Tuesday, August 14, 2012

அண்ணன் 'ஓஹோ'பிஎஸ்.!

தமிழ்நாட்டு ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் எப்படி ஒரு முறையாவது அமைச்சராகி விடுவார்களோ, அது போல கர்நாடக ஆளுங்கட்சி பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்கள் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் எப்படியும் ஒரு முறையாவது கர்நாடக முதலமைச்சராகி விடுவார்கள் போலிருக்கிறது. எடியூரப்பா, சதானந்த கவுடாவுக்கு பிறகு இப்போ முதல்வராக (போர்)களம் காணுகிறார் ஜெகதீஷ் ஷெட்டர். கிடைத்த முதல்வர் பதவியை பிரச்சனையில்லாமல் ஓட்ட அண்ணன் 'பணிவு செல்வத்திடம்' அவர் கேட்ட ஐடியாக்களுக்கு, அண்ணன் 'ஓஹோ'பிஎஸ் அனுப்பிய லீக்கான கடிதமும்....

"அன்பு தம்பிங்க, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். அடிக்கடி குனித்தும் பணிந்தும் கும்பிடு போடுவதால் கடந்த 3 நாட்களாக முதுகு புடிச்சுக்குச்சு. வயசாயிடுச்சுல. முன்ன மாதிரி இல்ல தம்பி, இப்பெல்லாம் போட்டிக்கு புதுசுபுதுசா இளவட்ட பயலுவ வந்துட்டாங்க. படக்படக்னு மைனஸ் 30 டிகிரில கூட கால்ல விழுந்துடுறாங்க.

தம்பி, நம்ம தொழில் ரகசியம் என்னன்னா, செய்யற தொழில்ல பொறுமை தான் முக்கியம். நல்ல nationalised bank'க்கா பார்த்து இந்த வெட்கம், கூச்சம் எல்லாத்தையும் நல்ல விலைக்கு அடமானம் வச்சிடுங்க.நானெல்லாம் முதல்வரா இருந்தப்போ, டிவிக்காரங்க ஆரம்பிச்சு பேப்பர்க்காரங்க வரை வண்டி வண்டியா கிண்டலா பண்ணுவாங்க. ஏன், இந்த கத்திகுத்து கந்தன் முன்னால விட்டு பின்னால வாண்டவாண்டையா திட்டுவான். அதையெல்லாம் நமக்கு 'ஹேப்பி பொங்கல்' சொல்றாங்கன்னு நினைச்சுக்கிட்டு 'சேம் டூ யூ'ன்னு சொல்லி சிரிச்சுக்கிட்டே போயிடனும்.

அம்மா, பெரியம்மா, சின்னம்மா, மனோரமா, வீடு கூட்டுற பொன்னம்மா, சட்டசபை கூட்டுற ஆயா அம்மா வரை யார பார்த்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு கால்ல விழுந்திடனும். என்ன நாஞ்சொல்றது?தம்பிங்க, அரசியல் ஒரு யுத்த பூமி, அதுலயும் கர்நாடகா ஒரு ரத்த பூமி. நானெல்லாம் சண்டைன்னா ஓடினது கிடையாது, குத்துன்னா கூட சத்தம் வராது. முடிஞ்சளவு பேச்ச பேச்சாத்தான் வச்சிருக்கணும்.

இந்த பில்லா பய மாதிரி, நானும், என் வாழ்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானாத்தான் செதுக்கினேன். ஒவ்வொரு நொடியும் பாயா பணிந்து மடங்குறேன். சாதா செல்வமா இருந்த நான் இன்னைக்கு பணிவுசெல்வமா மாறுனதுக்கு பின்னாடி எவ்வளவு பணிவும் குனிவும் இருக்கு தெரியுமாப்பா?

ஆனா ஒண்ணு தம்பிங்க, இப்படி பணிந்து, திட்டு வாங்கி வாங்கி, இப்பெல்லாம் யாருக்கிட்டயும் திட்டுவாங்காட்டி அன்னைக்கு தூக்கமே வர மாட்டிக்குது. சில சமயம் விடியக்காலை மூணு மணிக்கெல்லாம் யாராவது ராங் நம்பருக்கு போன் பண்ணி, 'ஹலோ பிரபா ஒயின்ஸ் ஓனரா?'ன்னு கேட்டாவது ரெண்டு திட்டு வாங்கிக்கிறேன். பாருங்க தம்பிங்க, நம்ம தொழில்ல திட்டு வாங்குறது, லட்டு சாப்பிடுற மாதிரி. நான் சொன்ன மேட்டரையெல்லாம் மனசுல வச்சுக்கிட்டு நடந்தா, ஓராண்டு அல்லா நூறாண்டும் நீங்க தான் கன்னட முதல்வர்"

No comments:

Post a Comment