Tuesday, August 14, 2012

பணம்.! படம்.!

மதிப்பிற்குரிய மத்திய சர்க்கார், ரூபாய் நோட்டுகளில் காந்தி தாத்தா படத்துக்கு பதிலா வேறு சில தலைவர்கள் படத்தையும் அச்சடிக்கலாம் என்று முடி செய்திருக்கிறார்களாம். பாவம் அவரும் எத்தனை நாள் தான் நம்ம கையில கசங்கி சாவாரு? அட அட்லீஸ்ட் பாக்கெட்குள்ள பேச்சு துணைக்காவது காந்தி தாதாவுக்கு ஆள் வேணாம். ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுகளை பார்த்தே பல மாசமாயிடுச்சு, இது யாரு படம் அச்சடிச்சு இருந்தான் என்னாங்கிற உங்க ஆதங்கம் புரியுது. அதுக்காக மத்திய சர்க்காருக்கு ஐடியா சொல்ற வேலைய நாம நிறுத்தலாமா? அதான் நம்மால முடிஞ்ச சில ஐடியாக்களை தெளிச்சு விடலாம்னு இருக்கேன். அம்மா படத்த போடலாம் தான், ஆனா கூடவே சின்னாம்மா போட்டோவையும் போடணும், அது சரி வராது, ஒரு ஆள் தான் அலவுடாம். இந்த அமைச்சர்கள் போட்டோவோ போடலாம்னு பார்த்தா எல்லாம் குனிஞ்ச போட்டோவா, இல்லாட்டி கை கட்டி வாய் பொத்தின போட்டோவா இருக்கு, அதும் சரி வராது. டி.ஆர் படத்த போடலாம்ன்னு சொல்ல வந்தா, அவரு ஷேவ் பண்ணி பளிச்சுன்னு இருக்கிற ஒத்த பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கூட கிடைக்கல. அனுஷ்கா போட்டோவ சிபாரிசு பண்ணலாம்னு பார்த்தா, அப்புறம் ஒரு பய பணத்த பர்ஸ விட்டு வெளியே எடுக்க மாட்டானுங்க. கேப்டன் போட்டோவ போடலாம், ஆனா எல்லாமே போலீஸ் யூனிபார்ம் மேல முட்டி வரை ரெயின் கோட் போட்ட படமாத்தான் இருக்கு. திரிஷா, தமன்னா போட்டோ போட்டா கவர்ச்சியா இருக்கும், ஆனா எல்லாமே அவங்க பெட்டிகோட் போட்டா காஸ்டியுமா தான் இருக்கு. மக்களுக்கு புரட்சி சித்தாந்தம் சொல்ற பிரபு சார் போட்டோ போட இடம் பத்தாது. கமல் சார் படத்த போடலாம், ஆனா பொண்ணுங்க கிஸ் பண்ணியே நோட்ட ஈரம் பண்ணிடுவாங்க. ரஜினி சார் போட்டோ கிட்டதட்ட காந்தி தாத்தா மாதிரிதான், பெரிய வித்தியாசமில்லை. ராமதாஸ் அண்ணன் போட்டோவ போட்டா, ஒயின்ஸ் கடையில செல்லாது. பேசாம, எவன் கைக்கு பணம் போகுதோ அவனோட பொண்டாட்டி போட்டோ தெரியுற மாதிரி ஒரு டெக்னாலஜி கண்டுப்பிடிச்சுட்டா, ஒருத்தனுக்கும் பணம் சேர்த்தனும் என்கிற ஆசையே இருக்காது. நாட்டுல பணம் புழக்கமும் குறையாது. அடபோங்கப்பா, கள்ளுண்ணாமை போதித்த காந்தியின் படம் போட்டு நோட்டுகள் அதிகமாய் புழங்குவதே டாஸ்மாக் கல்லாவில் தான். இதுல யாரு படத்த போட்டா என்ன?

No comments:

Post a Comment