்ஸர் சாப்ட போய்ட்டானோ?!!!! இல்ல.. 2097ல ஹஸ்பண்ட்டே தேவையில்லையோ..!
ReplyDeleteநான் மேற்கண்டவரின் முதல் கருத்தை ஆமோதிக்கிறேன் :)
ReplyDeleteதவறை விடுங்கப்பா.. தலைப்பு எனக்குப் புரியலையே.. யாராச்சும் ட்விட்டர்ல எனக்கு ஒரு மென்சன் போட்டு சொல்லுங்கப்பா..
ReplyDelete//மனு கொடுக்க வந்த மக்களை மீறி சென்று காரில் ஏறும் கலக்டர் போல..//
ReplyDeleteஇது மட்டும் மாறவே மாறாதா.. சோ சேட்!
@KrishnaGopika89 யோசிச்செல்லாம் தலைப்பு வைக்கல, அந்த கதையே(?) 15 நிமிஷத்துல எழுதியது தான்,நிறையா spelling mistake இருக்கும். total travelling time அவ்வளவு தான், ஆனாலு @writercsk 'வின் விளக்கம் அருமை, ஆச்சரியமா இருந்துச்சு ;))
ReplyDeleteஅப்புறம், எல்லோரையும் போல சுஜாதா சார் தாக்கத்துல ( ஆல்மோஸ்ட் காப்பி தான் ) எழுதியது, அதான் வரு எழுதிய கடைசி விஞ்ஞான கதையின் நாயகியான அனாமிகாவை இங்கும் நாயகி ஆக்கிவிட்டேன் ;))
ReplyDelete//உள்ளே வாட்டர் சோபாவில் அமர்ந்து டாம் ஜெர்ரியை துரத்துவதற்கு சாட்சிகளாகி கொண்டிருந்தார்கள் குழந்தைகள்// 2097 இல் சோபாவில் அடைக்குமளவு வசதியாக தண்ணீர் கிடைக்கும் என்பது தர்க்கிக்க வேண்டியது என்றாலும், அது நன்னீராய் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது பதிலாகலாம்.
ReplyDelete//Expirary// Expiry - என்று இருக்க வேண்டும்.
நீங்கள் தவறென்று எண்ணியது இன்னும் கண்டுபிடிக்க பட வில்லை என்று எண்ணுகிறேன்.
ரொம்ப சரியான கேள்வி ரகு.! அதையும் மிஸ் பண்ணிட்டேன்.!
ReplyDelete