மாத்துறோம், எல்லாத்தையும் மாத்தறோம், தமிழ் சினிமால டான்'ன்னு சொன்னாலே அல்டிமேட் ஸ்டார் மட்டும் தானா? டான் என்றாலே கோட்டும் shoot 'ம் தானே, சாரி கோட்டும் சூட்டும் தானா? கூலிங் கிளாஸ் போட்டாத்தான் டானா? மாத்துறோம், புரட்டி போடுறோம், புதுசு புதுசா டான்கள இறக்குறோம்.
டான் டி.ஆர் :
பில்லா 3'ல டி.ஆர் தான் டான், சாதா டான் இல்ல, 'டண்டணக்கா ஏய் டனக்குனக்கா' டான். ஆப்ரிக்கா கண்டத்து அங்கோலா தேசத்தில் இருந்து இந்தியா வந்து கடலை மிட்டாய் முதல் கண்ணீர் துடைக்கும் கர்சீப் வரை கடத்தி உலகை கலங்கடிக்கும் டானாக உருவாகும் கதை. "என் வாழ்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியும் நானா வளர்த்துனதுடா"ன்னு தாடிய தடவிகிட்டே பன்ச் பேசுனா தியேட்டரே அதிராது?
டான் கிராமராஜன் :
புரட்டி போடுறோம். டான்னு இருந்தாலே கோட்டு தான் போடணுமா? ஏன் டவுசர் துண்டோட இருக்கக்கூடாதா? டான் என்றாலே அடியாள் தான் வளர்த்தனுமா? ஏன் ஆடு, மாடெல்லாம் வளர்த்த கூடாதா? மாத்தறோம், எல்லாத்தையும் மாத்தறோம். நம்ம டான், கன்னுக்குட்டி வளர்த்தறாரு. "ராஜன் கிராமராஜன்"னு பேர சொல்றப்பாவே சும்மா தியேட்டர் 9.6 ரிக்டர் அளவுல ஆடாது? துப்பாக்கி குண்ட வேஸ்ட் பண்ணாம தோளில் துண்ட போட்டுக்கிட்டு லிப்ஸ்டிக் உதடால பாடியே கொல்றாரு டான். புண்ணாக்கு முதல் பால் சொம்பு வரை எல்லா சாமானங்களையும் தலையில வச்சிருக்கிற கரகத்துல கடத்துறாரு. படத்து பட்ஜெட்டுல முக்கால்வாசி பவுடர் செலவுக்கு போறது தான் சின்ன குறை.
டான் ராஜ்கிரண் :
மாத்தி யோசி மாமா மாத்தி யோசி, டவுசர் போட்ட கிராமராஜனே டான இருக்கிறப்போ, பட்டாப்பட்டி போட்டு மேல வேட்டிய தூக்கி கட்டிய ராஜ்கிரண் டானா இருக்கப்படாதா? வழக்கமா ஸ்காட்ச் விஸ்கி குடிக்கிற டான நாம நாட்டுசரக்கு குடிக்க வைக்கறோம். கூலிங் கிளாச கழட்டி விட்டுட்டு சிவப்பு கண்ணால முறைக்க வைக்கறோம். மூணு ஊரு சாப்பிட வச்சிருக்கிற கறிசோற பெரிய வாழை இலையில போட்டு திங்க விடுறப்போ டயலாக் "ஆசை இல்ல அண்ணாச்சி, பசி'ன்னு பில்லா 2 டயலாக்க உள்ளார விடுறோம். துப்பாக்கிய தூரபோட்டுட்டு ஒவ்வொரு வில்லனையும் தூக்கி புடிச்சு தன் தொடையில அடிச்சே கொல்றாரு டான். கள்ளச்சாராயம் முதல் நல்ல சாராயம் வரை நல்லி எலும்புக்குள்ள வச்ச கடத்துறாரு டான்.
டான் வினுசக்கரவர்த்தி :
டான் என்றாலே போலீஸ் பஞ்சாயத்துல சிக்குறவரு தானா? பதினெட்டு பட்டிக்கு பஞ்சாயத்து பண்றவரா இருக்க கூடாதா? உடைக்கிறோம், வழக்கத்தை உடைக்கிறோம். வயித்துல வேட்டி கட்டி, பச்ச பெல்ட் போட்டு, மார்ல சந்தானம் பூசுன பக்கா கலக்கல் டானா வராரு நம்ம வினுசக்கரவர்த்தி. ஓப்பனிங் சீன்ல "என்ன எழவுடா இது?'னு பன்ச் விட்டுகிட்டே கூட்டுவண்டில இருந்து இறங்கறாரு. அஜித் சொல்ற "சாவு இருக்கிற வரை ஆயுதத்துக்கு மார்க்கெட் இருக்கும்'ங்கிற டயலாக்க இவரு சொன்னா அனல் பறக்காது? வில்லன்களை சுட்டு கொல்றது சாதா டான், வெத்தலை சாற துப்பி கொல்றது நம்ம பஞ்சாயத்து டான்.
டான் லூஸ்மோகன் :
"ஞிய்... நைனா மை நேம் இஸ் பில்லா, நாலு ஃபுல்லா ஞ்யி, நைட்டு அடிச்சாலே இருக்கும் நல்லா ஞ்ய்யா"ன்னு ஒவ்வொருத்தர் காது பக்கமும் வந்து பாடினா என்ன கெத்தா இருக்கும். நடிகர் லூஸ்மோகன் தான் இந்தியாவின் மோசட் வான்டட் டான். சிங்கப்பூர், பர்மா, மலேசியா, தாய்லாந்துனு பயோரியா பல்பொடி விக்கிற நாடுகளில் இருந்தெல்லாம் வர ஆளுங்களுக்கு புரிஞ்ச மொழில பேசும் தகுதியுள்ள ஒரே டான். கருப்பு கோட்டுல இந்த பக்கம் நமிதாவும் அந்தபக்கம் நயன்தாராவும்னு வந்தா எப்படி இருக்கும்னு நீங்களே கற்பனை பண்ணிக்குங்க, இன்னா நான் சொய்றது?
No comments:
Post a Comment