Tuesday, August 14, 2012

வக்கீல் வண்டுமுருகன்.!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதை எதிர்த்து வக்கீல் வண்டுமுருகனின் வாதம் :

'வைகை புயல்' வடிவேலு போலவே படித்தால் நாங்கள் பொறுப்பல்ல.

வக்கீல் வண்டுமுருகன்:
எச்சூச்சுமீ யுவர் ஆனர், உங்களுக்கு வக்கீல் வண்டுமுருகனாகிய எனது காலை வணக்கங்கள். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை திருமண மண்டபமாக நடத்தக்கூடாது என்பது சின்னப்புள்ளத்தனமா இருக்குது யுவர் ஆனர், அய்யோ அய்யோ. அதாவது, நூலகத்தின் உதவியால் மக்கள் அறிவை வளர்க்கலாம், கலக்டர் ஆகலாம், டாக்டர் ஆகலாம், கவுன்சிலர் ஸ்நேக் பாபு ஆகலாம், இன்னமும் என்னவென்னமோ ஆகலாம். ஆனால் பாருங்க ஜட்ஜைய்யா, அதுக்கு தேவையான மக்கள் எப்படி கிடைப்பாங்க? கல்யாணம் பண்ணி குழந்தை பெத்தாதானே கிடைப்பாங்க? கிடைப்பாங்க? கிடைப்பாங்க? அப்போ ஏன் அதை கல்யாணம் மண்டபமா ஆக்கக்கூடாது? அதுமட்டுமில்லை யுவர் ஹானர், இந்த அண்ணா சாலையில் பன்னி குட்டி போட்ட மாதிரி எப்ப பார்த்தாலும் வதவதன்னு டிராபிக் ஜாமாகவே இருக்கிறது. யுவர் ஹானர், ஆணியே புடுங்க வேண்டாம். அண்ணா சாலையில் போக்குவரத்தை உடனடியாக தடை செய்து, துவைத்த துணியை காயபோட இடமில்லாமல் தவிக்கும் என்னை போன்ற அப்பாவி ஆண் சிங்கங்களுக்கு பொண்டாட்டி சேலையையும் மச்சினிச்சி தாவணியையும் காயப்போட வாடைகைக்கு விட வேண்டுகிறேன். அதுமட்டுமில்லை யுவர் ஆனார், இந்த மெரீனா பீச் இருக்கிறதே மெரீனா பீச், அந்த இடத்தை மக்கள் பயன்படுத்தும் திறந்தவெளி கட்டண கழிப்பிடமாக அதிகாரப்பூர்வமாக மாற்றினால், கிராமத்தில் இருந்து வந்து கஷ்டப்படும் வயசானவர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும், நமக்கும் சில்லறை தேத்தியது போலவும் இருக்கும்.

ஜட்ஜ் :
மிஸ்டர் வண்டுமுருகன், நீங்க என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே?

வண்டுமுருகன்:
நோ யுவர் ஹானர், அப்படி கிண்டல் பண்ணுபவன் எங்க அண்ணன் சங்கி-மங்கி, நான் அவன் தம்பி மங்கி-சங்கி. யுவர் ஆனார், இங்க தான் இதுக்கு பேரு பீச்சு, தூத்துக்குடி, துபாய்ல இதுக்கு பேரு $%&#$#. அப்புறம் முக்கியமான விஷயம் ஜட்ஜைய்யா, உங்க காத கிட்ட கொண்டுவாங்க, அட சும்மா கிட்ட கொண்டு வாங்க, நானும் என் ஜூனியர்கள் குண்டு ஆர்த்தி, போண்டா மணியும் பீச்சு ஓரமா கேஸ் கீஸ் கிடைக்குமான்னு தேடிக்கிட்டு போறப்பெல்லாம் ..... அப்படி மொறைக்காதீங்க ஜட்ஜைய்யா, விலைவாசி ஏறிபோச்சு, வர கேசெல்லாம் மிட்டாய் திருடினது, முருங்கக்காய் திருடினது. முட்ட சாப்பிட்டே மூணு மாசமாச்சு, கேசு கீசு புடிச்சாதான் குடும்பம் நடத்த முடியும், கேளுங்க, பீசு பக்கம் போனோமா, ஒரு வெள்ளை கலர் கட்டிடத்தில் இருந்து கை தட்டுற சத்தமா வந்துக்கிட்டு இருக்கு, செயின்ட் சார்ஜு கோட்டையோ, சரோஜா கோட்டையோ, அந்த கட்டிடத்தை தீபாவளி பொங்கலுக்கு சாலமன் பாப்பய்யா குரூப்புக்கு பட்டிமன்றம் நடத்த வாடைக்கு விட்டா, அரசு கஜானாவை கொஞ்சம் நப்புலாம்ல, நப்புலாம்ல, நப்புலாம்ல.

ஜட்ஜ்: கக்கக்கபோ.!

வண்டுமுருகன்: இன்னும் கைவசம் நிறையா ஐடியா இருக்கு யுவர் ஆனர், இப்பெல்லாம் யாரு யுவர் ஆனர் திருக்குறள் எல்லாம் படிக்குறா, பேசாம, இந்த வள்ளுவர் கோட்டத்தை கட்சிக்காரர்களின் காதுகுத்து பங்சனுக்கு வாடைகைக்கு விட்டு விடலாம், எப்படி என் ஐடியா யுவர் ஆனர்? அப்புறம் கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறையையும், வள்ளுவர் சிலையையும், 'ஏன்டா கல்யாணம் பண்ணுனோம், ஏன்டா குழந்தை பெத்தோம், ஏன்டா வோட்டு போட்டோம்' என பல்வேறு காரணங்களுக்காக செவுத்துல முட்டிக்கிறவங்களுக்கு வாடகைக்கு விடலாமே? அதுமட்டுமில்லை யுவர் ஆனர், சேப்பாக்கம் கிரவுண்டை சுற்றி கருப்பு பூனைகளை காவல் வைத்து, ஒரு மணி நேரத்துக்கு முப்பது ரூபாய் என உள்ளே வாக்கிங் செல்ல அனுமதித்தால், பல பேர் கொல்லப்படாமலும் கடத்தபடாமலும் வாக்கிங் போகலாம் இல்லையா? மேலும் இந்த செம்பரபாக்கம், புழல் ஏரிகளை மண்ணை போட்டு மூடிவிட்டு, அந்த இடங்களை சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட வாடகைக்கு விட்டால் லம்பா அமௌன்ட் தேத்தலாம் யுவர் ஹானர். மேலும், திருவல்லிக்கேணி கோவிலை டிரைவ் - இன் ஹோட்டலுக்கு வாடைகைக்கு விடலாம், ரூம் ரூமாக இருக்கும் இந்த புழல் சிறையை பொதுமக்கள் புழங்கும் குறைந்த விலை லாட்ஜாக வாடகைக்கு விடலாம், இந்த ரிப்பன், சுப்பன் பில்டிங்கையெல்லாம் ஆசிர்வாத, ஜெப கூட்டங்களுக்கு வாடைக்கு விடலாம். இந்த உசிலம்பட்டி பக்கம் மதுரை திருமலை நாயக்கர் மகாலை பூப்பு நீராட்டு விழாவுக்கு வாடகைக்கு விடலாம், ஊட்டி, கொடைக்கானல் மக்களை வெளியேற சொல்லி, அங்கிருக்கும் புதர்களை காதலர்களுக்கு வாடைக்கு விடலாம், இத்தனை வருடமாக பழனி மலையில் ஓசியில் குடியிருக்கும் முருக பெருமானுக்கு இனிமேல் மலையை வாடகைக்கு விடலாம். மிக மிக முக்கியமாக யுவர் ஆனர், இத்தனை வருடங்களாக தமிழன் என்று வெட்டி பெருமை பேசி திரியும் இந்த மக்களுக்கு இனி இங்கு இருக்க மொத்த தமிழ்நாட்டையும் வாடைக்கு விடலாம், வாடகை தராதவர்களை அண்ணம் தண்ணி புழங்க விடாமல் தமிழ்நாட்டை விட்டே தள்ளி வைத்துவிடலாம், எப்பூடி? இத்துடன் எனது வலுவான வாதங்களை முடித்துகொள்கிறேன் யுவர் ஆனர்.!

போண்டா மணி : ஏ சூப்பர்ப்பா, நீ இப்படியெல்லாம் பேசி நான் பார்த்ததே இல்லப்பா, உன் பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கா இருந்தாலும், உன் ஆர்குமென்ட் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்குப்பா.

குண்டு ஆர்த்தி : முதலாளி, காபி குடிக்கிறீங்களா முதலாளி? ஜட்ஜய்யா என்ன சொன்னார் முதலாளி?

வண்டு முருகன் : என் வாதத்த பார்த்த ஜட்ஜு, எவ்வளவு அடிச்சாலும் தாங்குற, நீயும் தமிழ்நாட்டு மக்கள் மாதிரி ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாரும்மா....வ்வ்வ்வ்வ்...

No comments:

Post a Comment