அந்நியன் படம் மூலமா கருடபுராணத்தில் சொல்லப்பட்ட அந்தகூபம், கூம்பிபாகம், கிருமிபோஜனம் போன்ற தண்டனைகள் எல்லாமே உங்களுக்கு தெரியும், இன்றைய கலிகால லொள்ளுகளுக்கு அதெல்லாம் பத்தாது, அதனால இன்னமும் கொஞ்சம் லேட்டஸ்ட் தண்டனைகளை கடவுளுக்கு சிபாரிசு பண்றேன்.
ஹாரன்யவதம்
ரோட்டுல பூத்து பூத்துன்னு ஹாரன் அடிச்சாலும் மழையில நனைஞ்ச எரும மாடு மாதிரி நகராம இருக்கிற மனுஷ பசங்களுக்கு கொடுக்கும் தண்டனை இது. சுமார் 400 மினிபஸ்களை சுத்தி நிக்க வச்சு ஒரு மணி நேரம் ஓயாம ஏர் ஹார்ன அடிச்சு காதை டிஞ்சர் ஆக்குற தண்டனை தான் ஹாரன்யவதம்.
குழாய்குண்டம்
நாட்டுல ஆங்காங்கு ஆழ்குழாய் கிணறுகளை தொண்டிவிட்டுட்டு சரியா மூடாம போயி சின்னஞ்சிறு பிஞ்சுகளின் உயிர் போக்கும் மந்திகளுக்கான தண்டனை. அரை இஞ்சு இரும்பு குழாய் ஒண்ண எடுத்து, மொத்த உருவத்தையும் அதுக்குள்ளே குத்து குத்தி சொருகி விடும் தண்டனை தான் குழாய்குண்டம்.
பொய்யாபக்ஷம் :
வெண்ணைய இருக்குனா நெய்யா வருதோ இல்லையோ, வாய தொறந்தா பொய்யா பேசுற பக்கிகளுக்கு தரவேண்டிய தண்டனை இது. மிக கொடூரமான தண்டனை. அதாவது இந்தியாவின் எல்லா மாநில ஆளுங்கட்சி சேனல்களின் செய்திகள தொடர்ந்து ஒரு வாரம் பார்க்க வைக்கணும். அதுக்கும் மேல அவன் புத்தி சுவாதீனம் ஆகாம இருந்தா அது அவங்க தத்தா செஞ்ச புண்ணியம்.
மமோசிபத்திரம் :
எல்லாமே தெரிஞ்ச மாதிரி நிறுத்தாம மொக்கபோடுற ஆளுங்களுக்கு தரப்படும் தண்டனை இது. அதாவது நம்ம பிரதமர் ம.மோ.சிங் போல ஆறு மாசத்துக்கு எந்த கேள்வி கேட்டாலும் 'தெரியாது, தெரியாது'ன்னு மட்டுமே மூளை பதில் சொல்ல வைக்கும்.
குசகுசாசனம் :
அடுத்தவங்கள பத்தி எப்பவுமே குசுகுசுன்னு கிசுகிசு பேசறவங்களுக்கு இந்த தண்டனை. 'லாரி டமாலு, டிரைவர் பணாலு' டைப் தினசரிகளில் வரும் கள்ளக்காதல் செய்திகள ஒரு வருஷம் தொடர்ந்து மனப்பாடம் செய்யணும். வருஷ முடிவுல வைக்கிற டெஸ்டுல பாஸ் பண்ணாட்டி, அடுத்து ரெண்டு வருஷம் இதே செய்திகள மனப்பாடம் பண்ணனும்.
அரசாங்கரோதம்
தேடி வர சாதாரண பொதுமக்களை அவர பாருங்க, இதோ இவர பாருங்க, நாளைக்கு வாங்க, இன்னைக்கு போங்கன்னு ஓயாம அலையவிடுற சில அரசு உத்தியோகஸ்தர்களுக்கான குறைந்த பட்ச தண்டனை இது. www.irctc.co.in இணையதளத்துல மூணு மாசம் நகராம உட்கார்ந்தாவது ஒரு ரயில் டிக்கெட் புக் பண்ணி கொடுக்கணும், இல்லாட்டி அடுத்த மூணு மாசத்துக்கு கொசுவோட 'உய்ய்ய்யங்' சத்தம் காதுல கேட்டுக்கிட்டே இருக்கும்.
உருவுனரவு :
பொது இடங்களில் அளவுக்கு அதிகமா ஆபாசமா டிரஸ் செய்து வரும் பெண்களுக்கும், பேன்ட்டுக்கு வெளிய ஜட்டி தெரியுற மாதிரி வரும் பசங்களுக்குமான தண்டனை. இவங்களையெல்லாம் சத்தியமூர்த்தி (ச.மூ.) பவன் கலவரத்துல உள்ளாரா விட்டு ஓட ஓட வேட்டி டவுசர உருவி விடனும்.
பாலமூக்குவதம் :
நாட்டுல குழந்தைங்க குடிக்ககூட பால் வாங்க முடியாம இருக்காங்க, இதுல, புதுப்பட ரிலீஸ் அன்னைக்கு ஹீரோக்கள் கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் பண்ற பொடிபசங்களுக்கான தண்டனை. இவங்கள புடிச்சு, மூக்கு வழியா மூணு லிட்டர் பால குடிக்க விடனும். வெளிய சிந்துற பால திருப்பி காது வழியா விடனும்.
No comments:
Post a Comment